Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

3 நாட்களுக்கு.. பொளந்து எடுக்க போகும் மழை.. நாளை பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறையா? என்ன நடக்கும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உள்ளிட்ட வடதமிழ்நாடு மாவட்டங்களில் தொடங்கி உள்ள மழை காரணமாக நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் நிலை ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னை உள்ளிட்ட பல்வேறு வடதமிழ்நாடு மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கி உள்ளது. இத்தனை நாட்களாக கடுமையாக அடித்து வந்த வெயிலுக்கு இடையில் திடீரென மழை பெய்ய தொடங்கி உள்ளது.

கடந்த மாதம் 24ம் தேதியோடு வெப்ப அலை முடிவிற்கு வந்ததாக வானிலை மையம் கூறியுள்ளது. இனி வெப்பம் படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி இருந்தது. அதோடு 25ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் இந்தியாவில் தென் மேற்கு பருவமழை இன்னும் 2 நாட்களில் தொடங்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

Are schools going to closed again due to heavu rainy weather in Chennai and Tamil Nadu?

அதன்பின் ஜூன் 4ம் தேதி தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கும் என்றும் இந்திய வானிலை மையம் அறிவித்தது. ஆனால் நேற்று வரை சென்னையில் வெப்ப அலையும் முடியவில்லை. தென்மேற்கு பருவமழையும் தொடங்கவில்லை. வெயிலும் குறையவில்லை.

இதனால் மக்கள் மிக கடுமையாக அவதிப்பட்டனர். கோடை மழை பெய்வதற்கு பதிலாக தமிழ்நாட்டில் தொடர்ந்து வெயில் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி நேற்று வரை வெப்பநிலை பதிவானது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 95 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றது. சென்னையிலும் 95 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது.

இந்தியாவின் பல பகுதிகளை இந்த வெப்ப அலை தாக்கி மக்களை கடுமையாக அவதிக்கு உள்ளாக்கியது. இதன் மூலம் வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ் முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரை உயர்ந்து மக்களை சிரமப்பட வைத்தது. . சில இடங்களில் 5 டிகிரி செல்ஸியஸ் வரை கூட வெப்பநிலை உயர்ந்தது.

சென்னையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. அதிலும் மாலை 6 மணி வரை கூட வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்ஸியஸ் என்ற நிலையில் உள்ளது.

சென்னையில் ஏற்பட்ட கோடைகாலங்களில் மிக மோசமான ஒரு கோடை காலமாக இந்த மாதம் பார்க்கப்படுகிறது. இருந்த மாத தொடக்கத்தில் மழை பெய்த நிலையில் மீண்டும் சென்னையில் வெயில் அடித்து வந்தது.

இந்த நிலையில்தான் சென்னையில் தற்போது திடீரென மழை பெய்ய தொடங்கி உள்ளது. அதேபோல் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர் போன்ற வடமாவட்டங்களில் அடுத்தடுத்து மழை பெய்து வருகிறது.

சென்னை மழை விடுமுறை: அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையமும் கூறியுள்ளது. இந்த நிலையில் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் நிலை ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 12ம் தேதி 6-12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டது. 1-5ம் வகுப்புகளுக்கு 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. 1ம் தேதியில் இருந்து 7ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்ட பள்ளிகள் அதன்பின் மீண்டும் 12, 14 தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

கடும் வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளி போன நிலையில் மீண்டும் நாளை முதல் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் நிலை ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

என்ன சொல்கிறார்?: இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளுடன் விசாரணை செய்ததில், பள்ளிகளுக்கு விடுமுறை விட வாய்ப்பு இல்லை. மிக அதிக மழை இன்று இரவு பெய்து நாளை சாலைகளில் தண்ணீர் இருந்தால். அல்லது நாளை காலை மிக கனமழை பெய்தால் விடுமுறை பற்றி முடிவு எடுக்கப்படும்.

அதுவும் மாவட்ட ஆட்சியர்கள்தான் முடிவு எடுப்பார்கள். இப்போதைக்கு விடுமுறை பற்றி முன் அறிவிப்பு இருக்காது. ஏற்கனவே விடப்பட்ட விடுமுறைகளை கணக்கில் வைத்து சனிக்கிழமைகளில் கூடுதல் வகுப்பு நடத்த முடிவு செய்துள்ளோம் என்று கூறி உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+