ரயில்களில் இரவு நேரத்தில் செல்போன் சார்ஜ் போட தடை! இந்திய ரயில்வே மீண்டும் அறிவிப்பது ஏன்?
சென்னை: ரயில்களில் இரவு நேரத்தில் செல்போன், லேப்டாப், டேப், பவர் பேங்க் உள்ளிட்டவைகள் சார்ஜ் போட தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
இது பழைய உத்தரவாச்சே! இதை ஏன் தற்போது விளக்கியுள்ளார்கள் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இதற்கான காரணத்தையும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரயில்களில் முன் பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் ஃபேன், லைட் இருப்பது போல் சார்ஜ் போடும் பிளக் பாயிண்டுகளும் இருக்கும். இதில் செல்போன்கள், மடிக்கணினிகள், டேப், லேப்டாப், பவர் பேங்க், ஏர் டோப்ஸ், ப்ளூடூத் உள்ளிட்டவைகளை சார்ஜ் போட்டுக் கொள்ளலாம்.
இது போல் ஒவ்வொரு கம்பார்ட்மென்ட்களில் ஒவ்வொரு ஜன்னலோர சீட்டுகளிலும் பிளக் பாயிண்ட் இருக்கிறது. அதை பயன்படுத்தி அங்கு அமர்வோர் சார்ஜ் போட்டுக் கொள்ளலாம். இந்த நிலையில் சில சமயம் இரவு நேரங்களில் மின் சாதன பொருட்களுக்கு சார்ஜ் போட்டுவிட்டு பயணிகள் தூங்கிவிடுவதால் அது முழுமையாக சார்ஜ் ஏறிய பிறகும் சார்ஜை அணைக்காமல் விடுவதால் திடீரென மின் கசிவு, ஷார்ட் சர்கியூட் உள்ளிட்ட காரணங்களால் வெடித்து ரயிலில் தீவிபத்து ஏற்படுகிறது.
இது போன்ற அபாயகரமான நிகழ்வுகள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சார்ஜ் போடுவதற்கு நேரக் கட்டுப்பாட்டை இந்திய ரயில்வே கொண்டு வந்தது. அதன்படி ரயிலில் பயணிப்பவர்கள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மட்டுமே செல்போனை சார்ஜ் செய்ய முடியும்.
இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ரயிலில் இருக்கும் பிளக் பாயிண்டுகளை யாரும் பயன்படுத்த முடியாது. அதற்கு மின்சாரம் வராது. இந்த நிலையில் இதுகுறித்து பல முறை அறிவித்தும் தொடர்ந்து இரவு நேரங்களில் பிளக் பாயிண்டுகளில் மின்சார இணைப்பு வருவதில்லை என புகார்கள் எழுந்து வருகின்றன.
இதை கருத்தில் கொண்டு இந்திய ரயில்வே மீண்டும் ஒரு முறை தெளிவுப்படுத்தியுள்ளது.
ரயில்களில் இரவு நேரத்தில் செல்போன் சார்ஜ் போட தடை விதிக்கப்பட்டுள்ளது. ரயில்களில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பிளக் பாயிண்டில் மின்சாரம் இருக்காது. ரயில்களில் தீவிபத்துகளை தடுக்கும் நோக்கில் செல்போன்களுக்கு சார்ஜ் போட தடை விதிக்கப்பட்டுள்ளது என மீண்டும் ஒரு முறை இந்திய ரயில்வே விளக்கியுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications