"நிறம்" மாறுது.. "ஆரஞ்சு"க்கு பதில் சிகப்பு கலரா? பால் பாக்கெட்டிலும் பாலிட்டிக்ஸ்! அண்ணாமலை குமுறல்
ஆவின் பால் பாக்கெட் நிறம் குறித்து அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்
சென்னை: அரசின் ஆவின் பால் பாக்கெட்டில் ஆரஞ்சு வண்ணத்தை நிறுத்தி, சிகப்பு வண்ணம் கட்டாயமாக்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது. அதன்படி 500 மி.லி. ஆரஞ்ச் பால் பாக்கெட் 24 ரூபாய்க்கும், பச்சை நிற பாக்கெட் 22 ரூபாய்க்கும், நீல நிற பாக்கெட் 20 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
எனினும், ஆவின் நஷ்டத்தை தவிர்க்கும் வகையில், சிகப்பு நிற பால் பாக்கெட் விற்பனை துவங்கப்பட்டுள்ளது.. இது 500 மி.லி, 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.. இந்த பால் விற்பனை அதிகரிப்பதன் வாயிலாக ஆவின் நஷ்டத்தை வெகுவாக குறைக்க முடியும்..
அதனால் ஆரஞ்ச் பால் விற்பனையை குறைத்து, சிவப்பு நிற பால் பாக்கெட் விற்பனையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது.. தீபாவளி பண்டிகைக்கு பிறகு ஆரஞ்சு நிற பால் பாக்கெட் தயாரிப்பு 80 சதவீதம் அளவிற்கு குறைக்க இருப்பதாக 2 நாட்களுக்கு முன்பேயே தகவலும் வெளியானது..

ஆரஞ்சு கலர்
அதற்கு முன்னோட்டமாக, ஆரஞ்சு நிற பால் அட்டை விற்பனையை தவிர்த்து, சிவப்பு நிற பால் அட்டையை அதிகளவில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய ஆவின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டும் இருந்தது. இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.. அதில் சத்து குறைவான பால், மக்கள் மீது திணிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டி உள்ளார். அந்த அறிக்கை இதுதான்:

முன்னோட்டம்
"தமிழகத்தில் ஆவின் பால் நிறுவனம் அதிகமாக விற்பனை செய்துவந்த, மக்கள் விரும்பி வாங்கிய, அதிக சத்துமிக்க ஆரஞ்சு வண்ண ஆவின் பால் பாக்கெட் நிறுத்தப்படவுள்ளதாக அறிகிறேன். அதற்கு பதிலாக சிவப்பு வண்ண பால் பாக்கெட் வாங்க மக்கள் கட்டாயப்படுத்தப் படுகிறார்கள். 500 மிலி அதிக சத்துமிக்க ஆரஞ்சு வண்ண பால் பாக்கெட் 24 ரூபாய்க்கும், இடைநிலையில் பச்சைவண்ண பால் பாக்கெட் 22 ரூபாய்க்கும், நீலவண்ண பால் பக்கெட் 20 ரூபாய்க்கும் ஆவின் நிறுவனத்தால் விற்பனை செய்யப்படுகிறது.

சிகப்பு கலர்
இதில் சத்து நிறைந்த ஆரஞ்சு வண்ண பால் பாக்கெட் மக்களால் பெரிதும் விரும்பி வாங்கப்படுகிறது. தரமிக்க இந்த பாலினை நிறுத்திவிட்டு. மறைமுகமாக மக்கள் மீது, சத்து குறைவான சிவப்புநிற பால் பாக்கெட் திணிக்கப்படுகிறதா? பால் மற்றும் பால் பொருட்கள் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்கள் எல்லாம் மிகச்சிறப்பாக லாபம் ஈட்டி இயங்கிக் கொண்டிருக்கும் போது தமிழக அரசின் ஆவின் நிறுவனம் மட்டும் எப்போதும் நஷ்டக் கணக்கு காட்டி வருவது ஏன்? மக்களின் மிக அத்தியாவசியத் தேவையான பால் விற்பனையில் நஷ்டத்தை ஏற்படுத்தும் வகையில் அந்த நிறுவனத்தில் என்ன நடக்கிறது?

வண்ண வண்ண பால்
ஒரு பக்கம் ஆவின் இனிப்பு வகைகளின் விலையை இந்த அரசு உயர்த்தியுள்ளார்கள், இப்போது தீபாவளிக்கு பால் மற்றும் பால் பொருட்களை பயன்படுத்தி பலகாரங்கள் எல்லாம் தயாரிக்கும் இந்த வேளையிலே மறைமுகமாக பால் விலையை உயர்த்தும் வகையில் ஆரஞ்சு வண்ணத்தை தடைசெய்து சிவப்பு நிறத்தை முன்னிறுத்துவதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதிலும் கரவை மாடு வைத்து பால் உற்பத்தி செய்து கொண்டிருக்கும், ஏழை விவசாய மக்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி கொடுக்காமல், விற்பனை விலையை மட்டும் அதிகரித்து மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

ஆரஞ்ச் + ரெட்
மறக்கவே முடியாத, மட்டரகமான பொங்கல் பரிசு தந்து, அதிர்ச்சிக்குள்ளாக்கிய திமுக அரசு, தற்போது தீபாவளி பண்டிகைக்கு, தமிழக மக்களுக்கு தந்திருக்கும் பரிசு ஆவின் பால் மற்றும் இனிப்பு விலை உயர்வு. ஆளும் அரசுக்கு ஆரஞ்சு வண்ணத்திற்கு பெருகி வரும் மக்கள் ஆதரவு அதிக வெறுப்பாகி விட்டது போல, அதனால், சிவப்பு வண்ணத்தை அதிகமாக வெளியீட்டு, மக்கள் விரும்பாத, சத்துக்குறைவான சிகப்பு வண்ணத்தை பயன்படுத்த, கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். மக்கள் கருத்தை அறிந்து செயல்படுவதே மக்களாட்சி" என்று தெரிவித்துள்ளார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications