ஆட்டம் பாட்டத்துடன் பிரசாரத்தை துவங்கினார் குஷ்பு.. வெற்றி வாய்ப்பு பிரகாசமாக தெரிகிறதாமே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆயிரம்விளக்கு தொகுதி பாஜக வேட்பாளரான நடிகை குஷ்பு ஆயிரம் விளக்கு தொகுதியில் பிரசாரத்தை துவங்கினார்.

திமுக ஆட்சியில் இருந்தபோது மத்திய அரசின் நல்ல திட்டங்களை வரவிடாமல் தடுத்தார்கள் என்று அவர் கூறினார்.

நடிகையும், பாஜகவை சேந்தவருமான குஷ்பு, ஆயிரம்விளக்கு தொகுதியில் வேட்பாளராக களம் காண்கிறார். இந்த நிலையில் ஆட்டம் பாட்டத்துடன் தாரை, தப்பட்டை முழங்க தேர்தல் தனது தேர்தல் பிரசாரத்தை நுங்கம்பாக்கம் பகுதியில் தொடங்கினார் குஷ்பு.

BJP candidate Actress Khushbu has started campaigning in the Thousand Lights constituency

நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள வள்ளுவர் கோட்டம் அருகில் வைகுண்டபுரம் காமராஜபுரம் ஆகிய பகுதியில் உள்ள அனைத்து தெருக்களிலும் நடந்தே சென்று தாமரை சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார் குஷ்பு. மேலும் சிலருடன் குஷ்பு செல்பியும் எடுத்துக் கொண்டார். பல்வேறு இடங்களில் பெண்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர். பாஜக , அதிமுக மற்றும் கூட்டணி கட்சியின் முக்கிய நிர்வாகிகள் குஷ்புவுடன் உடன் சென்றனர்.

முன்னதாக நிருபர்களிடம் பேட்டியளித்த குஷ்பு கூறுகையில், ' ஆயிரம் விளக்கு தொகுதியில் எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக தெரிகிறது. ஆயிரம் விளக்கம் தங்களது கோட்டை என கூறிக் கொள்ளும் திமுக, இந்த தொகுதியில் என்ன செய்தது? திமுக ஆட்சியில் இருந்தபோது மத்திய அரசின் நல்ல திட்டங்களை வரவிடாமல் தடுத்தார்கள் என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+