"அச்சாணி" முறிகிறது.. பீஸ் பீஸாக சிதறி விழுந்த 10 வெடிகள்.. திமுக? பாஜக? அவரா?.. கிளைமாக்ஸ் இதுதான்
ஓபிஎஸ் சைலண்ட்டாக உள்ளதால், அவரது அடுத்தக்கட்ட நகர்வு என்ன என்ற கேள்வி எழுகிறது
சென்னை: ஓபிஎஸ் கடந்த 4 நாட்களாகவே சத்தமின்றி சைலண்ட்டாக உள்ளார்.. அடுத்து அவர் என்ன செய்ய போகிறார்? அவரது அரசியல் எந்த திசையை நோக்கி பயணிக்க போகிறது? அவருக்காக களத்தில் உள்ள "ஆப்ஷன்கள்" என்னென்ன என்பது குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன.
ஓபிஎஸ்ஸை அதிமுக தொண்டர்கள் வெறுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.. அதற்கு காரணம் ஓபிஎஸ் மட்டும்தான் என்று அடித்துசொல்கிறார்கள் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள்.
ஒற்றை தலைமை விவகாரம் ஆரம்பித்ததில் இருந்து, பாஜக இவர்களை கண்டுகொள்ளவில்லை.. சமாதானமும் செய்யவில்லை.. சந்தித்து பேச அப்பாயிண்மென்ட்டும் தரவில்லை. இந்த புள்ளியில் இருந்துதான், ஓபிஎஸ்ஸின் அரசியல் கணக்குகள் டமார் என நொறுங்க ஆரம்பித்துவிட்டதாக கூறுகிறார்கள்.

கொலாப்ஸ் 1
அப்படியானால், அதிமுகவை கழட்டிவிட்டுவிட்டு, தனியாக தேர்தலை சந்திக்க போகிறதா? என்ற கேள்வி எழுந்தது.. ஆனால், அதற்கும் வாய்ப்பில்லை.. காரணம், அதிமுகவின் வாக்கு வங்கியை இழக்க, பாஜக ஒருபோதும் விரும்பவில்லை.. தமிழகத்திலேயே எல்லா காலத்திலும், திமுகவைவிட அதிமுகவுக்குதான் ஓட்டு சதவீதம் அதிகம்.. அதிமுக என்பதே தொண்டர்களின் கட்சிதான்.. தொண்டர்களின் பலம்தான்.. அந்தவகையில், அதிமுக முதுகில் சவாரி செய்து தேர்தலை சந்திக்க பாஜக நினைக்குமே தவிர, அதிமுகவை இழக்க தயாராகாது.

கொலாப்ஸ் 2
அப்படியானால், எடப்பாடியின் ஆளுமை + மெஜாரிட்டி ஆதரவு + வலுவான தலைவர் இப்படி எதையுமே விரும்பாத நிலையில், எடப்பாடி டீமின் தலையில் கொட்டி, ஒட்டுமொத்த அதிமுகவையும் தங்கள் கன்ட்ரோலில் இழுத்து பிடித்து வைத்து கொள்வதுதான் பாஜகவின் அரசியலாக இருக்குமோ என்ற சந்தேகம் வலுத்தது.. அதற்கும் வாய்ப்பில்லை.. காரணம், ஓபிஎஸ்ஸை கட்சியில் சேர்த்து கொள்ள சொன்னாலும், நாங்கள் சேர்த்து கொள்ள மாட்டோம், எங்களை யாராலும் நிர்ப்பந்திக்க முடியாது என்று, எடப்பாடியின் ஆதரவாளரும் மூத்த தலைவருமான ஆதிராஜாராம், ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டியிலும் கூறியுள்ளார்.

கொலாப்ஸ் 3
அப்படியானால், எடப்பாடி டீம் ஒத்துவராத பட்சத்தில், அவரை மட்டும் கழட்டிவிட்டு, புது கூட்டணியை உருவாக்கி தேர்தலை சந்திக்க பாஜக தயாராகிறதா? டிடிவி தினகரன் + சசிகலா + ஓபிஎஸ் இவர்களை இணைத்துக் கொண்டு, கூட்டணி தலைமையேற்று, எம்பி தேர்தலை சந்திக்க முற்படுகிறதா? அதிமுக விவகாரங்களில், இரட்டை இலையை முடக்கினாலும், தங்களுக்கு ஒருவகையில் அது நல்லது என்றே பாஜக நினைக்கிறதா? தென்மண்டல வாக்குகளை வளைத்து போடுவதற்காகவே ஓபிஎஸ்ஸை கைவிடாமல், கைகொடுத்து பாதுகாக்குமோ என்ற சந்தேகம் எழுந்த நிலையில், அதுவும் புஸ்ஸென்று போய்விட்டது.

