அடடே!! மாரிதாசுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகிறாரா சுப்பிரமணியன் சுவாமி? அவரே சொன்ன பதிலை பாருங்க
சென்னை: யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது சார்பில் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும் ராஜ்ய சபா எம்பியுமான சுப்பிரமணிய சுவாமி ஆஜராக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், இதற்கு அவரே பதில் அளித்துள்ளார்.
மதுரையை சேர்ந்த மாரிதாஸ் யூடியூப்பில் Maridhas answers என்ற பக்கத்தை நடத்தி வந்தார். அதில் அவர் தொடர்ச்சியாக திமுகவை விமர்சித்து வீடியோக்களை வெளியிட்டு வந்தார்
இந்தச் சூழலில், கடந்த சில வாரங்களுக்கு முன் பாலகிருஷ்ணன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் யூடியூபர் மாரிதாஸை தமிழ்நாடு போலீசார் மதுரையில் வைத்து கைது செய்தனர்.

முதல் கைது
மாரிதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் காஷ்மீருடன் தமிழ்நாட்டை ஒப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் ட்வீட் ஒன்றைச் செய்திருந்தார். இந்த ட்வீட்டை அவர் சிறிது நேரத்திலேயே டெலிட் செய்துவிட்டார். இருப்பினும் இந்த ட்வீட் குறித்து பாலகிருஷ்ணன் அளித்த புகாரின் அடிப்படையிலேயே மாரிதாஸ் கைது செய்யப்பட்டார். வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியது, சமூக நல்லிணக்கத்திற்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மற்றொரு வழக்கில் கைது
இந்தச் சூழலில் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் மாரிதாஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். இருப்பினும், அதற்குள் தனியார் தொலைக்காட்சி அளித்த போலி மின்னஞ்சல் தொடர்பான வழக்கிலும் மாரிதாஸ் கைது செய்யப்பட்டார்.

மேலும் ஒரு புகார்
இந்த வழக்கில் வரும் டிச. 27ஆம் தேதி மாரிதாஸை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இந்தச் சூழலில் நேற்றைய தினம் (டிச. 21) சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்த மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தொடர்ந்து தவறான தகவல்களைப் பரப்பி வரும் மாரிதாஸ் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கும்படி மேலும் ஒரு புகாரை அளித்தார்.

பாஜக எதிர்ப்பு
இப்படி தொடர்ச்சியாக பல்வேறு வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவர் சிறையில் இருந்து வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாரிதாஸ் கைது செய்யப்பட்டதற்கு பாஜக தொடக்கம் முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மாரிதாஸை கைது செய்ய போலீசார் அவரது வீட்டிற்குச் சென்ற போதே, சரவணன் தலைமையில் பாஜகவினர் அங்குக் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video

தமிழக பாஜக
அதேபோல தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் மாரிதாஸ் கைதுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "திமுக ஐடி அமைப்பைச் சேர்ந்தவர்கள், நிர்வாகிகள், மற்ற திராவிட அமைப்பினர் என்னவெல்லாம் பேசியுள்ளனர் தெரியுமா? பிபின் ராவத் உயிரிழப்பு குறித்துப் பல பொய் கருத்துகளை அவர்கள் பதிவிட்டுள்ளனர். அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால், இங்குள்ள அரசுக்கு அதைக் கண்டுகொள்வதில்லை. தேசியவாதி ஒருவர், கருத்துச் சுதந்திரத்திற்கு அருகில் ஒரு கருத்தைச் சொல்லும் போது அதைத் தேவையின்றி பிரச்சினை ஆக்குகிறார்கள்" என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தார்

சுப்பிரமணிய சுவாமி
இதனிடையே இந்த வழக்கில் மாரிதாஸ் தரப்பில் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும் ராஜ்ய சபா எம்பியுமான சுப்பிரமணிய சுவாமி ஆஜராக உள்ளதாகத் தகவல் வெளியானது. இது தொடர்பாக இணையத்தில் பலரும் கருத்து தெரிவிக்க அது வைரலானது. இந்தச் சூழலில் ட்விட்டர் தளத்தில் ஒருவர் நேரடியாகச் சுப்பிரமணிய சுவாமியை டேக் செய்து இது தொடர்பாக ட்வீட் செய்தார்.

நறுக் பதில்
அதற்குப் பதிலளித்துள்ள சுப்பிரமணிய சுவாமி, இது பொய்யான தகவல் என மறுத்து No truth in this என்று பதிலளித்துள்ளார். சுப்பிரமணிய சுவாமியின் இந்த ட்வீட் தற்போது இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது
-
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
ஆதரவாளர்களுடன் சரத்குமார் ரகசிய ஆலோசனை.. மீண்டும் உதயமாகிறதா சமக.. அதிர்ச்சியில் பாஜக -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்! -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்! -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2!












Click it and Unblock the Notifications