Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜக குட்டு வெளிப்பட்டுவிட்டது? மனதில் உள்ளதை அமித்ஷா சொல்கிறார்? : ஆளூர் பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அம்பேத்கர் நினைவிடங்களைப் புனரமைப்பது அல்ல சமூகநீதி அரசியல் என்றும் பாஜக செய்வது அடையாள அரசியல் என்றும் ஆளூர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றத்தில் அம்பேத்கரைப் பற்றி இழிவுபடுத்தும் விதமாக உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசி விட்டார் என காங்கிரஸ் கட்சி கொதித்துப் போய் போராட்டம் நடத்தி வருகிறது. இரண்டு நாட்கள் முன்னதாக மாநிலங்களவையில் பேசிய அமித்ஷா, 'எதற்கெடுத்தாலும் அம்பேத்கர் பெயரையே சொல்கிறார்கள். அது ஒரு பேஷனாக மாறிவிட்டது. அதற்குப் பதில் பகவான் பெயரை உச்சரித்தால் அடுத்த ஜென்மத்தில் சொர்க்கமாவது கிடைக்கும்’ என்று கூறியிருந்தார்.

amit shah ambedkar

இதுதான் சர்ச்சைக்கு முக்கியமான காரணமாக மாறியது. ஆனால், இந்தச் சர்ச்சைக்குப் பின்னர் அன்று மாலையே செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த அமித்ஷா, “அம்பேத்கர் நினைவிடம் இருக்கும் சைத்ய பூமி நிலப் பிரச்சினையை பாஜகதான் தீர்த்து வைத்தது. டெல்லி அல்லிபூர் சாலையில் அவர் வாழ்ந்த வீட்டை பாஜகதான் புனரமைத்தோம். அதேபோல் லண்டனில் அவர் வாழ்ந்த வீட்டை மத்திய அரசு கையகப்படுத்தி இருக்கிறது.


அம்பேத்கருக்குப் பாரத ரத்னா விருதைக் கொடுக்காமல் வேடிக்கை பார்த்தது காங்கிரஸ். அந்த விருதுகளை நேரு 1955 இல் தனக்குத் தானே வழங்கிக் கொண்டார். 1971இல் இந்திரா காந்தி இந்த விருதை அவருக்கே வழங்கிக் கொண்டார். 1990இல் தான் அம்பேத்கருக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டது. அப்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெறவில்லை” என்று நீண்ட புள்ளி விவரங்களைக் கொடுத்திருந்தார்.


ஆனாலும் இந்தச் சர்ச்சை இந்தியா முழுவதும் எதிரொலித்து வருகிறது. கர்நாடக முதல்வர் சித்தராமையா, 'அம்பேத்கர் இல்லை என்றால் மோடி பிரதமராகி இருக்க முடியாது’ என்று கூறியுள்ளார். விஜய் தன் கண்டனத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

தமிழ்நாட்டில் இப்போதுதான் அம்பேத்கரை வைத்து ஒரு அரசியல் பூகம்பத்தை ஆதவ் அர்ஜுனா மற்றும் விஜய் கிளப்பி இருந்தார்கள். அதைத்தொடர்ந்து அடுத்த சர்ச்சையை விசிக கையில் எடுத்துள்ளது. அமித்ஷா பேச்சு குறித்து மின்னம்பலம் அலைவரிசைக்குப் பேசி இருக்கும் விசிக சட்டமன்ற உறுப்பினர் ஆளுர் ஷாநவாஸ், "அம்பேத்கர் சமரசம் செய்திருந்தார் ஜனாதிபதியாகி இருப்பார். பிரதமராகக்கூட ஆகியிருப்பார். அவர் சமரசம் செய்யவில்லையே? பாஜக பேருக்குச் சமூகநீதி பேசுகிறது. பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த முர்முவை குடியரசுத் தலைவராக்கிவிட்டோம். பிசி ஒருவரைப் பிரதமராகிவிட்டோம் என பாஜக சொல்கிறது. மணிப்பூர் பற்றி எரியும் போது முர்மு அமைதியாக உட்கார்ந்திருக்கிறாரே?

இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவான போது பாஜக என்ற கட்சியே இல்லை. அது கடந்த 40 ஆண்டுகளாகவே இருக்கிறது. அன்றைக்கு இருந்த காங்கிரசில் வலதுசாரி கொள்கைக்கொண்டவர்கள் இருந்தார்கள். அதனால்தான் காங்கிரஸைச் சேர்ந்த பட்டேலுக்கு பாஜக சிலை வைக்கிறது. அம்பேத்கர் இந்து கோட் பில் கொண்டுவந்தார். அதை நேரு ஏற்றுக் கொண்டார். அதற்கு தடையாக இருந்தது நேருவைச் சுற்றி இருந்த வலதுசாரிகள்தான். அவர்கள் இன்றைக்கு உள்ள பாஜகவின் கொள்கையை அன்றைக்குக் காங்கிரசுக்குள் இருந்து பேசினார்கள்.

அந்த சண்டையில்தான் பெரியார் கட்சியை விட்டு வெளியேறினார். அவர் சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்து அடுத்து வந்தால் 100 ஆண்டுகள் நிறைவடையப் போகிறது. அம்பேத்கர் வீட்டைப் புனரமைத்தால் போதுமா? அவர் கொள்கையைச் செயல்படுத்த வேண்டாமா? மத அடிப்படையில் இந்த நாட்டை பாஜக பிளக்கிறது. அதற்காகத்தான் குடியுரிமை சட்டத்தைத் திருத்துகிறது. காஷ்மீர் 370 சட்டப் பிரிவை நீக்கினார்களே முற்போக்கான நடவடிக்கையா?

அமித்ஷா அம்பேத்கரை எங்கே வைத்திருக்கிறார்? அவர் பகவானை எங்கே வைத்திருக்கிறார் என்பதுதான் முக்கியம். அவர் மனதில் உள்ளதை வெளிப்படையாகப் பேசி இருக்கிறார். பாஜக குட்டு வெளிப்பட்டுவிட்டது” என்று பேசி இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+