Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"முத்திடுச்சே".. அமித்ஷா வர்ற நேரத்துல இப்படியா.. சல்லி சல்லியா போகுதே கணக்கு.. எடப்பாடிக்கு தலைவலி

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று சென்னை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. இதனால் அதிமுக -பாஜக இரு தரப்புமே பரபரப்பாகி வருகிறது.. அத்துடன் சில முக்கிய முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பும் அரசியல் களத்தில் நிலவ துவங்கி உள்ளது.

விரைவில் எம்பி தேர்தல் வருகிறது. அதிமுக - பாஜக கூட்டணி சிக்கல் இனி இருக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.. காரணம், 2 மாதங்களுக்கு முன்பேயே அதிமுகவுடனான கூட்டணியை உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி செய்திருந்தார்.

சீட் விவகாரம்: ஆனால், சீட் விவகாரம் + தொகுதி நிலவரம் குறித்த முடிவுகள் இன்றைய தினம் எடுக்கப்படும் என்று தெரிகிறது. அன்று டெல்லியில் அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியபோதே, இதுகுறித்து சில தகவல்கள் கசிந்தன.

 Can OPS meet Amit Shah today and what are the tamilnadu bjps strategies

இதுகுறித்து, மூத்த பத்திரிகையாளர் கோலாகல ஸ்ரீநிவாஸ், பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டி அப்போது தந்திருந்தார்.. அந்த பேட்டியில், "கூட்டணி பேச்சுவார்த்தையில், சீட் எத்தனை என்பது உட்பட எந்தெந்த இடங்களில் போட்டி என்பது வரை டெல்லியில் பேசியிருக்கிறார்கள்.. வரும் நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமியிடம், மூன்றில் ஒரு பங்கு தொகுதிகளை பாஜக தரப்பில் கேட்டதாகவும், அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது..

எம்பி தேர்தலில், பாஜக 13 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புள்ளது. 39-ல் 13 சீட்டுக்களை ஒதுக்க எடப்பாடியும் சம்மதித்துள்ளார்.. எண்ணிக்கை குறையாது: இந்த சீட் எண்ணிக்கைக்கு மேலேயே பாஜகவுக்கு அதிமுக தரப்படும் என்கிறார்கள்.. இணக்கமான சூழலில் இந்த பேச்சுவார்த்தை நடந்துள்ளது.. இறங்கி வந்திருக்கிறது அதிமுக.. நெகிழ்வுத்தன்மையுடன் பேச்சுவார்த்தை நடந்துள்ளது..

எம்ஜிஆர் பார்முலா: இந்த பேச்சுவார்த்தையின்போது, எம்ஜிஆரின் பழைய பார்முலாவை, எடப்பாடிக்கு பாஜக தரப்பில் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.. அதாவது, நாடாளுமன்ற தேர்தலில் தேசிய கட்சிக்கு மூன்றில் ஒரு பங்கை கூட்டணி கட்சிக்கு கொடுப்பது எம்ஜிஆரின் வழக்கம். காங்கிரசுக்கு அப்படித்தான் அன்று ஒதுக்கப்பட்டது..

உறுதியான தகவல்: அதுபோல, சட்டப்பேரவை தேர்தலின்போது, அதிமுகவுக்கு மூன்றில் 2 பங்கில் போட்டியிடும்.. இதைத்தான் பாஜக தலைவர்கள் சுட்டிக்காட்டி, தேசிய கட்சி மற்றும் மாநில கட்சிகள் சீட் விவகாரத்தில் எம்ஜிஆர் எப்படி கையாண்டார் என்பதை சொல்லி, எடப்பாடி பழனிசாமியை சமாதானம் செய்துள்ளது பாஜக.. எடப்பாடியும் இதற்கு சம்மதம் தந்துள்ளார்..

ஆக, 15 சீட் வரை பாஜகவுக்கு கிடைக்கும் என்கிறார்கள்.. ஆனால் 13- சீட்டுக்கு குறையாமல் சீட் ஒதுக்கீடு செய்யப்படும் என்பது நிச்சயமான தகவல்.. உறுதியாக சொல்கிறேன்.. இது நம்பகமான தகவலும்கூட" என்று தன் கருத்தை பதிவு செய்திருந்தார்.
எத்தனை சீட்: இந்நிலையில்தான், இன்றைய தினம் அமித்ஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தெரிகிறது. அநேகமாக பாஜக போட்டியிட நினைத்துள்ள தொகுதிகளின் விவரங்கள் குறித்து இன்றைய தினம் தெரிவிக்கப்படும் என்றும் தெரிகிறது. அதே நேரத்தில் பாஜக போட்டியிட நினைக்கும் தொகுதிகளில் அதிமுகவுக்கு அதிக செல்வாக்கு உள்ள பல தொகுதிகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு அதிமுக சம்மதிக்கும் பட்சத்தில் உடனடியாக தேர்தல் வேலைகளை தொடங்க பாஜக முடிவு செய்துள்ளது.

