புத்தக பிரியர்களுக்கு குட் நியூஸ்... பிப்.24 முதல் மார்ச் 9 வரை சென்னையில் புத்தக கண்காட்சி!
சென்னை: சென்னையில் 44-வது புத்தக கண்காட்சி பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெறும் என்று பபாசி அறிவித்து உள்ளது.
நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் காலை 11 மணி முதல் இரவு 8 மணிவரை கண்காட்சி நடைபெற உள்ளது.
சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கலையொட்டி புத்தக கண்காட்சி பிரமாண்டமாக நடைபெறும்.700-க்கும் மேற்பட்ட புத்தகக்கடைகள், பல லட்சம் தலைப்பிலான நூல்கள், லட்சக்கணக்கான வாசகர்களின் வருகை என்று பபாசி நடத்தும் சென்னை புத்தகக் கண்காட்சி களைகட்டும்.

இதற்காகவே ஆண்டுமுழுவதும் காத்திருந்து புத்தகங்கள் வாங்குபவர்களும் உண்டு.
ஆனால், இந்த ஆண்டு இதுவரை அந்தப் புத்தகக் கண்காட்சி குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.இதற்காக புத்தக பிரியர்கள் ஏங்கி தவித்து வந்தனர். இந்த நிலையில் சென்னையில் 44-வது புத்தக கண்காட்சி பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் என்று பபாசி அறிவித்து உள்ளது.
இந்த நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8 மணிவரை கண்காட்சி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பபாசியின் இந்த அறிவிப்பால் புத்தக பிரியர்கள் குஷியாகி உள்ளனர்.


Click it and Unblock the Notifications
