சுக்கு சுக்கா நொறுங்கிய பைக்.. விருதுநகரில் ஸ்பீடாக வந்த ஆம்னி பஸ் மோதி, டீ குடிக்க சென்ற 3 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நள்ளிரவில் நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பள்ளி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிந்து விடுமுறை மற்றும் அடுத்தகட்ட மேற்படிப்புக்கான ஆயத்தப் பணிகளில் இருந்த மாணவர்களின் உயிர் பறிபோனது அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது?

சாத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கோகுல் (17), யுவராஜ் (17) மற்றும் பிரசன்னா (17) ஆகிய மூவரும் நண்பர்கள். இவர்கள் மூவருமே இந்த ஆண்டு பிளஸ்-2 வகுப்பு படித்து முடித்தவர்கள்.

Virudhunagar road accident Sathur students Omni Bus collision Tamil Nadu Plus 2 students 3

டீ குடிக்க சென்ற 3 பேர்

நேற்று நள்ளிரவில் இவர்கள் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சாத்தூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். நள்ளிரவு நேரத்தில் டீ குடிப்பதற்காக அவர்கள் சாத்தூர் - கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது.

அவர்கள் மேட்டுப்பட்டி விலக்கு பகுதியில் சாலையைக் கடக்க முயன்றபோது, கன்னியாகுமரியில் இருந்து சென்னை நோக்கி அதிவேகமாக வந்த தனியார் ஆம்னி பஸ், மாணவர்கள் சென்ற பைக் மீது பயங்கரமாக மோதியது.

பஸ் மோதிய வேகத்தில் பைக் சுக்குநூறாக நொறுங்கியது. பைக்கில் பயணம் செய்த கோகுல், யுவராஜ் மற்றும் பிரசன்னா ஆகிய 3 பேருமே தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயம் அடைந்த அவர்கள் மூவரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க உயிரிழந்தனர். சம்பவ இடத்திலேயே பிரசன்னா, யுவராஜ் உயிரிழக்க, கோகுல் மட்டும் உயிருக்கு போராடி துடித்துள்ளார்..

தூக்கி வீசப்பட்ட பிளஸ் 2 மாணவர்கள்

உடனே அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்க முயன்றுள்ளனர்.. ஆனாலும் சிறிது நேரத்தில் ஆஸ்பத்திரி செல்லும் வழியிலேயே கோகுலும் இறந்துவிட்டார்.. நள்ளிரவு நேரம் என்பதால் உடனடியாக மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டாலும், தகவல் அறிந்ததும் சாத்தூர் தாலுகா போலீசார் விரைந்து வந்தனர்.

உயிரிழந்த மாணவர்களின் உடல்களை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஒரே கிராமத்தைச் சேர்ந்த மூன்று இளம் மாணவர்கள் விபத்தில் பலியான தகவல் அறிந்ததும், மேட்டுப்பட்டி கிராம மக்கள் மருத்துவமனையிலும் விபத்து நடந்த இடத்திலும் திரண்டனர். மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களின் கதறல் சத்தம் காண்போரை கண்கலங்க வைத்தது.


டிரைவர் கைது

இந்த விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய ஆம்னி பேருந்தை ஓட்டி வந்த 26 வயது டிரைவர் ஆம்ஸ்ட்ராங் என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். இவர் கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியை சேர்ந்தவராம்..

அதிவேகமாக பேருந்தை ஓட்டியதே விபத்திற்குக் காரணமா அல்லது மாணவர்கள் சாலையைக் கடந்தபோது கவனக்குறைவாக இருந்தனரா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

ஒரே பைக்கில் மூன்று பேர் சென்றதும், நள்ளிரவு நேரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் பயணித்ததும் இந்தத் துயரத்திற்கு ஒரு காரணமாக அமைந்துவிட்டது. பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கனவுகளுடன் இருந்த 3 மாணவர்களின் வாழ்க்கை இப்படிப் பாதிலேயே முடிந்து போனது அந்த கிராமத்தையே மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+