பெண்களின் வங்கி கணக்கை ZERO பேலன்ஸ் கணக்கிற்கு மாற்ற வேண்டும்! வங்கி ஊழியர் சங்கம் நல்ல யோசனை!

Subscribe to Oneindia Tamil

பெண்களின் வங்கி கணக்கை ZERO பேலன்ஸ் கணக்கிற்கு மாற்ற வேண்டும்! வங்கி ஊழியர் சங்கம் நல்ல யோசனை!

சென்னை: பெண்களின் வங்கி கணக்கை ZERO பேலன்ஸ் கணக்கிற்கு மாற்ற வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வங்கி ஊழியர் சங்கம் யோசனை தெரிவித்துள்ளது.

 Bank Employees Union suggested to Stalin that womens bank accounts should be changed to ZERO balance accounts

இதன் மூலம் வங்கிக் கணக்கிலிருந்து முழுத் தொகையை எடுத்தாலும் கூட அபராதம் விதிக்கப்படாது என அச்சங்கம் கூறியுள்ளது. இது குறித்து வங்கி ஊழியர் சங்கத் தலைவர் வெங்கடாச்சலம் எழுதியுள்ள கடிதம் வருமாறு;

2 வகை கணக்குகள்: ''மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பெண்கள் வங்கி கணக்கில் பணம் செலுத்தியதை எடுக்கும் போது சில கஷ்டங்களும், பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. வங்கியில் 2 வகையான சேமிப்பு கணக்குகள் பொது மக்களுக்கு வழங்கப்படுகிறது. 'ஜீரோ பேலன்ஸ்' கணக்கு என்று சொல்லக் கூடியது, கணக்கில் சிறு தொகை கூட இருப்பு இல்லாமல் முழுமையாக எடுக்கவும், டெபாசிட் செய்யக்கூடிய வசதியாகும். இவ்வகை வங்கி கணக்கில் இருந்து முழுமையான தொகை எடுத்தாலும் கூட அபராதம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது.''

ஜீரோ பேலன்ஸ்: ''மற்றொரு வகை சாதாரண சேமிப்பு கணக்காகும். இந்த கணக்கில் குறைந்த பட்சம் ரூ.500 அல்லது ரூ.1000 இருப்பு இருக்க வேண்டும். குறைந்த பட்ச இருப்பை விட பணம் குறையும் போது அபராதம் வசூலிக்கப்படும் நடைமுறை உள்ளது. வங்கி விதிகளின்படி ஜீரோ பேலன்ஸ் கணக்கை சாதாரண சேமிப்பு கணக்கிற்கு மாற்றலாம். ஆனால் சாதாரண சேமிப்பு கணக்கை ஜீரோ பேலன்ஸ் கணக்கிற்கு மாற்றம் செய்ய இயலாது.''

 Bank Employees Union suggested to Stalin that womens bank accounts should be changed to ZERO balance accounts

வங்கி கணக்கு: ''மகளிர் உரிமைத் திட்டத்தில் பெரும்பாலான பயனாளிகள் கொடுத்துள்ள வங்கி கணக்கு சாதாரண சேமிப்பு கணக்காகும். 'ஜீரோ பேலன்ஸ்' கணக்கு வைத்திருக்கவில்லை. அதனால் குறைந்தபட்ச இருப்பு இல்லாத காரணத்திற்காக குறிப்பிட்ட சிறு தொகை அபராதமாக வசூலிக்கப்படுகிறது. எனவே வங்கிகள் குறைந்த இருப்பிற்காக வசூலிக்கப்படும் அபராதத்தை தள்ளுபடி செய்ய வேண்டும். அல்லது சாதாரண சேமிப்பு கணக்கு வைத்துள்ள பெண்களின் கணக்கை 'ஜீரோ பேலன்ஸ்' கணக்காக மாற்ற அரசு வங்கிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். ''

நல்ல யோசனை: ''இத்திட்டத்தில் பயன் அடையும் பெண்கள் எவ்வித கஷ்டமும் இல்லாமல் அபராத கட்டணமும் இன்றி முழுமையாக பணத்தை பெற இந்த இரண்டு வழிகளில் ஏதாவது ஒன்றை பின்பற்ற வேண்டும்.'' இவ்வாறு பெண்களின் நலன் கருதியும், அரசு தரும் பணம் பெண்களை முழுமையாக சென்றடையும் வகையிலும் வங்கி ஊழியர் சங்கம் யோசனை தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+