இனி சென்னை வரும் பேருந்துகள்.. தாம்பரம் கிண்டி வழியாகவே வர வேண்டும்.. போக்குவரத்து கழகம் அதிரடி ரூல்
அனைத்து கிளை மேலாளர்களுக்கும், அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் சுற்றறிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
சென்னை: தினமும் சென்னை வரும் எஸ்இடிசி பேருந்துகளை தாம்பரம் வழியாக இயக்க போக்குவரத்து கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவிற்கு பின் முக்கியமான காரணம் ஒன்றும் உள்ளது.
சென்னைக்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் பல ஆயிரம் பேர் வருகிறார்கள். அரசு பேருந்துகள், ஆம்னி பேருந்துகளில் பயணிகள் ஆயிரக்கணக்கில் வருகின்றனர்.
பொதுவாக இந்த பேருந்துகள் இரண்டு - மூன்று ரூட்களை பயன்படுத்துவது வழக்கம். பெருங்களத்தூர் வழியாக கிண்டி, வடபழனி என்று வருவது ஒரு வகை.

போக்குவரத்து
இரண்டாவது ஓஎம்ஆர் வழியாக கிண்டி, வடபழனி வழியாக கோயம்பேடு வருவது இன்னொரு பக்கம். கடைசியாக சில பேருந்துகள் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக பெருங்களத்தூர், மதுரவாயல் வழியாக செல்லும். இதனால் வடபழனி, கிண்டி செல்ல விரும்பும் பயணிகள் நேரடியாக செல்ல முடியாமல் கோயம்பேட்டில் இறங்கி செல்ல வேண்டி இருக்கும். கோயம்பேட்டில் இறங்கி மெட்ரோவிலோ அல்லது ஆட்டோ, பஸ்ஸிலோ செல்ல வேண்டி இருக்கும். இந்த நிலையில்தான் சென்னை வரும் பேருந்துகளுக்கு புதிய போக்குவரத்து விதிகளை தமிழ்நாடு போக்குவரத்து கழகம் விதித்து உள்ளது.

விதிகள் மாற்றம்
அதன்படி தினமும் சென்னை வரும் எஸ்இடிசி பேருந்துகளை தாம்பரம் வழியாக இயக்க போக்குவரத்து கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எஸ்இடிசி பேருந்துகளுக்கு மட்டும் இது பொருந்தும். இந்த உத்தரவிற்கு பின் முக்கியமான காரணம் ஒன்றும் உள்ளது. தாம்பரம் கிண்டி வழியாகவே அனைத்து அரசு பேருந்துகளும் சென்னைக்குள் வர வேண்டும் என்று அரசு விரைவு போக்குவரத்து கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தாம்பரம் பேருந்து நிறுத்தத்திற்கு இடது புறமாக நிறுத்தி பயணிகளை இறக்கிவிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மாலை 5 மணிக்கு மேல் பெருங்களத்தூர் வழியாக வரும் பேருந்துகள் மட்டும் மதுரவாயல் மார்க்கத்தில் செல்லலாம். மாலை 5 மணிக்கு மேல் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

ஏன் இப்படி?
முக்கியமாக தாம்பரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படும் என்பதால் மதுரவாயல் சாலையை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அனைத்து கிளை மேலாளர்களுக்கும், அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் சுற்றறிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கிண்டி, வடபழனி செல்லும் பயணிகள் பலன் அடையும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அந்த ரூட்டில் பயணிகள் பலர் இறங்குவதால் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இன்னொரு பக்கம் மதுரவாயல் - துறைமுகம் ஈரடுக்கு உயர்மட்ட பாலம் அமைக்க பணிகள் தொடங்கி உள்ளன ரூ.5800 கோடியில் மதுரவாயல் முதல் சென்னை துறைமுகம் வரையிலான பறக்கும் சாலை திட்டத்திற்கு மத்திய அரசின் சுற்றுசூழல் நிபுணர் குழு அனுமதி வழங்கி உள்ளது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த திட்டம் மீண்டும் புத்துயிர் பெறுகிறது.

திட்டம் என்ன?
சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை 19 கிலோமீட்டர் தூரத்தில் உயர்மட்ட பறக்கும் சாலை அமைக்க வேண்டும் என்பதுதான் இந்த திட்டம் ஆகும். 15 சதவீதப் பணிகள் முடிவடைந்த நிலையில் 2011ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி வந்தது. இந்த காலகட்டத்தில் துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் முடங்கியது. இப்போது இந்த திட்டம் மீண்டும் கையில் எடுக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்கு கட்டுமான பணிகளும் நடக்க உள்ளன. இந்த நிலையில்தான் தினமும் சென்னை வரும் பேருந்துகளை தாம்பரம் வழியாக இயக்க போக்குவரத்து கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவிற்கு பின் முக்கியமான காரணம் ஒன்றும் உள்ளது.












Click it and Unblock the Notifications