அனுமதி மறுப்பை மீறி பாஜக பாதயாத்திரை..? “தெய்வத்தை வழிபட அனுமதி எதற்கு?” ராம சீனிவாசன் ஆவேசம்!
சென்னை : தெய்வத்தை வழிபட திராவிட மாடல் அரசு ஒன்றும் எங்களுக்கு அனுமதி வழங்க வேண்டிய அவசியமில்லை என பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் ஆவேசமாக கூறியுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் 2000 கோடி ரூபாயில் மாபெரும் ஜவுளி பூங்கா அமைக்கும் திட்டத்தை அறிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பாதயாத்திரை நடத்தப்போவதாக பாஜக அறிவித்திருந்தது.
பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம சீனிவாசன் தலைமையில் சாத்தூர் பத்ரகாளியம்மன் கோவில் முதல் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் வரை பாதயாத்திரை பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டனர். இந்நிலையில், இந்த பாதயாத்திரைக்கு தமிழ்நாடு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

பாதயாத்திரை
இதையடுத்து, திட்டமிட்டபடி பாதயாத்திரையை நடத்துவோம் என அறிவித்துள்ளார் ராம சீனிவாசன். இதுதொடர்பாக தமிழ்நாடு பாஜக மாநில பொதுச்செயலாளர் இராம ஶ்ரீநிவாசன் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், "விருதுநகர் மாவட்டத்திற்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மிகப்பெரிய ஜவுளி பூங்காவை 2000 கோடி முதலீட்டில் அறிவித்திருக்கிறார். லட்சக்கணக்கான விருதுநகர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை இந்த ஜவுளி பூங்கா உயர்த்தும். புதிய வேலை வாய்ப்புகளை ஆயிரக்கணக்கில் உருவாக்கும்.

அனுமதி மறுப்பு
பொருளாதாரம் உயரும், மக்கள் கைகளில் பணம் புரளும் இத்தகைய மகத்தான திட்டத்தை அறிவித்த பிரதமருக்கு நன்றி சொல்லி சாத்தூரில் இருந்து இருக்கன்குடி அம்மன் கோவில் வரை எனது தலைமையில் பாதயாத்திரை நடைபெற உள்ளது. இன்று நடக்க இருக்கும் இந்த பாதயாத்திரைக்கு திமுக அரசு தடை விதித்திருக்கிறது. ஆலயம் சென்று வழிபடுவதற்கு அனுமதி மறுத்த ஒரே அரசு திமுக அரசு மட்டுமே. அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் கூட நடக்காத அட்டூழியம் இது. "அம்மனை நீ சென்று வழிபட அனுமதி மறுக்கிறேன்" என்று காவல்துறை கடிதம் மூலம் தெரிவித்த ஒரே அரசாங்கம் திமுக அரசாங்கம்.

யாத்திரை நடந்தே தீரும்
இதை நாம் ஏற்றுக் கொண்டால் ஒரு தமிழனாக, ஒரு இந்துவாக வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டு வாழ்வதில் அர்த்தமே இல்லை. என் மாரியம்மனை நான் சென்று வழிபட தடை விதிக்கிற அரசின் ஆணையை நாங்கள் மதிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதனால் எனது தலைமையில் திட்டமிட்டபடி அம்மனுக்கான நேர்த்திக் கடன் நிறைவேற்றும் பாத யாத்திரை நடந்தே தீரும். புனிதமான மாலைகள் அணிந்தும், விரதம் இருந்தும், அக்னி சட்டி எடுத்தும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள். பிரதமர் நரேந்திர மோடியின் உருவப்படத்தை வைத்து அவருக்கு நன்றி கூறி பாதயாத்திரை நடத்துவார்கள்.

தெய்வத்தை வழிபட அனுமதி தேவையா
இந்த காவல்துறையால் ஒன்றே ஒன்று மட்டும் தான் செய்ய முடியும். அதிகபட்சமாக கைது செய்து அடைக்க முடியும் அதற்கும் நாங்கள் தயார். வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டு அதை வேடிக்கை பார்ப்பதற்கு அல்ல இந்த இயக்கம், எங்கள் அன்னை கருமாரியை வழிபட காவல்துறையின் அனுமதி தேவை இல்லை. தெய்வத்தை வழிபட திராவிட மாடல் அரசு அனுமதி வழங்க வேண்டிய அவசியமில்லை" எனத் தெரிவித்துள்ளார் பேராசிரியர் ராம சீனிவாசன். காவல்துறை அனுமதி மறுத்திருப்பதை மீறி பாதயாத்திரை நடத்தப்போவதாக பாஜக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications