Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தூள் தூளாகிறது.. அண்ணாமலையால் ஆடிப்போன விஐபிகள்? தமிழக பாஜகவில் மாற்றம்? பரபரக்கும் சென்னை மதுரவாயல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பாஜகவில் விரைவில் சில மாற்றங்களும், அதிரடிகளும் நடக்கலாம் என்கிறார்கள்.. என்ன காரணம்?
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலின்போது, அதிமுகவுக்கு உரிய பதிலடியை தர வேண்டிய நெருக்கடி தமிழக பாஜகவுக்கு ஏற்பட்டிருந்தது.. அத்துடன் வாக்கு வங்கியையும் உயர்த்த வேண்டிய கட்டாயமும் பாஜகவுக்கு ஏற்பட்டிருந்தது.

Annamalai BJP Maduravoyal chennai

இதைவிட முக்கியமாக, பலம்வாய்ந்த திமுகவின் தொகுதிகளில் நெருக்கடியை தந்தே ஆக வேண்டும் என்ற அவசியமும் ஏற்பட்டது. எனவேதான், பிரபலங்களை வேட்பாளர்களாக களமிறக்கியது. அத்துடன் தொகுதிகளில் தாராளத்தையும் வாரி இறைத்திருந்தது.

பாஜக தோல்வி: ஆனால், பாஜகவின் வியூகம் தரைமட்டமானது.. அடிமட்ட நிர்வாகிகளுக்கே முறையாக பணம் போய்ச்சேரவில்லையாம்.. சில இடங்களில் உட்கட்சி பூசலும், உள்குத்தும் வெடித்து கிளம்பின.. இதனால் களப்பணிகளையும் ஒழுங்காக மேற்கொள்ளப்படவில்லையாம்.

அதேபோல, பூத் ஏஜெண்டுகளுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் ரூபாய் 40 லட்சம் வரை விருதுநகர் பாராளுமன்றம் தேர்தல் பணிக்குழுவினர் சுருட்டிவிட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி மதுரை, திருமங்கலம் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் போஸ்டர்களும் அடித்து ஒட்டப்பட்டன.

அண்ணாமலை: மேற்கண்ட புகார்கள் அனைத்துமே மாநில தலைவர் அண்ணாமலையின் பார்வைக்கும் அனுப்பி வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. அதற்கேற்றபடி கடந்த மே மாத இறுதியில் சென்னையில் நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டியிருந்தார் அண்ணாமலை.

எனவே, எப்படியும், பல நிர்வாகிகளின் பதவிகள் பறிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அதுமட்டுமல்ல, தேர்தல் செலவுகள், பணிகள் தொடர்பாக அண்ணாமலையிடம் புகார் செய்ய வேண்டும் என்பதற்காகவே நிர்வாகிகள், வேட்பாளர்கள் பலர் திட்டமிட்டிருந்தனர். பணத்தை சுருட்டிய நிர்வாகிகள் மீது புகார் செய்ய பலரும் ஆதாரத்துடனும் காத்திருந்தனர்.

என்ன காரணம்: ஆனால் அன்றைய தினம் கூட்டம் தொடங்கியதுமே, "பணம் சுருட்டல், கட்சி மோதல் குறித்து யாரும் பேசக் கூடாது, வாக்கு எண்ணிக்கை குறித்து மட்டுமே பேச வேண்டும்" என்று முன்கூட்டியே அண்ணாமலை கண்டிப்பாக சொல்லிவிட்டாராம்.. இதனால் ஆதாரத்துடன் புகார் கொடுக்க வந்தவர்கள் அதிருப்தியும், விரக்தியும், ஏமாற்றமும் அடைந்ததாக செய்திகள் கசிந்தன.

கட்சி ஆபீசுக்கு போனாலும் புகாரை வாங்குவதில்லை... கூட்டம் நடத்தினாலும் புகார் சொல்ல விடுவதில்லையே என்று புலம்பி கொண்டே போனார்களாம் நிர்வாகிகள்.

