17வது ஓவரில் நடந்த சம்பவம்.. மொத்த மைதானத்தையும் "ஸ்டன்" ஆக்கிய அஸ்வின்.. மேட்சில் என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகக் கோப்பை டி 20 தொடர் பயிற்சி ஆட்டத்தில் அஸ்வின் சிறப்பாக இன்று பவுலிங் செய்தார்.

உலகக் கோப்பை டி 20 தொடர் தொடங்க உள்ள நிலையில் இந்திய அணி தற்போது பயிற்சி ஆட்டங்களில் ஆடி வருகிறது. முதல் பயிற்சி ஆட்டத்தில் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய அணி வெற்றிபெற்றது.

Ashwin stuns the ground by 3 wickets in the practice match ahead of the world cup t 20 series

அந்த போட்டியில் சேஸிங்கின் போது ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி வென்றது. இந்த நிலையில் இன்று டாஸ் வென்ற இந்திய அணி சேசிங் தேர்வு செய்தது.

பொதுவாக பயிற்சி ஆட்டங்களில் கோலி ஆடுவது கிடையாது. போதுமான ஓய்வு அவசியம் என்பதால் அவர் பயிற்சி ஆட்டங்களில் ஆடுவது கிடையாது. அதேபோல்தான் கடந்த பயிற்சி ஆட்டத்திலும் கோலி ஆடவில்லை. இந்த நிலையில் இன்று நடக்கும் பயிற்சி ஆட்டத்தில் கோலி ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஆடவில்லை. கடந்த போட்டியில் ஆடாத கே. எல் ராகுல் இன்று நடக்கும் போட்டியில் களமிறக்கப்பட்டு உள்ளார்.

ரோஹித், ராகுல் (C), ஹூடா, பந்த், ஹர்திக், கார்த்திக் (WK), அக்சர், ஹர்ஷல், அஷ்வின், புவி மற்றும் அர்ஷ்தீப் ஆகியோர் இன்று ஆடும் இந்திய அணியில் இடம் பிடித்தனர். ஹர்திக் பாண்டியா மீண்டும் அணிக்குள் வந்துள்ளார். அதேபோல் இன்று அஷ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. வெஸ்டர்ன் ஆஸ்திரேலியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் இந்த பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தொடக்கத்தில் இருந்தே பவுலிங்கில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது.

Ashwin stuns the ground by 3 wickets in the practice match ahead of the world cup t 20 series

4 ஓவர்கள் வீசிய ஹர்ஷல் பட்டேல் சிறப்பாக ரன்களை தொடக்கத்தில் கட்டுப்படுத்தினார். கடைசியில் கொஞ்சம் ரன்களை கொடுத்தாலும் விக்கெட்டுகளை எடுத்தார். 33 ரன்களை கொடுத்த அவர் 2 விக்கெட்டுகளை எடுத்தார். இன்னொரு பக்கம் புவனேஷ்வர் குமார் மீண்டும் பார்மிற்கு திரும்பி உள்ளார். வெறும் 15 ரன்கள் மட்டுமே அவர் கொடுத்தார். 2 விக்கெட்டுகளை இதில் அவர் எடுத்தார். ஆனால் இந்த போட்டியில் அசத்தியது என்னவோ அஸ்வின்தான்.

4 ஓவர்கள் வீசிய அஸ்வின் 3 விக்கெட்டுகளை எடுத்தார். 33 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இவர் வீசிய 17வது ஓவர் மொத்த மைதானத்தையும் திரும்பி பார்க்க வைத்தது. வரிசையாக அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்தார். முதல் இரண்டு பந்தில் இரண்டு விக்கெட்டுகளை அஸ்வின் எடுத்தார். ஹாட் டிரிக் எடுக்க வாய்ப்பு இருந்த நிலையில் மூன்றாவது பந்தில் சிங்கிள் சென்றது. இதனால் அந்த வாய்ப்பை அஸ்வின் தவறவிட்டார்.

பின்னர் 4வது பந்தில் மீண்டும் ஒரு விக்கெட்டை அஸ்வின் எடுத்தார். இதன் மூலம் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை அஸ்வின் எடுத்தார். முதலில் ஆஸ்டன் விக்கெட்டை எடுத்தார். அதன்பின் பென்னிங் விக்கெட்டை எடுத்தார். கடைசியில் பாங்க்ராப்ட் விக்கெட்டை எடுத்தார். இவர் அடுத்தடுத்து விக்கெட் எடுத்ததால் மொத்த மைதானமும் ஸ்டன் ஆனது.

Ashwin stuns the ground by 3 wickets in the practice match ahead of the world cup t 20 series

இதன் மூலம் டி 20 உலகக் கோப்பை தொடரில் அஸ்வினுக்கு ஆடும் அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சாஹல் பார்மில் இல்லாத காரணத்தால் இவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+