பாஜக வர்த்தகர் அணி நிர்வாகி.. விற்றது கஞ்சா.. 4 கிலோ பொட்டலத்தோடு குணசேகரனை தூக்கிய போலீஸ்!
சென்னை: வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த பாஜக மாவட்ட நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே போதைப் பொருள் பழக்கம் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருவதாக பல்வேறு அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டி வரும் நிலையில் இது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் கடந்த சில மாதங்களாக தொடர் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் சென்னையில் அதிரடி கஞ்சா வேட்டை நடத்தப்பட்டது.
சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் (40). இவர் பாஜக வடசென்னை மேற்கு மாவட்ட வர்த்தக அணி மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து வருகிறார். இந்நிலையில், பாஜக நிர்வாகி குணசேகரன் வீட்டில் நடந்த சோதனையில் 4 கிலோ கஞ்சா மற்றும் எடை போடும் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது விஜய், ரகு ஆகிய இருவர் கஞ்சாவுடன் பிடிபட்டனர். அவர்களுக்கு எங்கிருந்து கஞ்சா கிடைத்தது என போலீசார் விசாரித்ததில் அவர்கள் குணசேகரன் பெயரைக் கூறி உள்ளனர்.
இதையடுத்து, பாஜக நிர்வாகி குணசேகரன் வீட்டில் ரெய்டு நடத்தி கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், குணசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டிலேயே கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த பாஜக மாவட்ட நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா!












Click it and Unblock the Notifications