Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசு ஊழியர்களுக்கு அல்வா போல் அறிவிப்பு! 3% அகவிலைப்படியை உயர்த்திய அரசு! இதுதான் தீபாவளி பரிசு

Subscribe to Oneindia Tamil

பாட்னா: தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் மத்திய அரசு அரசு ஊழியர்களுக்கான அகவிலை படியை 3 சதவீதம் உயர்த்தி அறிவித்தது. இந்த நிலையில் மத்திய அரசை பின்பற்றி ஒரு மாநில அரசும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படையை மூன்று சதவீதம் உயர்த்தியுள்ளது. பீகாரில் இந்தாண்டின் இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி பீகார் அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு அக்டோபர் 20-ஆம் தேதி தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு முக்கியமான நிதி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

பீகார் மாநில அரசு, தீபாவளி பருவத்தையொட்டி, ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை (Dearness Allowance - DA/DR) 3% உயர்த்தி வழங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் DA/DR தற்போதைய 55% இருந்து 58% ஆக உயர்ந்துள்ளது.

Increases DA DR by 3

பீகார் அரசு

இந்த உயர்வு, கடந்த 2025 ஜூலை 1ஆம் தேதி இருந்து அமல்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், முந்தைய மூன்று மாதங்களுக்கான DA/DR பாக்கி தொகையும் ஊழியர்களின் கணக்கில் சேர்க்கப்படும். இதை மத்திய அமைச்சரவை அனுமதித்த பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு இந்த உயர்வு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DA/DR 2025

மத்திய அரசு கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தனது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் இதே வகையில் 3% DA/DR உயர்வை அறிவித்தது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் வருமானத்தில் கூடுதல் நிவாரணம் ஏற்பட்டு, அவர்கள் செலவினச் சுமையை குறைக்கும் வகையில் உதவியுள்ளது. பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான அரசு, தீபாவளி பருவத்தையொட்டி, மாநில ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இதேபோல் 3% உயர்வை வழங்கி மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது. பீகார் அமைச்சரவையில் இதற்கான ஒப்புதலும் கிடைத்துள்ளது. இந்த நடவடிக்கை, சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னர் ஊழியர்களின் நலன்களை மேம்படுத்துவதோடு, அவர்களின் நம்பிக்கையைப் பெறவே இந்த ஏற்பாடு என்கின்றனர் எதிர்க் கட்சியினர்.

ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்

DA/DR உயர்வால் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வருமானம் உயர்வு: ஊதியங்கள் மற்றும் ஓய்வூதியங்கள் அதிகரிக்கும் என்பதோடு, அரியர் தொகையும் கிடைக்கும் என்பதால் தீபாவளி பண்டிகை காலத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் செலவினத்தைக் கையாள உதவும் மாநில அரசு ஊழியர்கள் ஆதரவு தேர்தலின்போது கிடைக்கும் என சுட்டிக் காட்டுகின்றனர் அரசு ஊழியர்கள்.

நிதிஷ்குமார் அறிவிப்பு

மத்திய அரசு மற்றும் பல மாநில அரசுகள், தீபாவளி பருவத்தில் ஊழியர்களுக்கு வழங்கும் இந்த நிதி உதவி நடவடிக்கை, அரசு ஊழியர்களின் வருமானத்தில் ஆதரவையும், அவர்களின் வாழ்வாதார பாதுகாப்பையும் உறுதி செய்யும் ஒரு முக்கிய முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது. மத்திய அரசு மற்றும் பீகார் மாநில அரசின் சலுகைகளை தொடர்ந்து இந்தியாவில் இருக்கும் பிற மாநில அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் இதே போன்ற அகவிலைப்படி உயர்வு மற்றும் தீபாவளி சலுகைகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+