கொலாப்ஸ் 4
அப்படியானால், ஓபிஎஸ் என்னதான் செய்ய போகிறார்? ஓபிஎஸ் மலைபோல் நம்பியது 4 விஷயங்களைதான்.. ஒன்று, சட்டரீதியான விஷயங்கள், மற்றொன்று பாஜக ஆதரவு, மற்றொன்று சசிகலா, தினகரன் ஆதரவு, மற்றொன்று திமுக மேலிடம்.. இந்த நான்கு தூண்களை நம்பிதான், எடப்பாடி பழனிசாமியை எதிர்க்க தயாரானார்.. வைத்திலிங்கம் உள்ளிட்ட ஒருசிலர் உதவியுடன் களத்தில் துணிந்து குதித்தார்.. ஆனால், இப்போதுவரை நாலாபக்கமும் ஓபிஎஸ்ஸுக்கு சாதகமான ரிசல்ட் கிடைக்கவில்லை.

கொலாப்ஸ் 5
அப்படியானால், சட்டரீதியாக எந்த இடத்தில் ஓபிஎஸ் கோட்டை விட்டார்? என்ற கேள்வி எழுகிறது.. உண்மையை சொல்லப்போனால், எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழுவின் அவசர கோலத்தில் ஏகப்பட்ட சட்ட ஓட்டைகள் விழுந்தன.. இந்த ஓட்டைகள்தான் ஓபிஎஸ்சின் பிளஸ் பாயிண்ட்டாக உருவெடுத்தது.. தனிநீதிபதி ஜெயச்சந்திரன், சரியான ரூட்டிலேயே விசாரணையை துவக்கினார்.. அதிமுக ஆபீசில் ஓபிஎஸ் கலாட்டா செய்தார் என்று எடப்பாடி தரப்பில் முறையிட்டபோதுகூட, அதை பற்றி பேசவிடாமல் தடுத்த ஜெயச்சந்திரன், பொதுக்குழுவில் விதிகள் ஏன் மீறப்பட்டது? தொண்டர்கள் ஆதரவுக்கு ஆதாரம் எங்கே என்று எடப்பாடியை கேட்டது சரியான கேள்வி என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. எனினும், இறுதியாக வந்த தீர்ப்பில், அதிமுகவும், அலுவலகமும், சாவியும் எடப்பாடி பக்கம் சரிந்தது ஓபிஎஸ்ஸுக்கு ஷாக்தான்.

கொலாப்ஸ் 6
அப்படியானால், பாஜக பக்கம் ஓபிஎஸ் அணுகுமுறை எப்படி இருந்தது? என்ற அடுத்த கேள்வி எழுகிறது.. அன்று முதல் இன்றுவரை பாஜகவின் ஆதரவாளராகவே ஓபிஎஸ் இருப்பதை மறுக்க முடியாது.. ஆனால், கட்சியில் பிளவுகள் ஏற்படுவதால் தனக்கு பலன் கிடைக்குமா என்பதை தான் பாஜக எதிர்பார்ப்பதாக தெரிகிறது.. அதனால், நீதிமன்ற உத்தரவு முதல் அனைத்திலுமே ஓபிஎஸ் பின்னடைவை சந்திக்கிறார் என்று தெரிந்தும், பாஜக உதவ முன்வரவில்லை.. நிராயுதபாணியாக ஓபிஎஸ் போர்க்களத்தில் நிறுத்தப்பட்டுள்ளார்.

கொலாப்ஸ் 7
அப்படியானால், சசிகலாவுக்கும், தினகரனுக்கும் பகிரங்கமாக அழைப்பு விடுத்தும், என்னவாயிற்று? என்ற அடுத்த கேள்வி எழுகிறது.. சசிகலாவு சரி, தினகரனும் சரி, இருவருமே ஓபிஎஸ்ஸுடன் இணைய விரும்புகிறார்கள். ஆனால், இருவருமே சூப்பர் பவரை எதிர்பார்க்கிறார்கள்.. அதாவது கட்சிக்கு தலைமையாக தான் தான் இருக்க வேண்டும் என்று ஓபிஎஸ் நினைக்கிறார்.. ஆனால், கட்சி தன் கன்ட்ரோலில் இருக்க வேண்டும் என்று சசிகலா நினைக்கிறார்.. இவர்கள் 2 பேரையும்விட தனக்குதான் செல்வாக்கு இருப்பதால், தான்தான் வழிநடத்த வேண்டும், 3வது அணி அமைந்தாலும் அது தன்னுடைய தலைமையில் தேர்தலை சந்திதக்க வேண்டும் என்று டிடிவி விரும்புவதாக தெரிகிறது.. இதனாலேயே இவர்களின் சந்திப்பு இழுபறியாகி கொண்டே போகிறது.. இல்லாவிட்டால், எடப்பாடியை விட்டு ஓபிஎஸ்ஸை பிரிந்த அன்றைக்கே ஓபிஎஸ்ஸுடன் சசிகலா இணைந்திருப்பார்.

கொலாப்ஸ் 8
அப்படியானால், திமுகவுக்கு இணங்கி செல்வதும் பலன் தரவில்லையா என்ற அடுத்த கேள்வி எழுகிறது.. திமுகவுடனான இணக்கம் என்பது, பெரிய அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தாது.. இன்னும் சொல்லப்போனால், அது தன்னையும், தன் மகனையும் மட்டுமே காப்பாற்றி கொள்ள உதவுமே தவிர, தொண்டர்களின் ஆதரவை பெற இயலாது.. அதிமுக தொண்டர்களை பொறுத்தவரை, யார் அதிக அளவு திமுகவை எதிர்க்கிறார்களோ, அவர்களைதான் தலைவனாக ஏற்பார்கள்.. ஆனால், திமுகவுக்கு ஓபிஎஸ்ஸின் ஆதரவு நிலைப்பாடும், முதல்வருக்கு ஓபிஆரின் பாராட்டு பத்திரமும், தொண்டர்களிடயே சுணக்கத்தைதான் தந்தது.

கொலாப்ஸ் 9
அப்படியானால், பாஜக ஆதரவு இல்லாமலும் ஓபிஎஸ்ஸால் அரசியல் செய்ய முடியாது.. சசிகலா தயவு இல்லாமல் ஓபிஎஸ்ஸால் அரசியல் செய்ய முடியாது.. இரட்டை இலையும், கொடியும் இல்லாமல் ஓபிஎஸ்ஸால் அரசியல் செய்ய முடியாது.. அதிமுக என்ற பலம் பொருந்திய கட்சியை தனிநபராகவும் ஓபிஎஸ்ஸால் கட்டிக்காக்க முடியாது.. திமுகவை எதிர்த்தும் ஓபிஎஸ்ஸால் அரசியல் செய்ய முடியாது.. திமுகவில் இணைந்தும் அரசியல் ஓபிஎஸ்ஸால் செய்ய முடியாது.. அதிமுகவில் மெஜாரிட்டி ஆதரவு இல்லாமலும் ஓபிஎஸ்ஸால் அரசியல் செய்ய முடியாது..

கொலாப்ஸ் 10
அப்படியானால் ஓபிஎஸ் என்னதான் செய்ய போகிறார்? துணை முதல்வர் என்ற உயர்ந்த பொறுப்பில் இருந்தவர் இனி மாற்று கட்சிகளில் இணைவது சாத்தியம் இல்லை... அப்படி ஒரு அக்னி பரீட்சைக்கு அவரும் தயாராக மாட்டார்... அவருக்கு இருக்கும் ஒரே வழி, சண்டை வேண்டாம், சமரசமாக போய்விடுவோம் என்று சொல்வதாகத்தான் இருக்க முடியும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. ஆனால், மன்னிப்பே கேட்டாலும், கட்சியில் இணைக்க தயாரில்லை என்கிறார்கள் எடப்பாடி தரப்பில்.. ஆனானப்பட்ட ஜெயலலிதாவே, தனக்கு துரோகம் செய்த ஆர்எம்வீ போன்றோரை மன்னித்து, அமைச்சர் பதவியும் தந்து அழகுபார்த்த நிலையில், "மன்னிக்கவே முடியாது" என்று சொல்வது எடப்பாடி தரப்புக்கு நல்லதல்ல.. அத்துடன், அதிமுக நிமிர்ந்துவிடாதா? என்று ஏக்கப் பெருமூச்சுடன் காத்து கொண்டிருக்கும் லட்சோப லட்ச, ரத்தத்தின் ரத்தங்களையும் சிந்தித்து பார்க்க வேண்டும் என்றே நமக்கு சொல்ல தோன்றுகிறது..!

கொலாப்ஸ் 10
அப்படியானால் ஓபிஎஸ் என்னதான் செய்ய போகிறார்? துணை முதல்வர் என்ற உயர்ந்த பொறுப்பில் இருந்தவர் இனி மாற்று கட்சிகளில் இணைவது சாத்தியம் இல்லை... அப்படி ஒரு அக்னி பரீட்சைக்கு அவரும் தயாராக மாட்டார்... அவருக்கு இருக்கும் ஒரே வழி, சண்டை வேண்டாம், சமரசமாக போய்விடுவோம் என்று சொல்வதாகத்தான் இருக்க முடியும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. ஆனால், மன்னிப்பே கேட்டாலும், கட்சியில் இணைக்க தயாரில்லை என்கிறார்கள் எடப்பாடி தரப்பில்.. ஆனானப்பட்ட ஜெயலலிதாவே, தனக்கு துரோகம் செய்த ஆர்எம்வீ போன்றோரை மன்னித்து, அமைச்சர் பதவியும் தந்து அழகுபார்த்த நிலையில், "மன்னிக்கவே முடியாது" என்று சொல்வது எடப்பாடி தரப்புக்கு நல்லதல்ல.. அத்துடன், அதிமுக நிமிர்ந்துவிடாதா? என்று ஏக்கப் பெருமூச்சுடன் காத்து கொண்டிருக்கும் லட்சோப லட்ச, ரத்தத்தின் ரத்தங்களையும் சிந்திக்க பார்க்க வேண்டும் என்றே நமக்கு சொல்ல தோன்றுகிறது..!
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications