Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்னங்க நடக்குது? மீண்டும் லைம்லைட்டிற்கு வந்த அண்ணாமலை.. சைலன்ட் ஆன நயினார்.. களம் மாறுது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசியலில் பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை மீண்டும் கவனிக்கப்பட்டு வருகிறார். அண்ணாமலை தனது பேட்டிகள் மூலம் தலைவராக இருந்த சமயத்தில் கவனிக்கப்பட்டார். இடையில் தலைவர் பதவியில் இருந்து விலகிய பின் அவர் அமைதியாக இருந்தார்.

சிறிய சிறிய பேட்டிகள் கொடுத்தாலும் பெரிய அளவில் கவனம் பெறக்கூடிய வகையில் பேசவில்லை. தற்போது மீண்டும் தனது பேட்டிகள் மூலம் கவனம் பெற தொடங்கி உள்ளார். பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடந்த சில வாரங்களாக அமைதி காத்து வருகிறார். பெரிதாக பொது மேடைகளில் அவர் பேசுவது இல்லை. மாறாக அண்ணாமலை மீண்டும் பேச தொடங்கி உள்ளார். சரியாக சொல்லப்போனால் தினம் ஒரு பேட்டி என்ற பழைய மாடலை மீண்டும் அண்ணாமலை கையில் எடுத்து உள்ளார்.

TTV Dinakaran Annamalai

அண்ணாமலை பேச்சு

நேற்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை பேசுகையில், பீகாரில் பெண்களை முன்னேற்றுவதற்காக சட்டசபைத் தேர்தலுக்கு முன் ரூ.10 ஆயிரம் நிதிஷ் குமார் கொடுத்தார்கள். காங்கிரஸ் கட்சி தேர்தலில் வென்ற பின் ரூ.2 லட்சம் கொடுப்போம் என்று அறிவித்தார்கள். இந்த இரண்டையும் பார்த்துவிட்டு மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்.

கடந்த 25 ஆண்டுகளில் 20 ஆண்டுகளாக முதல்வராக இருந்த நிதிஷ் குமார் இருந்து வருகிறார். வரலாறு காணாத தோல்வியை காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் கொடுத்திருக்கிறார்கள். அந்த தோல்வி 2026ல் தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் கட்சிக்கு எதிரொலிக்கும். இதனால் செல்வப்பெருந்தகை வயிற்றெரிச்சலில் இருக்கிறார். குடும்ப ஆட்சி வேண்டாம் என்ற மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள்.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக உள்ளது. அதனால் 2026ல் வரலாறு காணாத வெற்றியை என்டிஏ கூட்டணி பெறும். கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜக கட்சித் தலைவர்கள் பேசுவார்கள். நான் கருத்து சொல்வது சரியாக இருக்காது. பீகாரில் பாஜக கூட்டணி தர்மத்தை மதித்து நடக்கிறது. கொடுத்த வாக்கையும், மரியாதையையும் காக்க கூடிய கூட்டணி என்டிஏ கூட்டணி என்று தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை டிடிவி தினகரன் சந்திப்பு

பாஜக அதிமுகவின் NDA கூட்டணியில் இருந்து வெளியேறிய டிடிவி தினகரன் நேற்று திடீரென பாஜகவின் மூத்த தலைவர் அண்ணாமலையை சந்தித்தது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

பாஜக கூட்டணியிலும், பாஜக உள்ளேயும் கடுமையான உட்கட்சி மோதல் உச்சம் அடைந்து உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் அதிமுக - பாஜக கூட்டணியில் இருந்து அமமுக டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியேறினர். முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இவர்கள் வெளிப்படையாக் அறிவித்தனர். பாஜக அதிமுகவின் NDA கூட்டணியில் இருந்து வெளியேறிய டிடிவி தினகரன் நேற்று திருமண நிகழ்வு ஒன்றில் திடீரென பாஜகவின் மூத்த தலைவர் அண்ணாமலையை சந்தித்தது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

சில நிமிடங்களுக்கு மேலாக நடைபெற்ற இந்த சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பேசப்பட்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அண்ணாமலை - டிடிவி தினகரன் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களும் பரபரப்புக்கும் வித்திட்டுள்ளது. உண்மையில் கூட்டணி பற்றிதான் பேசப்பட்டதா.. அல்லது அண்ணாமலை வேறு ஏதாவது முயற்சிகளை செய்கிறாரா என்று விவாதங்கள் எழுந்தது.

தனது அடுத்த நினைப்பாட்டை இன்னும் சில மாதத்திற்கு பின் அறிவிப்பதாக கூறியிருந்தார். இப்படிப்பட்ட நிலையில்தான இந்த சந்திப்பு நடந்தது. திருமண நிகழ்ச்சி ஒன்றில் இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது.

அண்ணாமலை கடும் அட்டாக்

முதல்வர் ஸ்டாலினை இன்னொரு பக்கம் தாக்கி பேசிய அண்ணாமலை, பிரதமர் மோடி ராமேஸ்வரம் வந்த போது, தமிழக முதல்வர் ஸ்டாலின், அவரை அங்கு சென்று வரவேற்கவில்லை. புறக்கணிக்க வேண்டும் என்பதற்காகவே, திட்டமிட்டு நிகழ்ச்சி இருப்பது போல ஏற்பாடு செய்து கொண்டு ஊட்டிக்கு போனார். அடுத்ததாக, சமீபத்தில் பிரதமர் மோடி கோவைக்கு வந்தார். அப்போதும், மரியாதை நிமித்தமாகக் கூட அவரை வரவேற்க வரவில்லை. பிரதமர் மோடி, எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு செல்லும் போது, அங்கிருக்கும் முதல்வர்கள் பிரதமரை வரவேற்கின்றனர். பின்னர் பிரதமரைச் சந்தித்து பேசுகின்றனர்.

ஆனால், தமிழகத்தில் இப்படி தேவையில்லாமல் முரண்பட்டு நிற்பதாலேயே, முதல்வரால் மாநிலத்திற்கு எந்த நன்மையும் செய்ய முடியவில்லை. மத்திய அரசோடு சுமுகமான உறவை மாநில அரசு பேணினால், நிறைய நன்மைகளை தமிழகத்துக்கு கொண்டு வர முடியும். ஆனால், பிரதமரை சந்திப்பதை திட்டமிட்டு புறக்கணிக்கும் முதல்வர், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான அரைகுறை திட்ட அறிக்கையை மத்திய அரசு ஏற்க மறுத்தது என்றதும், அதை வைத்து அரசியல் செய்கிறார்.

எல்லாவற்றிலும் அரசியல் செய்தால், தமிழக மக்களுக்கான நன்மை தான் புறக்கணிக்கப்படும். கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பது போல, கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்ட அனுமதிக்காக டெல்லி சென்று பிரதமரை சந்திக்கப் போவதாக சொல்கிறார் முதல்வர். பிரதமர் மோடி தமிழகம் வரும்போது, அவரை புறக்கணித்து விட்டு டெல்லி சென்று அவரை சந்திக்க திட்டமிடுகிறார். இந்த நாடகமெல்லாம் யாரை ஏமாற்ற? மாநில அரசு, தொழில்நுட்ப வல்லுநர்களுடன் மறுபடியும் கலந்து ஆலோசித்து, மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான சரியான அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

இப்படி அண்ணாமலை தற்போது தனது பேட்டிகள் மூலம் மீண்டும் கவனம் பெற தொடங்கி உள்ளார். ஆனால் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடந்த சில வாரங்களாக அமைதி காத்து வருவது பல விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+