பல ஆண்கள் காட்பாதர் மாதிரி பார்த்தாங்களே.. பலாத்கார கேஸில் உள்ளே போகும் ஆண்டரூ டேட்.. போச்சு!
லண்டன்: உலகின் பல ஆண்கள் காட்பாதர் மாதிரி பார்க்கும் அமெரிக்க - பிரிட்டிஷ் யூ டியூபர் ஆண்ட்ரு டேட்டை அடித்து தூக்கி உள்ளது இங்கிலாந்து அரசு. அந்நாட்டு ராஜ விசாரணை போலீஸ் அமைப்பான சிபிஐ போலீசார் ஆண்ட்ரு டேட்டிற்கு எதிராக கடுமையான வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.
பாலியல் வன்கொடுமை, உடல் ரீதியான தீங்கு, மனித கடத்தல் மற்றும் ஆதாயத்திற்காக ஒருவரை விபச்சாரத்திற்கு கடத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
உலகம் முழுக்க ஆண்ட்ரு டேட்டை பல ஆண்கள் தங்களின் காட் பாதர் போல பார்ப்பது உண்டு. இவர்தான் சிக்மா மேல், ஆல்பா மேல் போன்ற வாக்கியங்களை உருவாக்கி அதை பழக்கத்திற்கு கொண்டு வந்தார். பெண்களை ஒடுக்க வேண்டும், பெண்களை அடிக்க வேண்டும் என்றெல்லாம் ஏடாகூடமாக பேசக்கூடியவர் இவர். இவர் இதற்காக கோர்ஸ் எல்லாம் கூட நடத்துகிறார்.

அதாவது ஆண்கள் எப்படி நடக்க வேண்டும், பெண்களை எப்படி ஒடுக்க வேண்டும் என்பதற்காக இவர் நிறைய வீடியோக்களை வெளியிட்டு அதற்காக கோர்ஸ் கூட வெளியிட்டு உள்ளார். இதை பல லட்சம் பேர்.. பல ஆயிரங்களை கொடுத்து வாங்கி உள்ளார். இதை வைத்தே இவர் பல கோடிகளை சம்பாதித்து உள்ளார். கிட்டத்தட்ட போலி சாமியார் போல இவர் ஒரு cult உலகை ஆண்களுக்காக உருவாக்கி உள்ளார்.
இவரை தங்களின் ஆஸ்தான குருவாக பார்க்க கூடிய பல ஆண்கள் இருக்கிறார்கள். இந்தியாவில் உள்ள பல கிரிக்கெட் வீரர்கள், நடிகர்கள் கூட இவரை.. ஆண்ட்ரு டேட்டை தங்கள் குருவாக பார்ப்பது வழக்கம். ஆண்கள் எப்படி எல்லாம் இருக்க வேண்டும்.. எப்படி எல்லாம் ஆணாதிக்கம் செலுத்த வேண்டும் என்பதை இவர் ஆணாதிக்க கருத்துக்களோடு பேச கூடியவர். ஆண்ட்ரு டேட்
ஆண்ட்ரு டேட்
இந்த நிலையில்தான் ஆண்ட்ரு டேட்டை மற்றும் அவர் தம்பி ட்ரிஸ்டன் டேட் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. 11 வழக்குகள் அவர் மீது போடப்பட்டு உள்ளது. இதில் பாலியல் பலாத்காரம் வழக்கும் சேர்க்கப்பட்டு உள்ளது.
தங்கள் மீதான அனைத்து வழக்குகளையும் இவர்கள் மறுத்துள்ளனர். பெண்களை பாலியல் தேவைகளுக்காக இவர்கள் கடத்தியதாகவும், சிறுமிகளை விற்றதாகவும், வெளிநாடுகளுக்கு கடத்தி சென்றதாகவும் இவர்கள் மீது புகார்கள் உள்ளன.
தற்போது ரோமானியாவில் டேட் தங்கி உள்ளார். ஏற்கனவே டேட்டை ருமேனியாவிலிருந்து இங்கிலாந்துக்கு மீண்டும் கொண்டு வரும் நோக்கில், 2024 ஆம் ஆண்டு நாடுகடத்தல் கோரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் இருப்பினும், டேட் தற்போது ருமேனியாவில் குற்றவியல் நடவடிக்கைகளுக்கு உட்பட்டுள்ளார், இது நாடுகடத்தப்படுவதற்கு முன்பு தீர்க்கப்பட வேண்டும். அது தீர்க்கப்பட்ட பின்பு அவர் நாடு கடத்தப்பட்டு இங்கிலாந்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்.
இவருக்கு எதிராக இங்கிலாந்தில் 4 பெண்கள் வழக்குகளை பதிவு செய்துள்ளனர். அதில் பாலியல் பலாத்காரம், பணத்தை வாங்கி ஏமாற்றியது உள்ளிட்ட வழக்குகள் அடக்கம். இதனால் விரைவில் இவர் லண்டன் போலீஸ் மூலம் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. ரூமானியாவில் இவர் தண்டிக்கப்பட்ட பின் லண்டன் நாடு கடத்தப்பட்டு அங்கே கடுமையான தண்டனைகளை எதிர்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications