திருமாவுக்கு மதம்... தமிழகத்தில் ஆண்டி ஹிந்து கவர்மெண்ட்.. கொந்தளிக்கும் எச்.ராஜா

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருமாவளவனுக்கு மதம் பிடித்து உள்ளது எனவும், தமிழகத்தில் திமுக தலைமையில் நடப்பது ஆண்டி ஹிந்து கவர்மெண்ட் என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கூறியுள்ளார்.

சென்னை தியாகராயநகரில் உள்ள ராமகிரிஷ்ணா மேல்நிலைப்பள்ளியில் யா.சு.கண்ணன் எழுதிய "நேரு-ஒரு மாயையின் மறுபக்கம்" என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த புத்தக வெளியீட்டு விழாவில் பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் H.ராஜா கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேசிய எச்.ராஜா, நேருவின் தெளிவற்ற பார்வையினால் தான் நாடு இன்று பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது என்றார்.

சீனாவின் தயாரிப்பில் கலப்படமில்லாத சுத்தமான ஒன்று கொரோனா மட்டும்தான் எனக் கூறிய அவர்ம் "நேரு-ஒரு மாயையின் மற்றுபக்கம்" புத்தகத்தை தமிழக காங்கிரஸ் கட்சியினர் படிக்க வேண்டும் என்றும், நீதிக்கட்சி ஆட்சியில் ஒரு பட்டியலினத்தவர் கூட அமைச்சரவையில் இருந்ததில்லை , அவர்கள் சமூக நீதிக்கு ஆதரவாளர்களா? எனவும் காங்கிரஸ் கட்சிதான் நாடு பிளவுபட காரணமாக இருந்ததவும் கூறினார்.

இந்தியாவின் முதல் ஊழல்

இந்தியாவின் முதல் ஊழல்

நேருவின் நிர்பந்ததால் எடுக்கபட்ட முடிவுகளால் தான் நாட்டில் பிரிவினை ஏற்பட்டது எனவும் காஷ்மீரின் பிரச்சனைக்கு காரணம் நேருதான் என்ற அவர், நேருவை பற்றி பள்ளியில் பேசி பரிசுகள் வென்று உள்ளேன், எங்கள் மாமா நேரு, ரோஜாவின் ராஜா என்றெல்லாம் பேசி இருக்கிறேன் ஆனால் அதற்கு பிராயசித்தமாக இப்போது எதிர்த்துப் பேசுகிறேன் எனக்கூறினார். சுருக்கமாகச் சொல்லப்போனால் நேரு என்னை விட மோசமான சுபாவம் கொண்டவர் எனவும், சுதந்திர இந்தியாவில் முதல் ஊழல் ராணுவத்திற்கு ஜீப் வாங்கியது நேருவின் அமைச்சரவையில்தான் நடந்தாக கூறினார்.

திருமாவளவனுக்கு மதம்

திருமாவளவனுக்கு மதம்

நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா, வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இனைப்பது தவறில்லை எனவும், வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைப்பது பற்றிய வதந்தி பரப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும், திருமாவளவன் பேசியது அனைத்தும் பொய் எனவும், திருமாவளவனுக்கு மதம் பிடித்து உள்ளது என்றார்.

முதல்வர் ஸ்டாலின் குறித்து விமர்சனம்

முதல்வர் ஸ்டாலின் குறித்து விமர்சனம்

தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியபோது, நாங்கள் என்ன எலிகளா எனக் கேட்டவர் ஸ்டாலின் எனக் கூறிய எச்.ராஜா, ஆனால் தற்போது எல்லோரையும் தடுப்பு ஊசி செலுத்த சொல்கிறார் எனவும், தற்போது நடைபெறுவது கிறிஸ்தவர்களின் ஆட்சி என முதல்வர் ஸ்டாலின் அவரது வாயாலே கூறியுள்ளார் என்றார்.

ஆண்டி ஹிந்து கவர்மெண்ட்

ஆண்டி ஹிந்து கவர்மெண்ட்

முதல்வர் ஸ்டாலின் கிறிஸ்தவர்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார் எனக் கூறிய எச்.ராஜா, தமிழகத்தில் CSI ஆட்சிதான் நடக்கிறது எனவும், இது ஆன்டி ஹிந்து கவர்ன்மெண்ட் என்றார். மேலும், தினம் ஒரு கோயிலை இடிப்பது என ஸ்டாலின் முடிவு செய்துள்ளார் எனவும், தொடர்ந்து கோயில்கள் இடிக்கப்பட்டால் போராட்டம் வெடிக்கும் எனக் கூறினார்.

அமைச்சர் சேகர்பாபு

அமைச்சர் சேகர்பாபு

இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உதயநிதி ஸ்டாலின் பின்னால் செல்லவும், தங்க கட்டிகளை பிஸ்கட் ஆக மாற்றுவதையும் வேலையாக வைத்திருக்கிறார் எனக் கூறிய எச்.ராஜா, ஈஷா யோகா மையம் ஆக்கிரமிப்பு செய்யவில்லை என்று தெரிந்தும் மீண்டும் ஆய்வு நடத்த போவதாகக் கூறி உள்ளார்கள் எனவும், நானே ஈசா யோகா மையத்தில் ஆய்வு செய்துள்ளேன் அங்கு ஆக்கிரமிப்பு செய்யப்படவில்லை எனவும் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+