வச்ச குறி தப்பல.. ஆம்ஸ்ட்ராங்கை சாய்த்தது அவங்களா? அதென்ன பழைய வீடு? பிஎஸ்பி நிர்வாகிகளின் கோரிக்கை
சென்னை: பகுஜன் சமாஜ் ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலகத்தில் வைக்க திட்டமிடப்பட்டு வருகிறது.. இதனிடையே இன்னொரு புதிய கோரிக்கையும் எழுந்திருக்கிறது.
சென்னையில் நேற்றிரவு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இந்த கொலை வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்த விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

உளவுத்துறை: இந்த கொலை குறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் சொல்லும்போது, "கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத்துறையும் ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவும் 3 தடவை எச்சரிக்கை விட்டிருந்தது. அதுதொடர்பாக அவரை அலெர்ட்டாக இருக்கும்படியும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் கடந்த சில நாட்களாகவே, ஆம்ஸ்ட்ராங்கை ஒரு டீம் கண்காணித்து வந்திருக்கிறது. அந்த டீம்தான் இந்தக் கொடூர கொலையை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது..
தலையீடு: அதுமட்டுமல்ல, ஆம்ஸ்ட்ராங், தன்னுடைய கட்சி பணியில் அதிகளவில் ஈடுபட்டு வந்ததுடன், வேறு சில விவகாரங்களிலும் தலையிட்டு வந்திருக்கிறார்.. அதனால் எப்போதுமே அவரைச் சுற்றி ஒரு டீம் இருக்கும்... அந்த டீமில் உள்ளவர்களும்கூட, பலத்த பாதுகாப்புடன்தான் எப்போதுமே இருப்பார்கள். இந்த விவரங்கள் எல்லாமே தெரிந்த ஒரு டீம்தான் ஆம்ஸ்ட்ராங்கைக் கண்காணித்து இந்த கொலையைச் செய்திருக்கிறது.
விரைவில் அனைத்து குற்றவாளிகளையும் பிடித்துவிடுவோம். அவர்களிடம் விசாரணையை நடத்தியபிறகுதான் கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும்" என்கிறார்கள்.
பழைய வீடு: அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஆம்ஸ்ட்ராங் வசித்து வந்தார். பெரம்பூர் வேணுகோபால் சாமி தெருவில் இவருக்கு பழைய வீடு ஒன்று இருந்திருக்கிறது.. அதை இடித்து கட்டுமான பணிகளை ஆம்ஸ்ட்ராங் மேற்கொண்டு வந்திருக்கிறார். தினமும் அந்த பணிகளை பார்வையிடுவதை வழக்கமாகவும் வைத்திருக்கிறார்.. அப்படித்தான் நேற்றிரவும் கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தின் அருகே நின்று, நண்பர்களுடன் ஆம்ஸ்ட்ராங் பேசிக்கொண்டிருந்துள்ளாராம்.
நீண்ட நாட்களாகவே, அவரை தீர்த்துக்கட்ட கொலையாளிகள் திட்டமிட்டு வந்தநிலையில், நேரம்பார்த்து இந்த கொலையை நடத்தியிருப்பாக கூறுகிறார்கள். தற்போது ஆம்ஸ்ட்ராம் உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ரயில்வே மைதானம்: இதனிடையே, அஞ்சலிக்காக ஆம்ஸ்ட்ராங்கின் உடலை ரயில்வே மைதானத்தில் வைக்க வேண்டும் என்று, பிஎஸ்பி நிர்வாகிகள் அனுமதி கேட்டிருந்தனர்.
பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்திலேயே அஞ்சலிக்காக உடலை வைக்க திட்டமிடும் நிலையில் நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளனர்... ஆனால், கட்சி அலுவலகம் சிறிய இடத்தில் இருப்பதால் ரயில்வே மைதானத்தில் அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்க மீண்டும் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே, கட்சி அலுவலகத்தில் உடலை வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றதாம்.
முன்னதாக, அரசு மருத்துவமனை முன்பு, ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட முயன்ற ஆதரவாளர்களை போலீசார் தடுத்ததால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த பொதுவான இடம் வேண்டும் என்று கேட்டு, ஆதரவாளர்கள் போலீசாருடன் வாக்குவாதம் நடத்தினார்கள்.. அப்போது, போலீசார் அமைத்திருந்த தடுப்புகளை உடைத்து விட்டு, ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மறியலுக்கு முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications