சென்னை அருகே திருமணம் செய்ய காதலன் மறுப்பு.. வீட்டில் இளம் பெண் அனுஷா இருந்த கோலம்
சென்னை: காதலித்த நபர் திருமணம் செய்ய மறுத்தால் அல்லது அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் இன்றைக்கு இளைஞர்கள் வாழ்க்கையை மிக சாதாரணமாக கருதி தவறான முடிவெடுக்கிறார்கள். முன்பைவிட இப்போது தவறான முடிவெடுப்பது அதிகரித்துள்ளது. அந்த வகையில் சாதியை காரணம் காட்டி, திருமணம் செய்ய காதலன் மறுப்பு தெரிவித்ததால் காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தை சேர்ந்த இளம் பெண் தவறான முடிவெடுத்துள்ளார். இதை கண்டு ஆவேசமான உறவினர்கள், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2 கே கிட்ஸ்ஸை விட இப்போது உள்ள சில ஜென் கிட்ஸ்கள் வாழ்க்கையில் மிக அவசரப்பட்டு முடிவெடுப்பது அதிகமாக உள்ளது. வீட்டில் அதிக செல்லத்துடன் வளரும் இவர்கள், சின்ன விஷயங்களை கூட தாங்கி கொள்வது இல்லை.. பக்குவத்திற்கு வரும் முன்பே, காதலிப்பது, ஊர் சுற்றுவது, இன்ஸ்டாவில் ரீல்ஸ் போவது என்று மாறி இருக்கிறார்கள். அதேநேரம் ஒரு சிலர் காதலில் ஏற்படும் சிக்கல்களை கையாள தெரியாமல் வாழ்க்கையே வேண்டாம் என்று தவறான முடிவெடுக்கிறார்கள். அப்படித்தான் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தை சேர்ந்த இளம் பெண் முடிவெடுத்துள்ளார்.

காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் அடுத்த கோட்டூர் ஊராட்சியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மனைவி ஜோதிலட்சுமி. இந்த தம்பதிக்கு 18 வயதில் அனுஷா என்ற மகள் இருந்தார். இவர்கள் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் ஆவார். காஞ்சிபுரம் பகுதியில் ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்த அனுஷா இடையில் நின்று விட்டார்.
அனுஷா, காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரம் அருகே உள்ள கண்ணன் தாங்கல் பகுதியை சேர்ந்த மாற்று சமூகத்தை சேர்ந்த சஞ்சய் கண்ணன் என்பவரை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தாராம். இவர்களது காதல் விவகாரம் சஞ்சய் கண்ணின் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. அவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்களாம். அனுஷாவின் வீட்டுக்கு சென்ற சஞ்சய் கண்ணன் உங்கள் மகளை திருமணம் செய்து கொண்டு நான் இங்கேயே தங்கி விடுகிறேன் என்று தெரிவித்தாராம். அனுஷாவின் பெற்றோரும், உறவினர்களும் இவர்களின் திருமணத்திற்கு சம்மதித்தனர்.
இந்நிலையில் செந்தில்குமாரின் வீட்டுக்கு சென்ற சஞ்சய் கண்ணனின் பெற்றோர் 2 வாரம் அவகாசம் கொடுங்கள். இவர்களுக்கு திருமணத்தை செய்து வைக்கிறோம் என்று கூறி சஞ்சய் கண்ணனை அழைத்து சென்றுவிட்டார்களாம். சஞ்சய் கண்ணன், பெற்றோரின் பேச்சை கேட்டு ஜாதியை காரணம் காட்டி தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார் என கேள்விப்பட்ட அனுஷா கடந்த 9-ந்தேதி வீட்டில் தவறான முடிவெடுத்தாராம். இது குறித்து தகவல் அறிந்த சுங்குவார் சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அனுஷா- சஞ்சய் கண்ணனுக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறி நாடகமாடிய கோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் முருகையன் மற்றும் கண்ணன் தாங்கல் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் விசுவநாதன் ஆகியோர்தான் என்னுடைய மகள் சாவுக்கு காரணம் என்று கூறி நீதி கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம், பிரேதப்பரிசோதனைக்கும் அனுமதிக்க மாட்டோம் என்று அனுஷாவின் பெற்றோரும் உறவினர்களும் நேற்று காலை இடையப்பாக்கம் கோட்டூர் ஜங்ஷனில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த டிஎஸ்பி கங்காதரன் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 2464 0050 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications