Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாநாடு ஆரம்பிக்கிறதுக்குள்ள.. திமுகவை ‘குறி’ வைத்து அடிக்கும் பாஜக மகளிரணி.. இதை பார்த்தீங்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவின் மகளிர் உரிமை மாநாடு தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டில் அகில இந்திய பெண் தலைவர்கள் பங்கேற்றுள்ள நிலையில், மாநாட்டை நடத்தும் திமுகவை குறிவைத்து ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது பாஜகவின் மகளிர் அணி. பழைய கதைகளை வைத்து திமுகவை அட்டாக் செய்துள்ளது பாஜக.

மத்திய பாஜக அரசு, அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா, அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளதை யாராலும் மறுக்க முடியாது. நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் வர இருக்கும் சூழலில், பெண்களை ஈர்க்கும் வகையில் இந்த மசோதாவைக் கொண்டு வந்தது பாஜக. இந்த மசோதா உடனடியாக நிறைவேற்றப்படாத வகையில் பல நிபந்தனை அம்சங்கள் இதில் இருக்கின்றன, தேர்தலுக்காக பாஜக ஜிகினா வேலையைக் காட்டுகிறது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.

 BJP Mahila morcha targeting attack on dmk amid womens rights conference is going on

பெண்கள் வாக்குகள்: எது எப்படியோ, மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு மசோதா, பெண்கள் மத்தியில் தேர்தலில் நிச்சயம் பெரிய விளைவை ஏற்படுத்தும் என்பதை அனைத்து அரசியல் கட்சிகளும் உணர்ந்திருக்கின்றன. பெண்களின் ஓட்டுகளை வேட்டை ஆட பாஜக நிறைவேற்றிய இந்த மசோதாவை அனைத்து கட்சிகளும் ஆதரித்துள்ளன. அதேசமயம், இதில் பாஜக பல சூழ்ச்சிகளைச் செய்துள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.

இதை நாடு தழுவிய அளவில் எடுத்துச் சென்று, பாஜகவுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதற்காகவே, திமுக ஒரு பிளானை கையில் எடுத்தது. அதுதான் இன்று சென்னையில் நடைபெறும் திமுகவின் மகளிர் உரிமை மாநாடு. பெண்கள் மத்தியில், 'இந்தியா' கூட்டணி பக்கம் கவனத்தை திருப்பச் செய்யவேண்டும் என்பதற்காகவே, இந்தியா கூட்டணியின் அகில இந்திய பெண் தலைவர்களை ஒன்றிணைத்து திமுக இந்த மாநாட்டைக் கூட்டி இருக்கிறது.

 BJP Mahila morcha targeting attack on dmk amid womens rights conference is going on

திமுகவின் பிளான்: சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மெகபூபா முப்தி, சுப்ரியா சுலே, சுபாஷினி அலி, ஆனி ராஜா, சுஷ்மிதா தேவ், ராக்கி பிட்லன், லேஷி சிங், டிம்பிள் யாதவ் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். நாடு முழுவதுமுள்ள வலிமையான பெண் அரசியல் தலைவர்களைத் திரட்டி, பாஜகவுக்கு அறைகூவல் விடுக்கவுள்ளது திமுக. இன்று மாநாட்டில் அகில இந்திய தலைவர்கள், பாஜகவின் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்தும், பாஜக பெண்களுக்கு இழைக்கும் அநீதிகள் குறித்தும் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் சூழலில் தான், பாஜகவின் மகிளா மோர்ச்சா, இதை முன்னுணர்ந்து தங்களது அட்டாக்கை தொடங்கியுள்ளது. வானதி சீனிவாசன் தலைமையிலான பாஜக தேசிய மகளிரணி, தமிழ்நாடு வந்திருக்கும் சோனியா காந்தியையும், மகளிர் உரிமை மாநாடு நடத்தும் திமுகவையும் காட்டமாக விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவுகளைப் போட்டு விவாதங்களைக் கிளப்பி விட்டுள்ளது.

இறங்கி அடிக்கும் பாஜக: "2009ல் இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை காங்கிரஸ் அரசு ஆதரித்தது. இலங்கையில் 2009 போரில் 40,000க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா நிபுணர்கள் குழு மதிப்பிட்டுள்ளது. இலங்கையில் தமிழர்களின் உயிர் பலிகளுக்கு சோனியா காந்தியே பொறுப்பு" என்று விமர்சித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளது பாஜக மகளிரணி.

"இந்திரா காந்தியை தாக்கிய அரசியல் கட்சியுடனும் காங்கிரஸ் கை கோர்த்துள்ளது. 1977-ல் திமுகவினர் இந்திரா காந்தியின் தலையில் அடித்தார்கள், அவருக்குத் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அப்போது கருணாநிதி, பெண்களுக்கு பல காரணங்களுக்காக ரத்தம் வரும் என்று வக்கிரமாகப் பேசினார். ஆனால் இன்று காங்கிரஸும் திமுகவும் அதிகாரத்திற்காக ஒன்றாக இருக்கின்றன." என இன்னொரு பதிவில் குறிப்பிட்டுள்ளது பாஜக மகளிர் அணி.

மறக்க முடியுமா?: மேலும், "பெண்களுக்கு எதிரான ஏராளமான கொடும் செயல்களில் ஈடுபட்ட வரலாறு திமுகவுக்கு உண்டு. சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அவமானப்படுத்திய கட்சி திமுக. திமுக அமைச்சர் துரைமுருகன் ஜெயலலிதாவின் சேலையை இழுத்தார். திமுக எம்.எல்.ஏக்கள் முடியை இழுத்து அசிங்கப்படுத்தினர். ஸ்டாலின் தரப்பினரின் இந்த கேவலமான செயலை தமிழகம் மறக்க முடியுமா?" என பாஜக மகளிரணி சமூக வலைதள பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

மேலும் மற்றொரு பதிவில், "திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளது. 2022ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிராக 2,918 குற்றங்கள் பதிவாகியுள்ளதால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கணிசமாக அதிகரித்துள்ளன. 432 பாலியல் வன்கொடுமைகள், 29 வரதட்சணை கொடுமை பலிகள்" எனப் பட்டியலிட்டு விமர்சித்துள்ளது பாஜக மகளிர் அணி.

ஆக, திமுகவின் மகளிர் உரிமை மாநாடும், அதில் முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டிருப்பதும் நாடு முழுவதும் கவனிக்கப்படுவதால், பாஜக அவர்களைக் குறிவைத்து ஆட்டத்தை ஏற்கனவே தொடங்கி விட்டது. மகளிர் வாக்குகளைக் குறிவைத்து நடக்கும் இந்த அரசியல் ஆட்டத்தில் யார் கை ஓங்கும்? போகப்போகப் பார்க்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+