கடைசி வரை நம்பினேன்.. பாழான '49 வருட' உழைப்பு.. அதிமுகவை 'அதிர' வைத்த முடிவு - திமுக குஷி
சென்னை: அரசியல் வாழ்க்கை நேர்மை, உழைப்பு என்பதற்கு அப்பாற்பட்டது. இன்னும் சொல்லப்போனால், இங்கு ஹார்ட் ஒர்க்கை விட, ஸ்மார்ட் ஒர்க் தான் செல்லுபடியாகும்.
அந்த வகையில், ஸ்மார்ட் ஒர்க் இல்லாததால், 49 வருடங்களாக அதிமுகவிற்கு உழைத்து வந்த ஒரு பாரம்பரிய அதிமுக குடும்பமே இன்று வேதனையில் உள்ளது.
'குழ செல்லையா' என்ற பெயர் உங்களில் பலருக்கு நினைவில்லாமல் இருக்கலாம். ஆனால், அதிமுகவின் ஒவ்வொரு தொண்டரும் அறிவார்.

ஐந்தாவது நபர்
ஆம்! அ.தி.மு.க தொடங்குவதற்கு முன்பே அ.தி.மு.க... என்று, அதாவது 'அதிருப்தி தி.மு.க' என போஸ்டர் ஒட்டி சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் இந்த குழ செல்லையா. எம்.ஜி.ஆரின் பக்தர், விசுவாசி. பின்னர் எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கிய போது கையெழுத்திட்ட ஐந்தாவது நபர் குழ.செல்லையா. அ.தி.மு.க தொடங்குவதற்கே காரணகர்த்தாவாக என்றால் மிகையாகாது.

அதிமுகவை விதைத்து
பேராவூரணியில் அதிமுகவை விதைத்து, இன்று ஒரு ஆலமரமாக உருவாக்கியவர் குழ.செல்லையா. ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர், ஆட்சி மன்றக்குழு உறுப்பினர், கொறடா என எம்.ஜி.ஆர் காலத்தில் பல முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தவர். அதேசமயம், ஜெயலலிதா தலைமையின் கீழும் மாநில விவசாயப் பிரிவு செயலாளர், மாவட்டச் செயலாளர் என பல்வேறு பதவிகளை வகித்திருக்கிறார்.

பெரும் எதிர்பார்ப்பில்
இவரது மகன் அருள்நம்பி குழ செல்லையா, அ.தி.மு.க-வில் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளராக நேற்று காலை வரை பணியாற்றிய பேராவூரணிகாரர். 96லிருந்து அதிமுகவில் சீட் கேட்டு வந்த அருள்நம்பி, இம்முறை தனக்கு நிச்சயம் சீட் கிடைக்கும் என்று பெரும் எதிர்பார்ப்போடு இருந்தார். ஆனால் முன்னால் எம்.எல்.ஏ-வான திருஞானசம்பந்தம் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இப்படியா ஏமாறுவேன்
இதனால் கடும் அதிர்ச்சிக்கும் மன உளைச்சலைக்கும் ஆளான அருள்நம்பி, இனி இந்த அரசியலும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம். இத்தனை வருடங்கள் கட்சிக்காக உழைத்ததோடு மட்டுமின்றி, உண்மையாக இருந்தேன். பொறுமையாக இருந்தேன். ஆனால், இப்படி ஏமாறுவேன் என்று எதிர்பார்க்கவில்லை என்று ஆதரவாளர்களிடம் தந்து ஆதங்கத்தை கொட்டித் தீர்த்திருக்கிறார்.

மீண்டும் தாய்க் கழகம்
அதன் பிறகு கூட அருள்நம்பி அதிருப்தியை அறிந்த ஓ.பி.எஸ்., 'இரண்டு நாள் காத்திருங்கள், நல்ல செய்தி வரும்' என்று சொன்னதாக தகவல் வெளியானது. ஆனால், சொன்னது போல் எந்த அழைப்பும் வராததால் விரக்தியடைந்த அருள்நம்பி, எந்த கழகத்தில் இருந்து 49 வருடங்களுக்கு முன்பு அதிருப்தி காரணமாக தன் தந்தை வெளியேறினாரோ, அதே திமுக கழகத்தில் மீண்டும் நேற்று தன்னை இணைத்துக் கொண்டார். கிட்டத்தட்ட 49 ஆண்டுகள் மட்டும் உழைத்த குழ செல்லையா குடும்பம் இப்போது திமுகவில் சேர்ந்திருப்பதை பேராவூரணி அதிமுகவினரே மிகவும் வேதனையுடன் பார்க்கின்றனராம்.












Click it and Unblock the Notifications