"ஓ" வசந்த "ராஜா".. லாஸ்ட் 2 ஆப்ஷனை கையில் எடுக்கும் ஓபிஎஸ்.. பெரிய வலை.. எடப்பாடிக்கு வந்த தலைவலி
எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்க ஓபிஎஸ் 2 விதமான வியூகங்களை கையில் எடுக்கிறார்
சென்னை: எடப்பாடி பழனிசாமியையும், ஓபிஎஸ்ஸையும் பிரதமர் மோடி சந்தித்து பேசிய நிலையில், அதிமுகவில் அடுத்து என்ன நடக்க போகிறது? அதிலும் ஓபிஎஸ் என்ன செய்ய போகிறார் என்ற ஆர்வம் அதிகமாகி உள்ளது.
Recommended Video
இன்று சென்னை அண்ணா பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.. விழா முடிந்தபிறகு, ஏர்போர்ட்டில் 10 நிமிடம் சந்திக்க, ஓபிஎஸ்ஸுக்கு
அனுமதி தரப்பட்டது..
இதையடுத்து, ஓபிஎஸ், பிரதமரை சந்தித்து பேசினார்.. ஆனால், என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை.. எப்படியும், ஓபிஎஸ், பாஜக தலைவர்களுக்கு நெருக்கம் என்பதாலும், மத்திய அரசை இதுவரை கடிந்து ஒரு வார்த்தைகூட பேசாததாலும், மேலிட தலைவர்கள் இவர்மீது நன்மதிப்பையும் நம்பிக்கையையும் வைத்து வருகிறது.

லாஸ்ட் சான்ஸ்
எனவே, இன்றைய பிரதமர் மோடியை சந்தித்து பேசியதிலும் எந்தவித ஆச்சரியமும் யாருக்கும் ஏற்படவில்லை.. ஆனால், அதிமுகவை கைப்பற்றுவதில் அடுத்து என்ன யோசிப்பார் என்பதே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.. இது தொடர்பாக 2 விதமான விஷயங்கள் கசிந்து வருகின்றன.. முதலாவதாக, சசிகலாவுடன் ஓபிஎஸ் இணைவதற்கான காலசூழல் நெருங்கிவிட்டதாக சொல்கிறார்கள்.. அதனால்தான், ஓபிஎஸ் ஆதரவாளர்கள், சசிகலாவுக்கு ஆதரவாக கருத்து சொல்லி வருகிறார்களாம்..

ஓ.ராஜா?
சசிகலா அதிமுகவில் இருந்து நீக்கப்படவில்லையே, அவர் அதிமுகவில்தான் இப்பவும் இருக்கிறார் என்று கோவை செல்வராஜ் அன்று சொன்னதன் பின்னணியும் இதுதானாம். எனவே, விரைவில் ஓபிஎஸ் - சசிகலா சந்திப்பு நடைபெறும் என்கிறார்கள்.. அதற்கான வேலைகளை இழுத்து போட்டுக் கொண்டு மும்முரமாக செய்து கொண்டிருப்பது, ஓ.ராஜா என்கிறார்கள்.. எடப்பாடி பழனிசாமிக்கு மெஜாரிட்டி ஆதரவுகள் இருந்து வரும்நிலையில், சசிகலாவுடன் ஓபிஎஸ்ஸும் ஒன்றுசேரும் பட்சத்தில், நிச்சயம் எடப்பாடிக்கு நெருக்கடிகளும் தலைவலிகளும் கூட வாய்ப்புள்ளது என்றும் அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள்.

ஐடியா
அதேபோல இன்னொரு தகவலும் வட்டமடித்து கொண்டிருக்கிறது.. அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பாலானோர் எடப்பாடி பக்கம் உள்ள நிலையில், புது திட்டம் ஒன்றை கையில் எடுத்திருக்கிறாராம் ஓபிஎஸ்... அந்த ஐடியாவை ஓபிஎஸ்ஸுக்கு சொன்னது வைத்திலிங்கம் என்கிறார்கள்.. அதன்படி, தமிழகம் முழுவதும், பொதுக்குழு அந்தஸ்திலான நிர்வாகிகளை நியமிக்க போகிறாராம் ஓபிஎஸ்..

கொசுறு தகவல்
அப்படி புதிதாக பொதுக்குழு உறுப்பினர்களை நியமித்துவிட்டால், போட்டி பொதுக்குழுவை நடத்தி முடித்து தேர்தல் ஆணையத்தில், "நாங்கள் தான் உண்மையான அதிமுக" என்று கோரவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.. எனினும் இந்த ஐடியா எந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆகும் என்று தெரியவில்லை.. இதற்கு நடுவில் கொசுறு தகவல் ஒன்று சுற்றி வருகிறது.. எடப்பாடி பழனிசாமி தங்களுக்கு பொறுப்புகளை ஒதுக்காத நிலையில், பலர் அப்செட்டில் உள்ளனராம்.. அவர்களுக்கும் வலையை வீசி உள்ளதாம் ஓபிஎஸ் டீம்..!

ஓபிஆர்
ஓபி ரவீந்திரநாத்தை, சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி கட்சியில் இருந்து நீக்கியிருந்த நிலையில், இந்த நடவடிக்கைக்கு சசிகலா கடும் கண்டனம் தெவித்திருந்தார்.. அதிமுகவின் ஒரேயொரு எம்பியை கட்சியின் சார்பில் செயல்படுவதை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு தமது கடும் கண்டனங்களை தெரிவித்திருந்த சசிகலா, எடப்பாடியின் இந்த நடவடிக்கையை கட்சித் தொண்டர்கள் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் கூறியிருந்தார்.. சசிகலா இப்படி சொன்னதன் பின்னணியும், ஓபிஎஸ்ஸுடன் இணைப்பு விரைவில் இருக்கலாம் என்பதால்தானாம்.. எப்படி பார்த்தாலும், சசிகலா - ஓபிஎஸ் இரு தரப்பிலும் பேசி வரும் பேச்சுக்களே, "தென்மண்டல" அதிமுகவை வெளிச்சம் போட்டு போட்டி வருகின்றன என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications