கவனிச்சீங்களா? தமிழக தேர்தல் முடிஞ்சதும்.. பிரச்சார தொனியே மாறிடுச்சே.. வடக்கில் பாஜக எடுத்த ரூட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு லோக்சபா தேர்தலில் மதம் தொடர்பான பிரச்சனைகள் பெரிய அளவில் கவனம் பெறாத நிலையில் தமிழ்நாடு தேர்தல் முடிந்ததும் வடஇந்தியாவில் மத ரீதியான விஷயங்களை பாஜக கையில் எடுத்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை நாடு முழுக்க லோக்சபா தேர்தல் திருவிழா பிரம்மாண்டமாக தொடங்கியது. கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை 2024 மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 லோக்சபா தொகுதிகளுக்கு முதற்கட்டமாக தேர்தல் நடந்தது.

BJP and PM Modi resorts to Communal Politics and campaign as Tamil Nadu elections are over

மொத்தமுள்ள 534 லோக்சபா தொகுதிகளில் 102 தொகுதிகளுக்கு முதல் கட்டத் தேர்தல் நடந்தது.

தமிழ்நாடு (39), அருணாச்சல பிரதேசம் (2 லோக்சபா தொகுதிகள்), அசாம் (5), பீகார் (4), சத்தீஸ்கர் (1), மத்திய பிரதேசம் (6), மகாராஷ்டிரா (5), மணிப்பூர் (2), மேகலா (2), மிசோரம் (1), நாகாலாந்து (1), ராஜஸ்தான் (12), சிக்கிம் (1), திரிபுரா (1), உத்தரப் பிரதேசம் (8), உத்தரகாண்ட் (5), மேற்கு வங்கம் (3), அந்தமான் நிக்கோபார் தீவுகள் (1), ஜம்மு மற்றும் காஷ்மீர் (1), லட்சத்தீவு (1), புதுச்சேரி (1) என வாக்குப்பதிவு நடந்தது.

தமிழ்நாடு பிரச்சாரம்: இதற்காக நடந்த பிரச்சாரம் பெரும்பாலும் பின்வரும் விஷயங்களை மையப்படுத்தி இருந்தது.

உள்ளூர் பிரச்சனை, முதலீடுகள், ஜிஎஸ்டி, கச்சத்தீவு, டோல் கேட், நீட், ரயில்வே பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை என்று ஆக்கபூர்வமான விஷயங்களை மையப்படுத்தியே பிரச்சாரம் நடந்தது. தமிழ்நாட்டில் மத ரீதியாக பிரச்சனை நடக்கவில்லை.

பல முறை தமிழ்நாட்டிற்கு வந்த மோடி எங்கும் மதம் பற்றி பேசவே இல்லை. ஆனால் தமிழ்நாடு லோக்சபா தேர்தலில் மதம் தொடர்பான பிரச்சனைகள் பெரிய அளவில் கவனம் பெறாத நிலையில் தமிழ்நாடு தேர்தல் முடிந்ததும் வடஇந்தியாவில் மத ரீதியான விஷயங்களை பாஜக கையில் எடுத்துள்ளது.

பாஜக புதிய ரூட்: உதாரணமாக இரண்டாம் கட்ட தேர்தல் பல்வேறு மாநிலங்களிலும் வரும் 26ம் தேதி நடக்கும் நிலையில், ராஜஸ்தானிலும் தேர்தல் நடக்க உள்ளது. பாஜக மற்றும் காங்கிரஸ் நேரடியாக மோதும் மாநிலங்களில் ராஜஸ்தானும் ஒன்று. அங்கிருந்து மொத்தம் 25 எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்குத் தேர்வாவார்கள்.

மோடி பேச்சு: இதனால் அங்கு தீவிரமான பிரச்சாரம் நடந்து வருகிறது. இந்த நிலையில்தான் ராஜஸ்தானில் நேற்று பொதுக்கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி பேசியது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அதில், நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள்.

இஸ்லாமியர்கள் அதிக குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். இதனால் இந்துக்களின் சொத்துக்கள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமிய பெண்களுக்கு கொடுக்க காங்கிரஸ் நினைக்கிறது. "அவர்கள் (காங்கிரஸ்) ஆட்சியில் இருந்தபோது,​​தேசத்தின் செல்வத்தில் முஸ்லீம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள்.

கடுமையான சர்ச்சை; இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்கு தர போகிறீர்களா. இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள்.

பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தை கணக்கிட்டு, அந்த செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மங்களத்தை கூட விட்டுவைக்காது, என்று பிரதமர் மோடி கடுமையாக பேசி இருக்கிறார்.

பாஜக தேசிய அளவில் புதிய (பழைய) ரூட் எடுத்துள்ளது. வளர்ச்சி பற்றி பேசாமல் மதம் பற்றி பேச பாஜக தொடங்கி உள்ளது.

தெலுங்கானா: அதேபோல் கடந்த வாரம் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று டிரெண்டானது. அதில் ஹைதராபாத் பாஜக வேட்பாளர் மாதவி லதா அங்கிருந்த மசூதியை நோக்கி அம்பு விடுவதைப் போலச் சைகை காட்டினார். இது மிகப் பெரியளவில் சர்ச்சையானது. பலரும் அவரது செயலுக்குக் கண்டனம் தெரிவித்தனர். அவரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று கூட சில குரல்கள் எழுந்தன.

இதற்கிடையே லதா மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 295A (மத நம்பிக்கைகளைப் புண்படுத்துவது) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் பேகம்பஜார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில், "வரும் லோக்சபா தேர்தலில் பாஜக சார்பில் லதா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டத்தில் இருந்தே அவர் முஸ்லிம் சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில், கருத்து தெரிவித்து வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+