தமிழ்நாடு வெர்சஸ் தமிழகம்.. நீங்க சொன்னா தப்பில்லை.. ஆளுநர் சொன்னா தப்பா? பாஜக பரபரப்பு ட்வீட்
சென்னை: தமிழகம் என தமிழக அரசே அழைத்தால் தவறில்லை ஆனால் அதை ஆளுநர் சொன்னால் தவறா என பாஜகவின் மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் நடந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களை கவுரவிக்கும் விதமாக ஆளுநர் மாளிகை அவர்களை ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டி பேசினார்.
அப்போது அவர் தமிழ்நாடு தேசத்தின் அங்கம் அல்ல. தேசத்தின் ஒருங்கிணைந்த பகுதி என சொல்லி வருகிறார்கள். நாடு தழுவிய அளவில் எந்த ஒரு விஷயத்தை முன்னெடுத்தாலும் அதற்கு தமிழ்நாடு மட்டும் மறுப்பு தெரிவிப்பது வாடிக்கையாகிவிட்டது.

மோசமான கட்டுக் கதைகள்
இதற்கு நிறைய தவறான, மோசமான கட்டுக் கதைகளை உருவாக்கியுள்ளனர். இவற்றை உடைக்க வேண்டும். தமிழ்நாடு என்பது நமது நாட்டின் ஆன்மா, அடையாளம். குறிப்பாக தமிழ்நாடு என சொல்வதை விட தமிழகம் என சொல்வதுதான் சரியாக இருக்கும் என ஆளுநர் பேசியிருந்தார்.

தமிழ்நாடு
இதில் தமிழ்நாட்டை தமிழ்நாடு என சொல்வது சரியாக இருக்கும் என பேசியதற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. சமூகவலைதளங்களிலும் #Tamilnadu எனும் ஹேஷ்டேக்குகள் டிரென்டாகி வருகின்றன. அது போல் மெட்ராஸ் மாகாணத்தை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்ய நாடாளுமன்றத்தில் அறிஞர் அண்ணா கோரிக்கை விடுத்த போது மத்திய அரசு என்ன பதில் கூறியது என்பது குறித்து டிரென்டாகி வருகிறது.

தமிழ்நாடு பெயர் மாற்றம்
தமிழ்நாடு பெயர் மாற்ற கோரிக்கையின் போது அறிஞர் அண்ணா நாடாளுமன்றத்தில் அளித்த பதிலில் மக்களவையை லோக்சபா என்று அழைப்பதன் மூலம் மாநிலங்களவையை ராஜ்யசபா என அழைப்பதன் மூலம் குடியரசுத் தலைவரை ராஷ்டிரபதி என அழைப்பதன் மூலம் உங்களுக்கு என்ன கிடைத்ததோ அதுதான் தமிழ்நாடு என அழைப்பதன் மூலம் எங்களுக்கு கிடைக்கிறது என அண்ணா சொன்னார்.

தமிழ்நாடு பெயர்
தமிழ்நாடு என்ற பெயரை உச்சரிப்பதிலும் பயன்படுத்துவதிலும் அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட்டுகள், விடுதலைச் சிறுத்தைகள், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் ஆகிய கட்சிகள் ஒற்றுமையாக உள்ளன. இந்த நிலையில் பாஜக மாநில பொருளாளராக உள்ள எஸ்.ஆர்.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ்நாடு என்ற பெயருக்கு எதிரான விஷயத்தை பதிவிட்டுள்ளார்.

தலைநிமர்ந்த தமிழகம்
அதில் "தலைநிமர்ந்த தமிழகம்.. மனங்குளிருது தினந்தினம்" என தமிழக அரசின் விளம்பரம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை காண்பித்து இவர்கள் தமிழகம் என அழைத்தால் தவறிலை. அதையே ஆளுனர் சொன்னால் தவறு. #கழகம் உடைத்தால் மண் குடம். காவிகள் உடைத்தால் பொன் குடமா? #திமுக_நாடக_கம்பெனி என எஸ்.ஆர். சேகர் காட்டமாக விமர்சித்துள்ளார்.
-
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார்











Click it and Unblock the Notifications