ஆனால், எப்படி பார்த்தாலும், 5 முதல் 7 தொகுதிகளை பாஜகவிற்கு அதிமுக ஒதுக்கும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.. மேலும், கோவை, சென்னை உள்ளிட்ட தொகுதிகளை பாஜகவுக்கு அதிமுக தரப்பு ஒதுக்குவதிலும் சந்தேகம்தான் என்கிறார்கள்.

லிஸ்ட் : இன்னொரு விஷயமும் கசிந்து வருகிறது. வெற்றி வாய்ப்புள்ள 10 இடங்களை பாஜக டிக் அடித்து வைத்திருக்கிறதாம். இவைகளில் பெரும்பாலானவை அதிமுகவுக்கு செல்வாக்கான தொகுதிகளாம். அதனால், தொகுதி உடன்பாடு மிகப்பெரிய ஆர்வத்தை கிளப்பி உள்ளது.

இதனிடையே, அதிமுக - பாஜக 2ம் கட்ட தலைவர்கள் மறுபடியும் கருத்து மோதலில் இறங்கிவிட்டனர்.. 2 மாதங்களுக்கு முன்பும் இதுபோலவே பிரச்சனைகள் வெடித்தன.. எடப்பாடியின் உருவபொம்மையும் எரிக்கப்படும் அளவுக்கு அதிருப்திகள் பாஜகவுக்குள் கிளம்பின. இதையடுத்துதான், மேலிட தலைவர்களை சமாதானம் செய்து வைக்கப்பட்டது. "தமிழகத்தில் அதிமுக - பாஜக இரு தரப்பிலுமே சுமூகமான மனப்போக்குடன் நடந்து கொள்வோம்" என்று எடப்பாடி + அண்ணாமலை சார்பில் அன்று டெல்லியில் உறுதி அளிக்கப்பட்டதாம்.

சமாதானம்: இதற்கு பிறகு இரு தலைவர்களும் நேரடியாக சந்தித்து கொள்ளவில்லை.. பேசிக்கொள்ளவில்லை.. பேட்டிகளையும் தந்து கொள்ளவில்லை.. கூட்டணி உறுதிப்படுத்தினாலும்கூட, அகில இந்திய அளவில்தான் அது உறுதியாகி உள்ளதே தவிர, மாநில அளவில் வெளிப்படையாக தெரியவில்லை.

 Can OPS meet Amit Shah today and what are the tamilnadu bjps strategies

இப்போது மறுபடியும் 2ம் கட்ட தலைவர்களிடம் அதிருப்தி வெடித்துள்ளது.. இப்போது இதை ஆரம்பித்து வைத்ததே செல்லூர் ராஜுதான் என்கிறார்கள்.. அண்ணாமலை கூறுவது போல். தேர்தலில் அவர்கள் தயவில் நாங்கள் வெற்றி பெற போவதில்லை. எங்களுடன் பயணித்தால் மட்டுமே அவர்களால் கரைசேர முடியும். இல்லாவிட்டால் நட்டாற்றில் போக வேண்டிய பரிதாபம் அவர்களுக்கு ஏற்படும்'' என தெரிவித்திருந்தார்.

இது பாஜகவுக்கு எரிச்சலை மூட்டிக்கொண்டிருக்கிறது. "கரை சேர முடியாமல் நட்டாற்றில் தத்தளித்த அதிமுகவை நங்கூரமிட்டு பாதுகாத்தது பாஜகதான் என்பதை மறந்துவிடக் கூடாது'' என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுக்கு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பதிலடி தந்துள்ளார்..

இரண்டு பிரச்சனைகள்: இந்த மோதல் வெடித்துள்ள நிலையில்தான், அமித்ஷா இன்று சென்னை வருகிறார்.. எடப்பாடி + ஓபிஎஸ் பஞ்சாயத்தை தீர்த்து வைப்பாரா? அல்லது அதிமுக - பாஜக பிரச்சனையை தீர்த்து வைப்பாரா? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+