Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுகவில் கருப்பு ஆடு.. பாஜக பேசியதை ‘ஜெராக்ஸ்’ எடுத்துக் கொடுத்த ’ஸ்பை’! உஷாரான பாஜக.. பரபர தகவல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பாஜக கூட்டணியில் பேசப்பட்ட விஷயங்கள் திமுக தலைமைக்கு சிலரால் அப்படியே ஜெராக்ஸ் எடுக்கப்பட்டு கொடுக்கப்படுகிறதாம். பிரதமர் நரேந்திர மோடி வருவது குறித்த தகவல் கூட அதிமுக தரப்பில் இருந்து திமுகவுக்கு சென்று வெளியில் பரவியதாக சொல்லப்படுகிறது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த பாஜக தலைமை அதிமுக தரப்பில் இருந்து திமுகவுக்கு உளவு சொல்லும் நபர்கள் யார்? என்பது குறித்த விசாரணையில் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாகி வருகிறது. மார்ச் மாதத்திலேயே தேர்தல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.

இதனையடுத்து திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தற்போது கூட்டணி அமைப்பு மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. திமுகவைப் பொருத்தவரை, கூட்டணி தொடர்பான முடிவுகள் பெரும்பாலும் உறுதி செய்யப்பட்ட நிலையில் இருப்பதாகவே கூறப்படுகிறது.

BJP AIADMK DMK

2026 சட்டப்பேரவைத் தேர்தல்

தற்போது தொகுதி ஒதுக்கீடு குறித்த இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை மட்டுமே மீதமுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மேலும் சில கட்சிகளை இணைத்து கூட்டணிக்கு முழுமையான வடிவம் கொடுக்க வேண்டும் என்ற முயற்சியில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு வருகிறார். இந்தச் சூழலில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரனை மீண்டும் கூட்டணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என சில தரப்பினர் ஆலோசனை கூறினாலும், அதற்கு எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

அமித் ஷா

இதற்கிடையே, அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராகக் கருதப்பட்ட செங்கோட்டையன், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது, அதிமுகவுக்குள் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை திருச்சியில் உள்ள ஒரு ஹோட்டலில் ஒரிரு நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அந்த சந்திப்பின்போது பேசப்பட்ட சில தகவல்கள் பின்னர் கசிந்ததாகவும், அது பாஜக மேலிடத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

திமுகவுக்கு கசிந்த தகவல்

இதற்கிடையே, தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் வியூகங்கள் மற்றும் பிரசாரத் திட்டங்கள் தொடர்பான முக்கிய தகவல்கள், அதிமுகவைச் சேர்ந்த சிலரால் திமுக தலைமையிடம் தெரிவிக்கப்படுவதாக பாஜக மேலிடத்திற்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த தகவல்களை யார் கசியவிடுகின்றனர் என்பதை கண்டறிய, மத்திய உளவுத்துறை விசாரணையில் இறங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற நோக்கில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் பாஜக மேலிடம் விரிவான தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி

திமுகவுக்கு எதிரான பிரசாரம், தேர்தல் கால பயணங்கள், பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அதிமுக தலைமையிடம் பகிரப்படுவதாக கூறப்படுகிறது. அந்த தகவல்கள், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய மாநில நிர்வாகிகள் வரை கொண்டு செல்லப்படுகின்றன. ஆனால், அந்த விவரங்களில் சில, திமுக தலைமையிடம் சென்றுவிடுவதாக பாஜக உறுதிப்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக, பிரதமர் நரேந்திர மோடி இந்த மாத இறுதியில் கன்னியாகுமரிக்கு வருவதாக முதலில் தகவல் வெளியானது.

பாஜக மேலிடம்

ஆனால் பின்னர், அவர் மதுரைக்கு வந்து பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, திருப்பரங்குன்றம் தொடர்பான விவகாரத்தை பேச உள்ளதாக அதிமுக தரப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவல் வெளியில் கசிந்ததையடுத்து, மதுரையில் பிரதமர் வருகை பாதுகாப்பு பிரச்னைகளை ஏற்படுத்தும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, பிரதமரின் பொதுக்கூட்டம் மதுரையில் இருந்து சென்னைக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதுபோன்று, பல முக்கிய தகவல்கள் தொடர்ந்து திமுக தரப்புக்கு கசிவதாக பாஜக மேலிடம் உறுதிப்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி

இதன் பின்னணியில், புதிய கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பது, தொகுதி பங்கீடு உள்ளிட்ட விஷயங்களில் ஆலோசனை நடத்த, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டும் டெல்லி வருமாறு பாஜக மேலிடம் அழைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமியிடம், திமுகவுக்கு தகவல் கசிவது தொடர்பான சந்தேகங்களை அமித் ஷா தரப்பு நேரடியாக எடுத்துரைத்ததாகவும், இது குறித்து விசாரித்து தெளிவான தகவல் தருமாறு அதிமுக தலைமையிடமும் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணி

இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் வியூகங்களை திமுகவுக்கு உளவு சொல்வது யார் என்ற கேள்வி தற்போது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டறிய மத்திய உளவுத்துறை மூலம் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாக, பாஜக வட்டாரங்களில் இருந்து நம்மிடம் பேசிய நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+