"பூனைக்குட்டி" வருது.. ஓங்கியடிக்கும் பாஜக.. சீறும் எடப்பாடி..திமிறிய பாமக.. "அவரே" போன் பண்ணிட்டாரு
சென்னை: விரைவில் எம்பி தேர்தல் வரப்போகிறது.. இதற்கு தேசிய கட்சிகள் தயாராகி வருகின்றன.. தமிழக அரசியல் கட்சிகளும், எம்பி தேர்தலுக்கான களப்பணியை துவங்கிவிட்டனர். இதனால் தமிழக களமே அனலடிக்க துவங்கி உள்ளது.
திமுக கூட்டணியை பொறுத்தவரை ஏற்கனவே பலம் வாய்ந்து காணப்படுகிறது.. இதில் இன்னும் சில கட்சிகள் கூட்டணிக்குள் இணையலாம் என்கிறார்கள். ஆனால், அது எந்தெந்த கட்சிகள் என்று இதுவரை தெரியவில்லை. மநீம என்ன செய்ய போகிறது? தேமுதிக யாருடன் செல்ல போகிறது என்பதும் இதுவரை உறுதியாகவில்லை.

அதேபோல, மெகா கூட்டணியை அமைத்து போட்டியிடுவோம் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்து பல மாதங்கள் ஆகின்றன.. இன்னும் கூட்டணியில் யார் யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை...
அதிமுக - பாஜக கூட்டணி மட்டுமே உறுதியாகி உள்ளது.. அதுகூட மேலிடத்தில் இருந்து மட்டுமே, உறுதி வெளிப்படுத்தப்பட்டுள்ளதே தவிர, மாநில அளவில் வெளிப்படையாக யாரும் பேசவில்லை.. இன்னும் சொல்லப்போனால், வார்த்தை போர்கள் வலுப்பெற்று வருகின்றன.
செல்லூர் ராஜூ: மூத்த தலைவர் செல்லூர் ராஜூவுக்கு, பாஜக மாநில தலைவர் நேற்றைய தினம் தந்திருந்த பதிலடியை பார்த்தால், பாஜக - அதிமுக கூட்டணி சாத்தியமாகுமா? என்ற சந்தேகமே அதிகரிக்கிறது.
இதில், பாமகவின் கூட்டணி நிலைப்பாடு என்ன என்று தெரியவில்லை.. திமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாக சொன்னார்கள்.. ஆனால், நெய்வேயலியில் ஒரே நாள் போராட்டத்தில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை திரட்டி, ஒட்டுமொத்த தமிழகத்தையும் கலக்கிவிட்டது பாமக. அந்தவகையில், பாமகவுக்கான பலம் வடமாவட்டங்களில் இன்னமும் அதிகரித்துள்ளதாகவே கணிக்கப்படுகிறது. ஆக, நடந்து முடிந்த நெய்வேலி ஆர்ப்பாட்டத்தை பார்த்தால், திமுகதான் முதல் குறி போல தெரிகிறது.
அப்படியானால், அதிமுகவுடன் கூட்டணி வைக்குமோ? என்ற அடுத்த சந்தேகம் கிளம்புகிறது.. இதுவரை வெளிப்படையான ஆதரவும் தெரிவிக்காத சூழலில், குழப்பமே மிஞ்சுகிறது. ஆனால், பாஜகவுடன் எப்போதும்போல இணக்கமான போக்கை பாமக கொண்டுள்ளதாக சொல்கிறார்கள்..
ஜிகே வாசன்: சில நாட்களுக்கு முன்பு நமக்கு ஒரு பிரத்யேகமான தகவல் கிடைத்தது. அதாவது, நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து டாக்டர் அன்புமணி, ஜி.கே.வாசன் இருவரையும் அமைச்சராக்கலாமா என்ற யோசனை டெல்லிக்கு இருக்கிறதாம்..
அதாவது, அதிமுகவை பலவீனப்படுத்தி பாஜக தலைமையிலான அணியை பலப்படுத்தும் ஒருவகை திட்டத்தில், அன்புமணி, வாசன் ஆகியோரை மத்திய அமைச்சராக்கும் யோசனையை மேலிட பாஜக கையில் எடுத்துள்ளதாக சொன்னார்கள். கடைசியில் அந்த தகவல் என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை.
பாமக - ஓபிஎஸ்: இப்படிப்பட்ட சூழலில், புதுதகவல் ஒன்று கிளம்பி உள்ளது.. அதிமுகவுடனும் கூட்டணி இல்லாமல், திமுகவுடனும் கூட்டணி இல்லாமல், அமமுகவுடன் பாமக தனி அணி அமைக்க போவதாக சொல்கிறார்கள்.. ஓபிஎஸ்ஸிடம், பாமக மேலிட தரப்பு பேச்சு நடத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது...
ஓபிஎஸ்ஸை பொறுத்தவரை, அவர் பாஜகவுடன் கூட்டணி வைக்க போகிறாரா? இல்லையா? என்றே தெரியவில்லை. ஒருவேளை ஓபிஎஸ், டிடிவி தினகரன் விஷயத்தில் வழக்கம்போல் எடப்பாடி பழனிசாமி பிடிவாதம் பிடித்தால், எடப்பாடி பக்கம் பாஜக சாய்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லையாம். அதனால்தான், ஓபிஎஸ் + டிடிவி தினகரன் தரப்பு தங்கள் அணியை வலுப்படுத்த மும்முரமாகி வருகிறதாம். இந்த அணியில்தான், பாமகவை இணைப்பது குறித்த பேச்சும் நடந்துள்ளதாக சொல்கிறார்கள்.
டாக்டர் ராமதாஸ்:சமீபத்தில், டாக்டர் ராமதாஸ் பிறந்த நாளை ஒட்டி, அவருக்கு ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.. அதுமட்டுமல்ல, நெய்வேலி மேட்டரில் பாமகவுக்கு ஆதரவாக, தினகரன் அறிக்கை வெளியிட்டதையும் இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டி உள்ளது. இதனிடையே, போன் மூலமும் டாக்டர் ஐயாவிடம், ஓபிஎஸ் பேசியதாக சொல்கிறார்கள்.. அதுகுறித்து சிலதகவலும் கசிந்துள்ளது.
அதாவது, "கடந்த எம்பி தேர்தலில் அத்தனை கட்சிகள் கூட்டணியில் சேர்ந்தும்கூட 53 சதவீதம் ஓட்டுகள் பெற முடிந்தது. இப்போது அதிமுக பிரிந்திருக்கும்போது, எப்படி வெற்றி பெற முடியும்? மேற்கு மாவட்டங்களில், எங்கள் ஆதரவு இல்லாமல் வெற்றி பெற முடியாது என்பதை மாநாட்டில் நிரூபிப்போம். நாம் இணைந்து செயல்படுவதற்கு, வன்னியர்களுக்கான, 10.5 உள் இட ஒதுக்கீடு பிரச்சனை தடையாக இருக்காது.
அன்புமணி ராமதாஸ்: வட மாவட்டங்களில் வன்னியர்கள், தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் தான்.. கடந்த தேர்தல்களில், தர்மபுரியில் அன்புமணியும், தேனி தொகுதியில் ரவீந்திரநாத்தும் சொந்த செல்வாக்கில் வெற்றி பெற்று பலத்தை நிரூபித்து உள்ளதால், அதுவே நமக்கு பிளஸ் பாயிண்ட்தான்..
ஒருவேளை, கடைசி நேரத்தில், அதிமுக - பாஜக கூட்டணியில், நம்முடைய அணியை இணைக்க விரும்பினாலும், தொகுதி பங்கீட்டில், பாதிக்கு பாதி என்ற பார்முலாவை உருவாக்கலாம் என்றெல்லாம் ஓபிஎஸ் சொன்னாராம். ஆனால், இதற்கு பாமக தரப்பு என்ன பதில் சொன்னது என்று தெரியவில்லை.
தைலாபுரம்: இன்னும் தேர்தலுக்கு டைம் இருக்கிறது.. எந்த கட்சியுமே வெளிப்படையாக பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. அதற்குள் இப்படி எத்தனையோ தகவல்கள் இணையத்தில் வட்டமடித்து வந்தாலும், ஒவ்வொரு முறை தேர்தலிலும், வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் பெரும்பங்கு வகித்து வரும் பாமக என்ன முடிவு எடுக்க போகிறது என்று தெரியவில்லை. தைலாபுரம் எடுக்க போகும் முடிவில்தான், தமிழக அரசியல் கூட்டணியே அதிர போகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications