சல்லி சல்லியா நொறுங்கும் பாஜக "ஹாட்ரிக்"கனவு? சொல்லாததையெல்லாம் மோடி சொல்றாரே? ஆஹா, யார்னு பாருங்க
சென்னை: இந்தியா கூட்டணியின் வெற்றி வாய்ப்புகள் ஒளிமயமாக மாறி வருவதாகவும், இதற்கு காரணம், பிரதமர் மோடியின் கீழ்த்தரமான அரசியல் பிரச்சாரமே என்றும் மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்திருக்கிறார்.
உத்தரபிரதேசம், குஜராத், பீகார், அசாம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 93 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடந்து வருகிறது.. எனவே, காலையிலிருந்தே பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள்.

இதில், அகமதாபாத்தில் காந்திநகர் தொகுதிக்கு உட்பட்ட வாக்குசாவடியில் பிரதமர் மோடி தன்னுடைய வாக்கினை செலுத்தினார்... வாக்களிக்க வந்த பிரதமர் மோடியை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரவேற்றார்.
ஹாட்ரிக்: இந்த முறை தேர்தலில் எப்படியும் 400 சீட்களை வென்றுவிட வேண்டும் என்பதிலும், ஹாட்ரிக் வெற்றியை எட்டிப்பிடித்துவிட வேண்டும் என்பதிலும் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இதற்காகவே, கடந்த 2 வருடங்களுக்கு முன்பேயே பல்வேறு தேர்தல் வியூகங்களையும் வகுத்திருந்தது.
தேர்தல் முடிவுகளில், இந்த அளவுக்கு பாஜக நம்பிக்கை வைத்துவரும் நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அத்துமீறல்: "காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சொல்லாததையெல்லாம் நரேந்திர மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங் போன்றவர்கள் இட்டுக்கட்டி திரித்து பேசி வருகிறார்கள். இதன்மூலம் பிரதமர் மோடி தேர்தல் நடத்தை விதிமுறைகளை அப்பட்டமாக தொடர்ந்து மீறி வருகிறார். மதத்தின் அடிப்படையில் பரப்புரை மேற்கொண்டால் நடவடிக்கை எடுப்பதற்கு தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இருக்கிறது.
ஆனால், பிரதமரின் விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட தேர்தல் ஆணைய உறுப்பினர்களிடம் நியாயமான, பாரபட்சமற்ற அணுகுமுறை இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.
கைப்பாவை: தேர்தல் ஆணையம் என்பது மோடியின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறது. நாட்டு மக்களிடையே பிளவை உருவாக்கி அதன்மூலம் அரசியல் ஆதாயம் தேடி குளிர்காய நினைக்கிற கீழ்த்தரமான அரசியல் பரப்புரையின் மூலம் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி வெல்ல முடியாது. பாஜவுக்கு தோல்வி காத்திருக்கிறது.
இந்தியா கூட்டணியின் வெற்றி வாய்ப்பு ஒளிமயமாக மாறி வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பிரதமர் மோடியின் பாசிச, சர்வாதிகார 10 ஆண்டுகால மக்கள் விரோத ஆட்சியின் பிடியிலிருந்து 140 கோடி இந்தியர்களும் விடுவிக்கப்படுவது உறுதியாகி வருகிறது.
எரிச்சல்: இதன்மூலம் இந்தியா மீண்டும் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிற பொற்காலத்தை அமைக்க ராகுல்காந்தியின் சூறாவளி சுற்றுப்பயணமும், பிரசாரமும் பெரும் துணையாக இருக்கப் போகிறது" என்று கூறியிருக்கிறார்.. செல்வப்பெருந்தகையின் இந்த ஆரூடம் பாஜகவுக்கு கடும் எரிச்சலை தந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications