எல்.முருகன் சொல்வது உண்மைதான்.. மதிமுகவுடன் பேச்சுவார்த்தையா? நயினார் நாகேந்திரன் சொன்ன பாயிண்ட்!
சென்னை: தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் மட்டுமே உள்ளது. இந்த தேர்தலுக்கு வழக்கத்திற்கும் முன்பாக அரசியல் கட்சிகள் வேகமாக செயல்பட்டு வருகின்றன. ஏற்கனவே திமுக கூட்டணி இணக்கமாக இருந்து வரும் சூழலில், அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பாமகவை கூட்டணியில் இணைக்க பாஜக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றன.
எல்.முருகன் பேட்டி
இந்த நிலையில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஒரு முக்கியமான தகவலை கூறி இருக்கிறார். அது தமிழக அரசியல் களத்தில் விவாதப் பொருளாக மாறி இருக்கிறது. அதில், திமுக கூட்டணியில் இருந்து ஒரு கட்சி பாஜக கூட்டணிக்கு வருவதற்கு தயாராக இருக்கிறது. இதற்காக அந்த கட்சியுடன் பாஜக பேசி வருகிறது. இன்னும் 3 மாதங்களில் பாஜக கூட்டணி விரிவடையும்.

1999 கூட்டணி
இந்த கட்சி வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த கட்சி தான். புதிதாக வரவிருக்கும் கட்சிகள் யார் என்று பொறுத்திருந்து பாருங்கள் என்று தெரிவித்தார். எல்.முருகனின் வார்த்தைப்படி அப்போதைய திமுக - பாஜக கூட்டணியில் இருந்த கட்சிகள் என்றால், பாமக, மதிமுக, எம்ஜிஆர் அண்ணா திமுக, தமிழக ராஜீவ் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தான். அதில் மதிமுக மட்டுமே இப்போது திமுக கூட்டணியில் உள்ளது.
மதிமுக - பாஜக கூட்டணி?
இதனால் பாஜக கூட்டணிக்கு மதிமுக செல்கிறதா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மாநிலங்களை தேர்தலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு திமுக வாய்ப்பு அளிக்கவில்லை. இதனால் திமுக - மதிமுக இடையிலான உறவில் சிக்கல் இருந்து வருவதாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
நயினார் நாகேந்திரன் பேட்டி
அப்போது எல்.முருகனின் கருத்து பற்றிய கேள்விக்கு நயினார் நாகேந்திரன், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இன்னும் ஏராளமான கட்சிகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பாஜக தரப்பில் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறது. அதனை உடனடியாக சொல்ல முடியாது. திமுக கூட்டணியில் இருந்து வருவார்களா என்ற கேள்விக்கு, இப்போது பதில் சொல்ல முடியாது.
கூட்டணி ஆட்சியா?
தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் ஆட்சி அமையும். எங்கள் கூட்டணி கட்சியின் ஆட்சி நடக்கும். நாங்கள் கூட்டணி அமைத்து தேர்தலில் வெற்றிபெறுவோம். அதிமுக தலைமையில் ஆட்சி அமையும். கூட்டணி கட்சியின் ஆட்சி நடக்கும். கூட்டணி ஆட்சி குறித்து பிறகு பேசிக் கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications