நேர்மையாக உழைத்தேன்.. வேதனை மட்டுமே மிச்சம்.. பாஜகவிலிருந்து விலகினார் ஐடி விங் நிர்மல் குமார்

நேர்மையாக உழைத்தேன், ஆனால் வேதனை மட்டுமே மிச்சம் என கூறி பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் ஐடி விங் நிர்வாகி நிர்மல் குமார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: உண்மையாக நேர்மையாக உழைத்தேன், வேதனை மட்டுமே மிச்சம் என கூறி பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் அக்கட்சியின் மாநில ஐடி விங் தலைவர் சி.டி.ஆர். நிர்மல் குமார்.

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பதவியேற்ற பிறகு நிறைய பேர் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார்கள் என்ற விமர்சனங்கள் உண்டு. அது போல் அண்மையில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜியும் அண்ணாமலை பாஜக தலைவராக பொறுப்பேற்ற பிறகு எத்தனை பேர் அந்த கட்சியில் இணைந்தார்கள் என கேட்டுச் சொல்லுங்கள் என ஒரு பிரஸ்மீட்டில் கூட கேட்டிருந்தார்.

அந்த வரிசையில் டாக்டர் சரவணன், காயத்ரி ரகுராம் உள்ளார்கள். இதில் தற்போது நிர்மல் குமாரும் இணைந்துள்ளார். அவர் பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

டிவிட்டர்

டிவிட்டர்

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: என்னால் முடிந்த வரை பல சங்கடங்களை கடந்து கடந்த 1.5 ஆண்டுகளாக பயணித்தேன்! உண்மையாக நேர்மையாக உழைத்தேன், வேதனை மட்டுமே மிச்சம்! விடை பெறுகிறேன் என குறிப்பிட்டுள்ளார். மேலும் அதில் ஒரு கடிதத்தையும் அவர் இணைத்துள்ளார்.

ஒன்றரை ஆண்டுகள்

ஒன்றரை ஆண்டுகள்

அந்த கடிதத்தில் அவர் கூறுகையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பல நூறு முறை சிந்தித்து இன்று நான் பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன். பல ஆண்டுகளாக எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்மையாக நேர்மையாக கட்சியின் வளர்ச்சிக்காக என்னால் முடிந்த வரை பணியாற்றினேன். இன்று விடை பெறுகிறேன்.

தமிழக பாஜக தலைமை

தமிழக பாஜக தலைமை

என் மீது நம்பிககை வைத்து என்னுடன் பயணித்த உங்களிடம் எனது இந்த முடிவிற்கான காரணத்தை தெரிவிப்பது எனது கடமை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழக பாஜக தலைமை தொண்டர்களையும் கட்சியையும் செருப்பாக பயன்படுத்தி கட்சியை பற்றி துளியும் சிந்திக்காு சொந்த கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் வேவு பார்த்து ஆனந்தம் அடைவதை போன்ற அல்பத்தனம் எதுவும் இல்லை.

கமலாலயம்

கமலாலயம்

அதையும் தாண்டி தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள் கட்சி மற்றும் கமலாலயத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் வியாபாரமாக்கி இடத்திற்கேற்ப நடித்து ஏமாற்றி வரும் தலைமையை பார்த்து ஒவ்வொரு நாளும் வேதனை அடைந்ததுதான் மிச்சம். குன்றிய மனிதரை போல் செயல்படும் நபரால் கட்சி அழிவை நோக்கி செல்வதை ஒவ்வொரு நாளும் பாரக்க முடிகிறது.

20 சதவீதம் கூட இல்லை

20 சதவீதம் கூட இல்லை

2019 ஆம் ஆண்டு இருந்த கட்சி அைமப்பில் தற்போது 20 சதவீதம் கூட இல்லை. அதைப்பற்றி துளியும் கவலை இலமலாமல் மாய உலகத்தில் சுற்றி வரும் ஒரு நபரால் கள எதார்த்தத்தை என்றும் உணர முடியாது. அதை உணர்த்த முயன்று என்னை போன்று பலர் தோல்வியுற்றோம். எல்லாவற்றிற்கும் மேலாக நான் ஒரு அமைச்சருடன் கடுமையான சட்ட போராட்டம் நடத்தி வரும் நிலையில் அந்த அமைச்சரை வெளியில் வீராவேசமாக பேசிவிட்டு திரைமறைவில் பேரம் பேசும் நபருடன் எப்படி பயணிக்க முடியும்?

தமிழகத்திற்கே மிகப் பெரிய கேடு

தமிழகத்திற்கே மிகப் பெரிய கேடு

மொத்தத்தில் திராவிட மாடல் அமைச்சர்களையே மிஞ்சும் அளவிற்கு ஒரு 420 மலையாக இருக்கும் நபரால் தமிழக பாஜகவிற்கு மட்டுமல்ல , தமிழகத்திற்கே மிகப் பெரிய கேடு தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள் மற்றும் கட்சியை ஏமாற்ற நினைக்கும் ஒரு தலைமையை நம்பி எப்படி பயணிக்க முடியும்? உங்கள் சகோதரன் சி.டி.ஆர் நிர்மல் குமார் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தற்போது நிர்மல் குமார் அதிமுகவில் இணைந்துவிட்டார். அவர் சென்னையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+