"பச்சைப்பொய்".. எடப்பாடி மிஸ் பண்ணிட்டாரோ.. 400 கோடியை விடுங்க.. திமிறியெழுந்த திமுக "எடைத்தேர்தல்"
திமுக - காங்கிரஸ் வெற்றிக்கு பிரதான காரணமே பணப்பட்டுவாடா மட்டும்தானா என்ற கேள்வி எழுகிறது
சென்னை: ஆளும் கட்சி என்பதால்தான், இடைத்தேர்தலில் திமுக - கூட்டணியால் வெற்றி பெற முடிந்ததா? அல்லது எதிர்க்கட்சிகள் சொல்லும் பணப்பட்டுவாடாதான் அபார வெற்றிக்கு காரணமாக அமைந்ததா? உண்மையிலேயே ஈரோடு தேர்தல் வெற்றி என்பது திமுக கூட்டணிக்கு எப்படி சாத்தியமானது?
இந்த முறை இடைதேர்தலில் திமுக கூட்டணி பெற்ற வாக்கு வித்தியாசம் அபாரமானது. இதற்கு முன்பு காங்கிரஸ் வேட்பாளர் யாருமே இந்த அளவுக்கான பெரிய வாக்குகளை இதற்கு முன்பு பெற்றதில்லை.
மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இந்த முறை பெற்றிருக்கும் வாக்குகள் 1 லட்சத்து 10 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ளார்.. அதாவது 64.58 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளார்..

வித்தியாச லீடர்
இந்த அபார வெற்றிக்கு காரணம், ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் மீதான அனுதாப ஓட்டுக்கள் என்கிறது ஒரு தரப்பு.. பணப்பட்டுவாடா என்கிறது மற்றொரு தரப்பு.. இந்த வெற்றிக்கு காரணம் ஆளும் கட்சியின் நல்லாட்சி என்கிறது இன்னொரு தரப்பு.. ஆனால், இந்த அசுர வெற்றி எப்படி சாத்தியமானது? உண்மையை சொல்லப்போனால், மறைந்த திருமகன் ஈவெராவுக்கு தொகுதியில் இருந்த செல்வாக்குதான் முதல் காரணம் என்கிறார்கள். திருமகனை பொறுத்தவரை, தொகுதி மக்களிடம் நெருங்கி வந்திருக்கிறார்.. அதிலும், சிறுபான்மையினரிடம் நல்ல பெயரை சம்பாதித்து வைத்திருக்கிறார்..

நம்பர் 1
ஒரு இளம் அரசியல்வாதியாக, வித்தியாசமான அரசியல்வாதியாக, மக்களிடம் பெற்ற மதிப்பு இதற்கெல்லாம் முதல் காரணம் என்கிறார்கள்.. இதில், ஈவிகேஎஸ்ஸை பொறுத்தவரை, காரசாரமாக பேசக்கூடியவர்.. யாருக்கும் பயப்படாமல், துணிச்சலாவும் பேசிவிடக்கூடியவர்.. அதனாலேயே பலமுறை சர்ச்சைகளும், விமர்சனங்களும் இளங்கோவன் மீது அவ்வப்போது எழுந்தபடியே இருக்கும்.. ஆனால், மிகப்பெரிய அந்தஸ்தில் இருப்பவர்.. இன்னும் சொல்லப்போனால், ஊழல் கறை படியாதவர்.. இதைதான் மக்கள் பிரதானமாக கவனித்துள்ளனர். ஒருபக்கம் திருமகன் மீதான அனுதாபம் இருந்தாலும், மறுபக்கம் ஈவிகேஎஸ் மீதான நன்மதிப்பும் சேர்ந்தே வெற்றிக்கு வழிகோலியதாக சொல்கிறார்கள்.

புகைச்சல்கள்
இரண்டாவதாக, திமுக - காங்கிரஸ் கூட்டணியின் நட்புறவும் அடுத்த காரணமாக அமைந்தது. ஆரம்பத்தில், ஈரோடு கிழக்கு தொகுதி பிரச்சாரங்களில் திமுக தரப்பிலிருந்தே சில புகைச்சல்கள் கிளம்பின.. கடந்த 10 நாட்களுக்கு முன்புகூட, நம்முடைய ஒன் இந்தியா தமிழிலும் பிரத்யேகமாக இதுகுறித்து செய்திகளை நாம் வெளியிட்டிருந்தோம்.. அதாவது, "காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கேஎஸ் அழகிரிக்கோ கொஞ்சம் கூட பிரச்சாரத்தில் அக்கறையில்லை. இளங்கோவனுக்காக தேர்தல் பணிகளில் அழகிரி ஆர்வம் காட்டவில்லை.. ஒரே ஒரு முறை இளங்கோவனை சந்தித்துவிட்டு சென்றதோடு சரி... தொகுதி பக்கமே அழகிரி வரவில்லை. காங்கிரஸை ஜெயிக்க வைக்க திமுகவுக்கு இருக்கும் அக்கறையிலும் ஈடுபாட்டிலும் 1 சதவீதம் கூட அழகிரிக்கு இல்லை" என்றெல்லாம் திமுக நிர்வாகிகள் சிலர் குற்றம் சாட்டவே செய்தார்களாம்.. இந்த ஆதங்கத்தை அமைச்சர்களிடமும் தெரிவித்திருக்கின்றனர். தொகுதியில் இருக்கும் காங்கிரஸ் காரர்களிடமும் இந்த புகைச்சல் இருந்ததாம்.

அறிவாலயம்
ஆனால், உண்மை அது கிடையாது.. இதுகுறித்து அறிவாலயத் தரப்பே நம்மிடம் சில விஷயங்களை பகிர்ந்திருந்தது.. "காங்கிரசை நாங்கள் டிஸ்டர்ப் பண்ணவிரும்பவில்லை. கூட்டணி தர்மத்தை மதித்து, இளங்கோவனை வெற்றிப்பெற வைப்பது திமுகவின் கடமை. அதற்காக அமைச்சர்களும் மாவட்ட கழகத்தினரும் கடுமையாக பணி செய்து வருகின்றனர். அதனால், காங்கிரஸ் தலைவர்களை பற்றி கவலைப்படவில்லை" என்றார்கள். இப்படி காங்கிரஸ் - திமுக என இரு கட்சிகளுமே அடிப்படை புரிதலுடன் தொகுதியில் பிரச்சாரத்தை மேற்கொண்டது வெற்றிக்கு இன்னொரு காரணமாக பார்க்கப்பட்டது.

எடைத்தேர்தல்
மூன்றாவதாக, திமுகவின் தேர்தல் வியூகம் இந்த முறை பலரையும் அசரடித்துவிட்டது.. இந்த ஒன்றரை வருட காலமாகவே, திமுக அரசு மீதான எதிர்க்கட்சிகளின் தொடர் விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள், மக்களிடம் எழுந்ததாக கூறப்படும் அதிருப்திகள் போன்றவற்றை களைய வேண்டிய நெருக்கடி அரசுக்கு இந்த ஒன்றரை வருட காலத்துக்குள்ளேயே வந்துவிட்டது.. இத்தகைய பிம்பங்களை தகர்க்கவும், வரப்போகும் எம்பி தேர்தலுக்கான முன்னோட்டமாகவும் இந்த தேர்தலை களவாட முடிவு செய்தது திமுக மேலிடம்.. அதனால்தான், இந்த தொகுதியின் தேர்தலை ஒரு இடைத்தேர்தலை போலவே அது நினைக்கவில்லை.. தங்கள் கவுரவ பிரச்சனையாக நினைத்தது. ஈவிகேஎஸ் சென்னையில் இருந்தபோதிலும்கூட, வேட்பாளரே இல்லாமல் தாங்களாகவே களமிறங்கி பிரச்சாரத்தை துவங்கியது.

செங்குந்த முதலியார்கள்
அதன்படி, தொகுதியில் உள்ள 2,28,746 மொத்த வாக்காளர்களில் எந்தெந்த சமூகத்தினர் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்? எத்தனை சதவீதம் பேர் இருக்கிறார்கள்? என்ற லிஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது.. இதில், முதலியார்கள் 80 ஆயிரத்து 142 பேர்... அதாவது 35 சதவீதம் பேர் இருக்கிறார்கள்.. அடுத்ததாக இஸ்லாமியர்கள் 62 ஆயிரத்து 126 பேர். அதாவது 27.15 சதவீதம் உள்ளனர்.. இதற்கு அடுத்ததாக பிள்ளைமார் 19 ஆயிரத்து 166 பேர், அதாவது 8.37 சதவீதம் உள்ளனர்.. தலித்துக்கள் 14 ஆயிரத்து 360 பேர். அதாவது 6.28 சதவீதம் இருக்கிறர்கள்.. கிறிஸ்தவர்கள் 12 ஆயிரத்து 650 பேர், குறிப்பாக 5.53 சதவீதம் பேர் உள்ளனர். வெள்ளாள கவுண்டர்கள் 9 ஆயிரத்து 450 பேர் என 4.13 சதவீதமும், நாயக்கர் 8 ஆயிரத்து 620 பேர் என 3.77 சதவீதமும் உள்ளனர்.

கிறிஸ்தவர்கள்
இவர்களுக்கு அடுத்தப்படியாக வட இந்தியர்கள், பிராமணர்கள், நாடார்கள், தேவர்கள், போயர், வன்னியர், விஸ்வகர்மா, செட்டியார்கள் ஆகிய சமூகத்தினர் சராசரியாக 1 சதவீதத்தில் இருந்து 2 சதவீதம் வரை இருக்கிறார்கள்.. இந்த சதவீதத்தை அடிப்படையாக வைத்தே, முதலியார்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், தலித்துகள் ஆகிய 4 சமூகத்தினர் 73.99 சதவீதம் பேர் இருக்கிறார்கள் என்ற பட்டியல் தயாரானது.. இந்த 73 சதவீதத்தில் 60 சதவீதம் வாக்குகளை பெற வேண்டும் என்பதே திமுக மேலிடம் நிர்ணயித்த இலக்கு.. இதை வைத்துதான், தேர்தல் வியூகம் அடுத்தக்கட்டத்துக்கு நகர்ந்ததாக சொல்கிறார்கள்.

பஞ்சம் பஞ்சம்
அதற்கேற்றபடியே 11 அமைச்சர்கள் கொண்ட குழுவினர் தனித்தனியாக பகுதியை பிரித்து இருக்கிறார்கள்... 3 முதல் 4 வார்டுகளுக்கு ஒரு அமைச்சர் என்ற அடிப்படையில் தேர்தல் பணிகள் ஒதுக்கி தரப்பட்டுள்ளது.. இவர்கள்தான், தங்கள் தொகுதிக்குட்பட்ட வாக்காளர்களை திமுக பக்கம் இழுத்து கொண்டுவரும் வேலையை துரிதப்படுத்தி உள்ளனர்... அதனாலேயே தொகுதி மக்களிடம் நெருங்கியே இருந்து வந்துள்ளனர்.. அதுமட்டுமல்ல, பணத்துக்கும் பஞ்சம் இல்லை, பரிசு பொருட்களுக்கும் பஞ்சம் இல்லை என்பதுபோல் சிலபல தாராளங்களும் தொகுதிக்குள் வாரி இறைக்கப்பட்டதாகவே தெரிகிறது.

மண் கோட்டை
"திமுகவினர் பணநாயகத்தின் மூலம் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற வைத்துள்ளனர். இந்த வெற்றி குறித்து பெருமை கொள்வது திமுகவுக்கு அழகல்ல என்று எடப்பாடி பழனிசாமி பகிரங்கமாக குற்றம்சாட்டி வருகிறார்.. அதுமட்டுமல்ல, "இதுக்கு முன்பு எந்த தேர்தலிலும் எங்களை பார்த்து திமுக பயந்தது கிடையாது.. 350 கோடி செலவு செய்து போலியான வெற்றியை திமுக பெற்றுள்ளது. இதை எல்லாம் தாண்டி 45 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளோம். இது தோல்விகரமான வெற்றி தான். நாங்கள் தான் உண்மையாக வெற்றியாளர்களே தவிர, திமுக கிடையாது" என்று வெற்றிகரமான தோல்வி குறித்து மாஜி அமைச்சர் ஜெயக்குமாரும் விளக்கம் தந்து வருகிறார்.

ஆசிட் டெஸ்ட்
அப்படியே பணப்பட்டுவாடாதான் திமுக கூட்டணி வெற்றிக்கு காரணம் என்றே வைத்துக் கொண்டாலும், அதிமுகவின் கோட்டை என்பதே "கொங்கு மண்டலம்" என்ற கூற்றெல்லாம் பொய்யா? கொங்கு மண்டலத்தில் பாஜக செல்வாக்கு பெற்றதாக சொல்லப்பட்டு வருவதெல்லாம்கூட பொய்யா? பணம் தந்துவிட்டால் மட்டும், வாக்காளர்கள் மனம் மாறி ஓட்டுப்போட்டுவிடுவார்களா? அப்படியானால், அதிமுக - பாஜக என்ற இரு கட்சிகளின் வாக்குகளும் இந்த முறை எங்கே போனது? என்பன போன்ற கேள்விகளும் அதிரடியாக வெடித்து கிளம்பி உள்ளன.. ஆக, எப்படி பார்த்தாலும் நடந்து முடிந்தது, திமுகவுக்கான இடைத்தேர்தல் அல்ல, அது ஒரு "எடைத்தேர்தல்" என்று கருதப்படுகிறது.. அப்படிப்பட்ட தேர்தலில் முறைப்படி பரீட்சையும் எழுதி வெற்றியும் பெற்றுள்ளது முதல்வர் ஸ்டாலினின் அரசு என்றே பார்க்கப்பட்டும் வருகிறது..!!
-
ராகுல் காந்தி கடும் அதிருப்தி.. திமுக அழைத்தும் செவிசாய்க்காத காங்கிரஸ் மேலிடம்.. என்ன நடந்தது? -
அவசரமாக தொகுதி மறுவரையறை.. தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்.. பழைய திமுகவை பார்ப்பீங்க.. ஸ்டாலின் எச்சரிக்கை! -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
5 பவுன் தங்கம்.. ஒரு லட்சம் ரொக்கம்! பரிசு மழை அறிவித்த ஓபிஎஸ்.. போடி தொகுதி திமுகவினர் உற்சாகம் -
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா? -
“வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை அவதூறாகப் பேசி மிரட்டி வருகின்றனர்”- விஜய் பரபரப்பு குற்றச்சாட்டு -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
ரூ.8000 கூப்பன் கொடுத்து.. வாக்கு கேட்ட திமுக வேட்பாளர் செந்தில்! கொந்தளிக்கும் அதிமுக -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
தேர்தல் நேரத்தில் கல்லா கட்டும் 'குட்டி குட்டி' நிறுவனங்கள்.. சத்தமே இல்லாமல் நடக்கும் மெகா பிஸ்னஸ்!












Click it and Unblock the Notifications