ஓபிஎஸ் - இபிஎஸ் மீண்டும் சேர வாய்ப்புள்ளதா? நீதிபதிகள் கேள்வி.. 2 பேரும் கூட்டாக சொன்ன பரபர பதில்!
சென்னை: அதிமுகவில் ஓபிஎஸ் - எடப்பாடி 2 பேரும் மீண்டும் சேர வாய்ப்புள்ளதா என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா இன்று கேள்வி எழுப்பினார்.
Recommended Video
அதிமுக பொதுக்குழுவிற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது. ஜூலை 13ம் தேதி ஓபிஎஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்க கோரிகை விடுக்கப்பட்டது.
இந்த பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கூட்டவில்லை. தலைமை கழகம் பொதுக்குழுவை கூட்ட முடியாது. விதியை மீறி இந்த பொதுக்குழு நடந்து உள்ளது என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

விசாரணை
இன்று இந்த வழக்கில் நடந்த விசாரணையில்,
ஓபிஎஸ் வாதம்: சென்னை உயர் நீதிமன்றம் பொதுக்குழு வழக்கில் எங்கள் கையை கட்டிபோட்டுவிட்டது. உச்ச நீதிமன்றம் பொதுககுழுவை அனுமதித்துவிட்டது என்று கூறி, எங்கள் வழக்கில் எதிராக தீர்ப்பு வழங்கிவிட்டனர்.
தலைமை நீதிபதி ரமணா: நீங்கள் எத்தனை வழக்குகளை பதிவு செய்துள்ளீர்கள். எத்தனை அதிமுக வழக்குகள் நிலுவையில் உள்ளது.
தலைமை நீதிபதி ரமணா: ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவில் நடந்தது என்ன?

நீதிபதி கேள்வி
ஓபிஎஸ் தரப்பு வாதம்: எல்லை மீறி பொதுக்குழுவை கூட்டி அதில் எல்லை மீறி முடிவை எடுத்து உள்ளனர். கட்சியின் அனைத்து விதிகளும் மீறப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி: நீங்கள் இரண்டு பேரும் மீண்டும் இணைய வாய்ப்பு உள்ளதா?
ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பு கூட்டாக பதில்: இல்லை, வாய்ப்பு இல்லை.

சேர வாய்ப்பு இல்லை
எடப்பாடி தரப்பு: பொதுக்குழு உயர் நீதிமன்ற அனுமதியோடு சட்டப்படிதான் நடந்துள்ளது.
·
ஓபிஎஸ் தரப்பு: இந்த பொதுக்குழுவை நடத்த உயர் நீதிமன்றம் கொடுத்த அனுமதியிலேயே விதி மீறல்கள் உள்ளன, உச்ச நீதிமன்ற உத்தரவை உயர் நீதிமன்றம் மதிக்கவில்லை. ஓபிஎஸ்ஸை கட்சியில் இருந்து விதியை மீறி நீக்கி உள்ளனர்.

உத்தரவு
நீதிபதி: இதை உயர் நீதிமன்றத்தில் தனி நீதிபதி அமர்வு விசாரிக்கட்டும். இது தொடர்பான அனைத்து வழக்குகளையும் தனி நீதிபதி விசாரிக்கட்டும். சில விஷயங்களை மாற்ற முடியாது. உச்ச நீதிமன்றம் இதுவரை பிறப்பித்த உத்தரவுகள் உயர் நீதிமன்ற விசாரணையை பாதிக்க கூடாது. அதிகபட்சம் 3 வாரத்திற்குள் இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதுவரை தற்போதைய நிலையே தொடரட்டும். இதில் நாங்கள் கருத்து சொல்ல போவதில்லை, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications