பீகார் தேர்தல் முடிவு தமிழகத்தில் எதிரொலிக்காது.. திமுக VS தவெக இடையே தான் போட்டியே.. டிடிவி தினகரன்
சென்னை: பீகார் தேர்தல் முடிவு தமிழகத்தில் எதிரொலிக்காது என்றே நான் கருதுகிறேன் என டிடிவி தினகரன் கூறியுள்ளார். மேலும், 2026 தேர்தலில் ஆளுங்கட்சி கூட்டணிக்கும் - தவெக கூட்டணிக்கும் இடையே தான் போட்டி இருக்கும் என்றும் அமமுக இருக்கும் கூட்டணியே ஆட்சியை பிடிக்கும் என டிடிவி தினகரன் பேசியுள்ளார். டிசம்பர் அல்லது ஜனவரியில் கூட்டணி முடிவினை நாங்கள் அறிவிப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று சென்னை அடையாறில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், அமமுக இருக்கும் கூட்டணியே வரும் 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும் என்றும், பீகார் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் எதிரொலிக்காது என்று கூறினார். அவர் கூறியதாவது:-

பழனிசாமி எங்களுக்கு துரோகத்தை இழைத்தார். எனவே துரோகத்தை வீழ்த்த வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. எங்களை சந்திக்கவே எடப்பாடி தயங்குகிறார். வரும் 2026 சட்டசபை தேர்தலில் அமமுக பங்கேற்கும் கூட்டணியே வெற்றி பெறும். ஓ பன்னீர் செல்வம், செங்கோட்டையன், சசிகலாவிடம் பேசி வருகிறேன். எங்களுடன் கூட்டணி அமைக்க சில கட்சிகள் பேசி வருகின்றன.
2026 சட்டசபை தேர்தலில் ஆளும் கட்சி கூட்டணிக்கும் விஜய்யின் தவெக தலைமையிலான கூட்டணிக்கும் இடையே தான் கடும் போட்டி இருக்கும். அமமுக யாருடன் கூட்டணி என்பதை டிசம்பர் அல்லது ஜனவரியில் அறிவிப்போம்" என்று பேசினார். அப்போது பீகார் தேர்தல் முடிவு குறித்து கேட்ட கேள்விக்கு பதில் அளித்த டிடிவி தினகரன், "பீகார் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் எதிரொலிக்காது என்றே நான் கருதுகிறேன்" என்று கூறினார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பல்வேறு இடங்களில் திமுக மற்றும் தவெக இடையே தான் போட்டி இருக்கும் என்று கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications