"பச்சைத் தமிழன்" ராகுல்.. கருகுதா தாமரை?.. பாஜகவை முந்திய காங்,.. இவர்தான் "பெஸ்ட்".. ஆஹா வாசகர்கள்
2022ம் ஆண்டின் சிறந்த தேசிய தலைவர் யார் என்ற கருத்து கணிப்பு முடிவு வெளியாகி உள்ளது
சென்னை: அதல பாதாளத்தில் காங்கிரஸ் கட்சி தொங்கி கொண்டிருக்கிறது என்று யார் சொன்னது? பாஜகவை ஓவர்டேக் செய்து, காங்கிரஸ் தன் முத்திரையை பதிவு செய்துள்ளது.. அது நம் கருத்து கணிப்பிலும் நிரூபணமாகி உள்ளது.
விரைவில் எம்பி தேர்தல் வரப்போகிறது.. ஆனால், இதற்காக தேசிய கட்சிகள் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பேயே தயாராகிவிட்டன என்பதை சொல்லியே ஆக வேண்டும். இந்த ஒரு வருட காலமாக, குறிப்பாக, ராகுல், மோடி, மம்தா, கேசிஆர் போன்றோரின் அரசியல் அதிர்கள் நிறையவே நடந்துள்ளன.
இதில், பாஜகவில் பிரதமர் என்ற பதவியையும் தாண்டி, அசைக்க முடியாத சக்தியாக உருவாகி உள்ளார் மோடி.. அதனால்தான், பிரதமர் மோடி குறித்த எத்தனையோ செய்திகள் மீடியாவில் ஒவ்வொரு முறையும் ஆக்கிரமித்து விடுகின்றன..

ஒர்க் அவுட்
மற்ற கட்சிகளுக்கும், பாஜகவுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், அக்கட்சி மேற்கொள்ளும் பிரச்சாரங்களும், வியூகங்களும்தான். பெரும்பாலான கட்கிகள் களத்தில்இறங்கி, மக்களை நெருங்கி, தங்கள் கட்சிகளை வளர்க்கிறது என்றால், பேஸ்புக், யூடியூப், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பாஜக கட்சியை வளர்ப்பதாக பரவலாகவே ஒரு விமர்சனம் உள்ளது. டிஜிட்டலில் அரசியலை கையில் எடுத்தாலும், அது பாஜகவுக்கு பிரதானமாக உதவுவதாகவே தெரிகிறது.. வடமாநிலங்களில் நன்றாகவே இந்த வியூகம் ஒர்க் அவுட் ஆகியும் வருகிறது..

லேசான ஜெர்க்
அந்தவகையில், கடந்த ஒரு வருடமாகவே, பாஜகவின் செயல்பாடுகள் பலரையும் திகைக்க வைத்தன.. இந்த வருடம் நடந்த 5 மாநில இடைத்தேர்தல்களில் 4 இடங்களில் பாஜக தோல்வி அடைந்துள்ளது.. 4 மாநில லோக்சபா தேர்தல், டெல்லி மாநகராட்சி தேர்தல், இமாச்சல பிரதேச தேர்தல்களில் தோல்வி அடைந்ததுள்ளது.. அத்துடன், உத்தரபிரதேசம், பீகார், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலும், லேசாக ஜெர்க் ஆகி கொண்டிருப்பதை மறுக்க முடியாது. அந்த சரிவை ஈடுகட்ட அதனாலேயே தென்மாநிலங்கள் பக்கம், பாஜக தன் கவனத்தை குவித்து வருகிறது.

இல கணேசன்
மம்தா பானர்ஜியை பொறுத்தவரை, பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒன்றுதிரட்ட 2 வருடம் முன்பு களமிறங்கினார்.. ஆனால், என்ன ஆனதோ தெரியவில்லை.. பாஜகவை கடுமையாக எதிர்க்கும் மனநிலைமையில் இருந்து மேற்கு வங்க முதல்வர் விலகிவிட்டார்.. பாஜக காலை வைத்தால், காலை வெட்டுவேன், அடித்து விரட்டுவேன் என்று கோபாவேசமாக அன்று பேசிய மம்தாவும், பாஜகவில் இருந்து கவர்னராக சென்றிருக்கக்கூடிய, இல.கணேசன் அண்ணனின் 80வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்று, சண்டை மேளத்தில் கலந்து, மேளம் அடித்துகொண்டிருந்த மம்தாவும் ஒன்றுதான் என்பதுதான் ஆச்சரியத்தை கிளப்பியது.

மோடி நல்லவர்
அதைவிட ஆச்சரியம், சட்டமன்றத்திலேயே, "மோடி நல்லவர்" என்று சொல்லக்கூடிய அளவுக்கு நெருக்கடி மம்தாவுக்கு ஏன் வந்தது? என்பதையும் யோசிக்க வேண்டி உள்ளது.. அந்தவகையில், சொந்த மாநிலத்தில் மம்தாவின் செயல்பாடுகள் அவருக்கு சறுக்கலை இந்த வருடம் பெற்று தந்ததாகவும், இந்த அதிருப்தி வரும் தேர்தலில் எதிரொலிக்க வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

சந்திரபாபு நாயுடு
அதேபோல, சந்திரசேகர ராவை பொறுத்தவரை, தேசிய அளவில் கால்வைக்க முயன்று வருகிறார்.. ஆனால், தெலுங்கானாவில் வலுவான எதிர்க்கட்சி யாரும் இல்லை என்பதால், அந்த இடத்தை பிடிக்கவே பாஜக முயன்று கொண்டிருக்கிறது.. தன்னுடைய ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்வதாக, பகீர் குற்றச்சாட்டுகளை சந்திரசேகர் கையில் எடுத்துள்ள நிலையில், "2024ம் ஆண்டுக்கு பிறகு பாஜக அல்லாத கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் இலவச மின்சாரம் வழங்கப்படும்" என்று அறிவித்து, தன்னுடைய காய்நகர்த்தலை துவங்கி உள்ளார்.. அத்துடன், பாஜகவுக்கு எதிராக புதிய அணி உருவாக்கி, பிற கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆதரவை பெற்று வருகிறார். இந்த முயற்சியை முதன்முதலில் சந்திரபாபுநாயுடுதான் எடுத்தார்.. ஆனால், போதிய வெற்றி அவருக்கு கிடைக்கவில்லை.. இப்போது சந்திரசேகர ராவ் அந்த பிளானை எடுத்துள்ளார்.

தகரும் கோட்டைகள்
இந்த வருடம் பெரும்பாலானோரின் கவனத்தை பெற்றது ராகுல்காந்தியின் அரசியல் எனலாம்.. இத்தனை காலமும், பாஜகவா? காங்கிரஸா? என்ற அரசியல் நிலைப்பாடு மாறி, பாஜகவா? ஆம் ஆத்மியா? என்று சொல்லக்கூடிய அளவுக்கு காங்கிரஸ் பின்னடைவை சந்தித்து வருகிறது என்பதை மறுக்க முடியாது.. அதேபோல, காங்கிரஸ் கோட்டைகள் ஒவ்வொன்றையும், ஆம் ஆத்மி குறி வைத்து தகர்த்து கொண்டிருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது.. புதிய கட்சி தலைவர் நியமனம் சமீபத்தில்தான் நடந்து முடிந்த நிலையில், ராகுல் தன் ரூட்டை வேறு பக்கம் திருப்பினார்.

அத்வானி
இந்திய வரலாற்றை பொறுத்தவரை, பெரும் தலைவர்களுக்கு பெரிதும் கைகொடுத்து உதவியுள்ளது யாத்திரைகள்தான்.. காந்தியின் தண்டி யாத்திரை முதல் அத்வானியின் ரத யாத்திரை வரை இந்தியா ஏராளமான யாத்திரைகளை கண்டுள்ளது இந்த நாடு.. அவ்வளவு ஏன், நம் தமிழகத்தில்கூட, இந்தி திணிப்பு முதல் வைகோவின் பாதயாத்திரை வரை, அழியாத தடங்களை பதித்து சென்றுள்ளன.. இதன்மூலம் மக்களுடன் நேரடியாக நெருங்கி சந்திப்பதால் ஏற்படக்கூடிய தாக்கங்கள், அதிர்வுகள் அதிகம்..

பச்சை தமிழன்
அந்தவகையில்தான், ராகுல் பாதயாத்திரையை கையில் எடுத்தார்.. அதைவிட முக்கியம், அந்த யாத்திரையை ராகுல், தமிழகத்தில் இருந்து துவக்கியதுதான்.. தமிழகத்தின்மீது தனி பிரியத்தையும், பாசத்தையும் பொழிபவர் ராகுல்.. பாஜக இந்த யாத்திரையை முதல்நாளே கிண்டலடித்தது.. ஒன்றேகால் மணிநேரம் நடைப்பயிற்சி செய்வது போல உள்ளது என்று சீமானும் கிண்டலடித்தார்.. ஆனாலும், இந்தியா முழுவதும் ராகுலின் இந்த நடைபயணம்தான், இந்த வருடம் அவரது அரசியலை தூக்கி நிறுத்தி அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு போயுள்ளது என்றே சொல்லலாம்.

ராகுல்காந்தி
நம் ஒன் இந்தியா சார்பில் எடுக்கப்பட்ட கருத்து கணிப்பு ஒன்றிலும், இதுதான் நிரூபணமாகி உள்ளது.. நம் வாசகர்களிடம் ஒரு கேள்வியை முன்வைத்திருந்தோம்.. 2022ம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட தேசிய அரசியல் தலைவர் யார்? இந்த கேள்வியைதான் கேட்டிருந்தோம்.. அதற்கு நரேந்திரமோடி, ராகுல்காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, சந்திரசேகர ராவ் உத்தவ் தாக்ரே, நிதிஷ்குமார், அகிலேஷ் யாதவ் என்று ஆப்ஷன்களையும் தந்திருந்தோம். வாசகர்கள் திரண்டு வந்து தங்கள் பதிலை வாக்குகளாக பதிவு செய்துள்ளனர்.

தவிடுபொடி
அதன்படி, மோடிக்கு 27.31% வாக்குகளும், ராகுல்காந்திக்கு 44.08 சதவிதமும் வாக்குகள் விழுந்துள்ளன.. கெஜ்ரிவாலுக்கு 16.58 சதவீதமும், மம்தாவுக்கு 7.88 சதவீதமும், சந்திரசேகர ராவுக்கு 1.85 சதவீதமும், உத்தவ் தாக்கரேக்கு 0.59 சதவீதமும், நிதிஷ் குமாருக்கு 0.93 சதவீதமும், அகிலேஷூக்கு 0,.77 சதவீதமும், வாக்குகள் கிடைத்துள்ளன.. அதாவது, மோடியை பின்னுக்கு தள்ளிவிட்டு, ராகுல் முந்திக்கொண்டு முதலாவது இடத்தில் வந்து நின்றுள்ளார்.. இது ஒரு சாதாரண கணிப்புதான் என்றாலும், 18 சதவீத வாக்குகள் வித்தியாசம் உள்ளதை நிச்சயம் கவனிக்க வேண்டிய விஷயமாகும். !!!
-
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்?












Click it and Unblock the Notifications