தமிழக பாஜக: இதற்கு பிறகுதான், அதிரடி முடிவு ஒன்றை தமிழக பாஜக கையில் எடுத்தது. அதன்படி, தேர்தலுக்கு முந்தைய ஆய்வுகள், கணிப்புகள் எல்லாம் பாஜகவுக்கு சாதகமாக இருந்தும், வெற்றி வாய்ப்பு கை நழுவியது எப்படி? என்ற ஆய்வில் இறங்கியது. இதற்காக தொகுதி வாரியாக ஆய்வு நடத்த முடிவானது. ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டு அவர்கள் முன்னிலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது..

இந்த கூட்டங்களில் வேட்பாளர்கள், மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் அனைவரும் அழைக்கப்பட்டு காரணங்கள் கேட்கப்பட்டது.. அப்போது தென்சென்னை உட்பட பல்வேறு தொகுதிகளில், "கட்சி தேர்தல் செலவுக்காக வழங்கிய பணத்தை முறையாக விநியோகிக்கவில்லை. கோஷ்டிகளால் தேர்தல் வேலைகளில் உள்ளடி வேலைகளும் நடந்தன, சில தொகுதிகளில் நிர்வாகிகளிடையே கைகலப்பு, மோதல் நடந்தன" என்றெல்லாம் புகார்கள் சொல்லப்பட்டுள்ளதாம்.

ஆய்வு கூட்டம்: இந்த ஆய்வு கூட்டம் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், இது தொடர்பான விரிவான அறிக்கை தயார் செய்து அண்ணாமலையிடம் வழங்க போகிறார்கள். நாளை மறுநாளே அதாவது 6ம் தேதியே பாஜக மாநில செயற்குழுக் கூட்டம் மதுரவாயலில் நடக்க உள்ளது.. பாஜக நிர்வாகிகள், முதல் தொகுதி பொறுப்பாளர்கள் வரை கிட்டத்தட்ட 4 ஆயிரம் பேர் இதில் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது.

இந்த கூட்டத்தில் தேர்தல் தோல்வி தொடர்பாக நிச்சயம் விவாதிக்கப்படும் என தெரிகிறது. அதேபோல, கூட்டத்துக்கு பிறகு புகாருக்கு ஆளான நிர்வாகிகளின் பதவிகளையும் பறிக்க திட்டமிட்டிருக்கிறார்களாம்..

களையெடுப்பு: தேர்தல் களப்பணியில் ஆர்வம் காட்டாதவர்கள், பணத்தை முறையாக விநியோகிக்காமல் கையாடல் செய்தவர்கள், என அத்தனை பேருக்கும் "கட்டம்?" கட்டும் முடிவினை தமிழக பாஜக எடுக்க போவதால், கட்சி நிர்வாகிகளிடையே பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கிறதாம்.

அதுமட்டுமல்ல, சட்டசபை தேர்தலில் அதிக சீட்களில் போட்டியிட முடியும் என்பதால் ஏராளமான இளைஞர்களுக்கும், புதுமுகங்களுக்கும் தமிழக பாஜகவில் வாய்ப்பு தர போவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன. எனவே, இதற்கான நிர்வாகிகள் தேர்வுகளும் நடக்கலாம் என்கிறார்கள். எப்படியும் மாவட்ட அளவில் தொடங்கி, மாநில பொறுப்புகள் வரை பெரிய அளவில் மாற்றங்கள் இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

நாளை மறுநாள் நடக்க போகும் செயற்குழுவில் ஒன்றிய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் கலந்துகொள்ள போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

பரபரப்பு:
அத்துடன், தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநில அணிகள் மற்றும் பிரிவுகளின் நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட அணிகளின் தலைவர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், புதிதாக கட்சியில் இணைந்த முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பட்டியல் பெருங்கோட்ட அமைப்பு செயலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக, கேசவ விநாயகம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+