யார் அந்த "கருப்பு ஆடு".. ஒரே ஒரு டிவீட்தான்.. மொத்த காங். கூடாரமும் கன்பியூஸ்.. கிளறி விட்ட குஷ்பு

காங்கிரஸ் கட்சியை சரமாரி விமர்சித்துள்ளார் குஷ்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நான் காங்கிரஸை விட்டு போனதால் நிறைய காங்கிரஸ் நண்பர்கள் வருத்தப்படுகிறார்கள்.. மனம் புண்பட்டுள்ளனர்.. ஆனால் இதை வெளியில் சொல்லிடாதீங்க.. உங்களை கட்சி காயப்படுத்தி விடும் என்று குஷ்பு ஒரு ட்வீட் போட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

காங்கிரஸ் கட்சியில் இருந்தபோதே, சகட்டுமேனிக்கு சொந்த கட்சியை விமர்சித்து வந்த குஷ்பு, இப்போது மேலும் தாறுமாறாக கிழித்து வருகிறார்.. பாஜகவுக்குள் குஷ்பு சென்றதில் இருந்து 2 விஷயங்களில் தெளிவாக இருக்கிறார்.

ஒன்று, திருமாவளவனுடன் மோதுவது, மற்றொன்று காங்கிரஸை வறுத்தெடுப்பது.. தெருவுக்கு தெரு தாமரை மலரும் என்று சொன்ன குஷ்பு, அந்த தாமரை மலர வைக்கும் வழியை விட்டு, விசிக, காங்கிரஸ் என்ற இரு கட்சிகளை குறித்து வைத்து பேசிவருகிறார்.

 காங்கிரஸ்

காங்கிரஸ்

அதேசமயம், காங்கிரசுக்கு எதிராக குஷ்பு கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் நியாயமானதே.. அந்த கட்சியின் சரிவு அந்த அளவுக்கு பேசப்பட்டு வருகிறது.. ஒரு வருடமாக குஷ்பு இப்படி காங்கிரஸை குறை சொல்லியும்கூட, அந்த கட்சி தன்னை சரிப்படுத்தி கொள்ளாததும், குறைகளை களைந்து கொள்ளாததும், குறைந்தபட்சம் பூசல் இல்லாமல் இருப்பதும் வருத்தம் தரக்கூடியதாகவே உள்ளது.

 மாற்றம்

மாற்றம்

2 நாளைக்கு முன்பு குஷ்பு தன்னுடைய ட்வீட்டில், ''2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிகளில் பெரிய மாற்றம் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்... கூடுதல் சுமை என அகில இந்திய காங்கிரஸ் தனித்து விடப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை'' என்றும், ''அடிக்கடி கை கழுவுங்கள், இது கரோனா சொல்லிய பாடம். நிரந்தரமாய் கையை கழுவுங்கள், இது மோடி ஜி, பீகாரில் உணர்த்திய பாடம். வரும் தேர்தலில் தமிழகம் இதை எதிரொலிக்கும்'' என்றும் தெரிவித்திருந்தார்.

திமுக

திமுக

குஷ்புவின் இந்த ட்விட்கள் திமுகவுக்கு ஒருவகையில் அலர்ட் என்றே சொல்லலாம்.. காங்கிரஸை மடியில் கட்டிக் கொண்டு, அதற்கு சீட்டுகளை ஒதுக்கிவிட்டு, தோல்வியை நோக்கி செல்வதைவிட, இப்போதே திமுக சுதாரிப்பதற்கான ஒரு வழியாககூட இதை எடுத்து கொள்ளலாம்.

 வருத்தம்

வருத்தம்

இப்படிப்பட்ட சூழலில் இன்னொரு ட்வீட்டையும் குஷ்பு பதிவிட்டுள்ளார்.. அதில், "நான் காங்கிரஸை விட்டு போனதால் நிறைய காங்கிரஸ் நண்பர்கள் வருத்தப்படுகிறார்கள்.. மனம் புண்பட்டுள்ளனர்.. ஆனால் இதை வெளியில் சொல்லிடாதீங்க.. உங்களை கட்சி காயப்படுத்தி விடும்" என்று தெரிவித்துள்ளார். அப்படியானால் பாஜகவின் குஷ்புவுக்கு காங்கிரசில் இருந்து ஆதரவு தந்து கொண்டிருப்பவர்கள் யார்? வருத்தப்படுபவர்கள் யார்? என்று தெரியவில்லை.

 அதிருப்தியாளர்கள்

அதிருப்தியாளர்கள்

ஒருவேளை குஷ்பு நினைத்ததையேதான், காங்கிரஸில் உள்ள அவரது நண்பர்களின் மனநிலையும் உள்ளதா என்பதும் தெரியவில்லை. இந்த ட்வீட் மூலம் குஷ்பு காங்கிரசுக்கே அலர்ட் செய்திருக்கிறார்.. அந்த கட்சியில் நிறைய அதிருப்தியாளர்கள் இருக்கிறார்கள் என்பதையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.. ஆனால், குஷ்புவிடம் வருத்தத்தை தெரிவித்த அவரது நண்பர்கள், இதை நேரடியாக சொந்த கட்சி தலைமையிடமே ஏன் எடுத்துரைக்கவில்லை என தெரியவில்லை.

சுதாரிப்பு

சுதாரிப்பு

குஷ்பு அப்படித்தான் அன்று தைரியமாக எடுத்து சொன்னார்.. யாருக்குமே பயப்படவில்லை.. அவரதுஅந்த மனோபாவம், அதிருப்தியில் உள்ள மற்ற காங்கிரஸ்காரர்களுக்கும் வர வேண்டும்.. இல்லாவிட்டால் தேசிய கட்சியான காங்கிரஸ் தேறுவது ரொம்ப கஷ்டம்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+