ரூல்ஸை தாறுமாறா போட்டு.. "பல்பு" வாங்குதா பாஜக? அண்ணாமலை ஆசைப்பட்டதுகூட நடக்கலயே.. கலங்குது கமலாலயம்
சென்னை: தமிழக பாஜக தன்னுடைய வாக்கு பலத்தை கூட்டும் முயற்சியில் இறங்கி வருகிறது.. இதற்கான முயற்சிகள் பல வருட காலமாக நடந்து கொண்டிருந்தாலும், குறிப்பிட்ட இலக்கை இன்னும் எட்டமுடியாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பிரத்யேகமான தகவல் ஒன்றும் நமக்கு கிடைத்திருக்கிறது.
தமிழக பாஜகவின் உறுப்பினர் சேர்க்கை பின்னடைவை சந்தித்திருப்பதாக கமலாலய வட்டாரங்களில் அதிருப்தி வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.

பாஜக தலைமை: தமிழக பாஜகவுக்கு 1 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்கிற இலக்கை நிர்ணயித்திருந்தது அக்கட்சியின் தேசிய தலைமை... இதையடுத்து, அந்த இலக்கை அடைவதற்காக, புதிய உறுப்பினர் களைச் சேர்க்கும் பணியினை கடந்த செப்டம்பர் மாதம் 1-ந்தேதி முதல் களத்தில் இறங்கினார்கள் தமிழக பாஜகவினர்.
மாநில நிர்வாகிகளுக்கும், மாவட்ட நிர்வாகிகளுக்கும் பகுதி வாரியாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதாவது, ஒரு பூத்துக்கு 200 உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர். 20 நபர்களையே சேர்க்க முடியாது.. இதில் 200 நபர்களை எப்படி சேர்க்க முடியும் ? என்று எதார்த்த சூழலை நிர்வாகிகள் விவரித்தபோதும், புதிதாக நியமிக்கப்பட்ட ஒருங்கிணைப்புக்குழுவினர் அதனை ஏற்க மறுக்கின்றனராம். இதனால் நிர்வாகிகள் நொந்து போயுள்ளனர்.
உறுப்பினர் சேர்க்கை: மேலும், உறுப்பினர் சேர்க்கையில் பல வித ஆதாரங்களை கேட்டு பெற வேண்டும் என்பதிலும், உறுப்பினராவதில் உள்ள நடைமுறைகளிலும் சிக்கல் இருக்கிறது.. அதனை கட்சியின் ஒருங்கிணைப்புக் குழுவினரோ, தலைவர்களோ புரிந்து கொள்ள மறுக்கின்றனர் என்ற புலம்பல்களும் நிர்வாகிகள் தரப்பில் அதிகம் எதிரொலிக்கிறது.
அதாவது, ஒருவரை உறுப்பினராக்க வேண்டுமானால், சம்மந்தப் பட்டவரின் ஃபோன் நெம்பரில் இருந்து மிஸ்ட் கால் தரவேண்டும். அப்போது ஒரு ஓடிபி எண் அனுப்பி வைக்கப்படும். அந்த ஓ.டி.பி. எண்ணை உறுப்பினர் சேர்க்கைக்காக வந்துள்ள பாஜகவினரிடம் சொல்ல வேண்டும். அவர் அதனை ஓ.கே. என ஃபீட் பண்ணியதும் அவர் உறுப்பினராகிவிட்டார் என்ற மெசேஜ் அனுப்பி வைக்கப்படும்.
ஆதாரங்கள்: இதற்கு முன்னதாக பல கேள்விகள் கேட்டு அதற்கான ஆதார் அட்டை, இருப்பிட முகவரி, வாக்காளர் அட்டை என பல்வேறு ஆதாரங்களை அனுப்பி வைக்கப்பட வேண்டும்... தங்களிடமுள்ள வாக்காளர் அட்டையை காட்டுவதற்கு மக்கள் ஓ.கே. சொல்கிறார்கள். ஆனால், ஆதார் அட்டை, ரேசன் அட்டை எல்லாம் கேட்கும்போது பயப்படுகிறார்கள்.
உடனே, எங்களுக்கு கட்சியெல்லாம் வேணாங்க ; ஒரு கட்சியில் உறுப்பினராவதற்கு எதற்கு இத்தனை ஆதாரங்களைக் கேட்கிறீங்க? என்று நம்மிடம் கேள்வி கேட்டு உறுப்பினராவதிலிருந்து விலகிக் கொள்கிறார்களாம். அதேபோல, ஓ.டி.பி. வரும், அதை சொல்லுங்கள் என்றாலும் பயந்து விடுகிறார்களாம்..
நிறைய ரூல்ஸ்: இப்படி ஏகப்ட்ட ரூல்ஸ்சை போட்டு உறுப்பினர்களை சேருங்கள் என்று டெல்லி தலைமையும் உத்தரவிடுகிறது. ஆனால், அதன்படி சேர்க்க முயற்சித்தால் யாருமே உறுப்பினராக மாட்டேங்கிறார்கள். இதை தலைமையிடம் சொன்னால், காது கொடுத்து கூட கேட்பதில்லை என்கின்றனர் பாஜக நிர்வாகிகள்.
ஏகப்பட்ட ரூல்ஸ்சை வைத்துக்கொண்டு உறுப்பினர் சேர்க்கை பணிகளில் ஈடுபடுவதால், பாஜகவினரின் நேரம் தான் விரயமாகிறதே தவிர, குறிப்பிட்ட எண்ணிக்கையில் கூட உறுப்பினர்களை சேர்க்க முடிவதில்லை.. இதனால், 10 லட்சம் உறுப்பினர்களைக் கூட இன்னும் தாண்ட முடியாமல் உறுப்பினர் சேர்க்கை தள்ளாடுகிறது.
நொந்து போன நிர்வாகிகள்: ஏற்கனவே கட்சியில் 50 லட்சம் உறுப்பினர்கள் இருப்பதாக அண்ணாமலை சொல்லியிருந்தார். அவர்கள் கூட தங்களின் உறுப்பினர் அட்டையை புதுப்பிக்க போதுமான ஆர்வம் காட்டவில்லை. அப்படி செய்திருந்தால் இந்நேரம் 50 லட்சம் உறுப்பினர்களை புதுப்பித்திருக்க முடியும். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. இதனால், பாஜகவின் 1 கோடி இலக்கு நொண்டி அடித்துக்கொண்டிருக்கிறது என்று நொந்து சொல்கிறார்களாம் பாஜகவினர். ஆனால், விரைவில் தேர்தல் வரவுள்ள நிலையில், உறுப்பினர் சேர்க்கை விஷயத்தில் பாஜக தொடர்ந்து தீவிரம் காட்டும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications