துரைமுருகன் அடிக்கும் பல்டிகள்.. ஒலிம்பிக் போயிருந்தா தங்கம் இவருக்கு தான்.. கலாய்த்த அண்ணாமலை
சென்னை: கர்நாடகா விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகன் எவ்வளவு பல்டி அடிக்கிறார் என்று பாருங்கள். அவரை கொண்டு சர்க்கஸில் விட்டால் அவர் அடிக்கிற பல்டிகளுக்கு பாரீசில் நடக்கிற ஒலிம்பிக்கில் பல தங்க பதக்கங்களை பெற்று இருப்பார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசினார். மேலும் தமிழகத்திற்கு தண்ணீர் தரமாட்டோம் என்று சொன்ன கர்நாடக அரசை கண்டித்து காங்கிரஸ் போராட்டம் செய்யுமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- துரைமுருகன் எவ்வளவு பல்டி அடிக்கிறார் என்று பாருங்கள். அவரை கொண்டு சர்க்கஸில் விட்டால் அவர் அடிக்கிற பல்டிகளுக்கு பாரீசில் நடக்கிற ஒலிம்பிக்கில் பல தங்க பதக்கங்களை பெற்று இருப்பார். மேகதாது அணைக்கு அமைச்சர் துரைமுருகனை தான் பாரீசில் நடக்கின்ற ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பியிருக்க வேண்டும்.

இப்படியும் போகமாட்டாராம்.. சித்தராமையாவையும் திட்டமாட்டாராம்.. காங்கிரஸ் என்ற வார்த்தை வாயில் வராதாம். சரி இதையெல்லாம் விட்டுடுவோம். தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய தண்ணீரை பெறவும், தமிழ்நாட்டு மக்களுக்கு உள்ள உரிமையை பாதுகாக்கவும் நாங்கள் எப்போது அரசோடு ஒன்றாக பயணிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
ஆனால் அமைச்சர் துரை முருகன் கர்நாடகா அணை கட்டுவதில் மத்திய அரசு மீது சந்தேகம் வருது என்று சொல்கிறார். எனக்கு இப்போது துரைமுருகன் மீது சந்தேகம் எழுகிறது. திமுக மீது சந்தேகம் வருகிறது. காங்கிரசை எதிர்த்து கர்நாடகாவில் திமுக பேசினால், அவர்கள் கர்நாடாகாவில் இருக்கின்ற ஒரு அமைப்பை தூண்டி விடுவார்கள். அவர்கள் அங்குள்ள தமிழ்க்காரர்களின் கம்பெனிகளை முழுவதும் கல்லெடுத்து அடிப்பார்கள்.
அப்போது அங்கு நிறைய கம்பெனிகள் வைத்திருக்கும் திமுக காரர்களுக்கு தான் பயம். எனவே தான் அவங்க இப்படி பேசுறாங்களோ என்று எனக்கு சந்தேகம் வருகிறது. கலைஞர் குடும்பத்தை சேர்ந்த சில பேர் பெங்களூரில் கம்பெனிகள் வைத்திருக்கின்றனர். அதனால் தான் பட்டும் படாமல்.. அப்படியே அனைத்து கட்சி கூட்டம். அது இது.. என செய்கிறார்கள். மத்திய அரசை போய் எதற்கு பார்க்க வேண்டும். இதில் மத்திய அரசின் தலையீடு எங்கே இருக்கிறது?.. இது மாநில அரசின் பிரச்சினை.
கர்நாடகா தண்ணீர் தரமாட்டேன் என்று சொல்கிறது. தண்ணீர் தரவில்லை என்றால் கூட்டணியில் இருக்க மாட்டோம் என்று சொல்ல வேண்டியது தானே. ஆனால் இதை செய்ய மாட்டார்கள். ஆனால் மத்திய அரசை ஏன் பார்க்க வேண்டும். மத்திய அரசு ஏதாவது சொல்லியது என்றால் அங்கே போய் நாம் பேசலாம். அவர்கள் தான் தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் மேகதாது அணை கட்ட விடமாட்டோம் என்று தெளிவாக சொல்லிவிட்டார்களே.
அப்புறம் எதற்கு மத்திய அரசு மீது குறை சொல்ல வேண்டும். துரைமுருகன் எவ்வளவு பல்டி அடிக்கிறார் என்று பாருங்கள். அவரை கொண்டு சர்க்கஸில் விட்டால் அவர் அடிக்கிற பல்டிகளுக்கு பாரீசில் நடக்கிற ஒலிம்பிக்கில் பல தங்க பதக்கங்களை பெற்று இருப்பார். அமைச்சர் துரைமுருகனை தான் பாரீசில் நடக்கின்ற ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பியிருக்க வேண்டும். மேகதாது அணை விஷயத்தில் அப்படியே பட்டும் படாமல் மத்திய அரசு மீது திருப்பி விடுகிறார்.
நாங்கள் தேசிய கட்சி கூட்டணி ஆட்சியில் இருந்த போது 2021 ஆம் ஆண்டு கர்நாடகாவை எதிர்த்து போராட்டத்தில் ஈடுப்பட்டோம். தோழமை கட்சி நம்மை தப்பாக நினைப்பார்கள் என்று நாங்கள் பயப்படவில்லை. ஆனால் தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி இப்போது கர்நாடகாவுக்கு எதிராக போராட சொல்லுங்கள் பார்க்கலாம். போராட மாட்டார்கள். ஏன் முதல்வர் எவ்வளவு பேசுகிறார். கர்நாடக முதல்வர் சித்தராமையாவை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் போட சொல்லுங்கள் பார்க்கலாம். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.












Click it and Unblock the Notifications