ஒரு அணிக்கு 16 வீரர்கள்.. டாஸ் போடும்போதே ட்விஸ்ட் இருக்கு.. ஐபிஎல் தொடரில் அறிமுகமாகும் விதிகள்!
ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய விதிமுறைகளை பற்றி பார்க்கலாம்.
சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில், போட்டிகளை சுவாரஸ்யமாக்குவதற்காக பல்வேறு விதிகளை பிசிசிஐ அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக டாஸ் போட வரும் கேப்டன் இனி இரு அணிகளுடன் வர வேண்டும் என்றும், 16 வீரர்களை தேர்வு செய்திருக்க வேண்டும் என்று விதிகளில் சொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி முடிவடைந்துள்ளது. என்னதான் ஆஸ்திரேலியா அணி தொடரை வென்றிருந்தாலும், இன்னும் சில நாட்களில் ஐபிஎல் தொடர் தொடங்க உள்ளதால் ரசிகர்களின் உற்சாகம் உயர்ந்து வருகிறது.
ஒட்டுமொத்தமாக இந்திய அணிக்கு ஆதரவுக் கரம் நீட்டிக் கொண்டிருந்த ரசிகர்கள், இனி சென்னை, மும்பை, பெங்களூரு, குஜராத் என்று தங்களுக்கு பிடித்த அணிகளுக்கு ஆதரவை வழங்க உள்ளார்கள்.

இம்பேக்ட் பிளேயர் விதி
இப்படி ஒரு பக்கம் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்க, மறுபக்கம் ஐபிஎல் தொடரில் கூடுதல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்த பிசிசிஐ பல்வேறு விதிகளை கொண்டு வரவுள்ளது. ஏற்கனவே பிசிசிஐ அறிவித்த இம்பாக்ட் பிளேயர் விதிகளே ஆட்டத்தில் என்ன மாதிரியான பரபரப்பை கொடுக்கும் என்று தெரியாமல் இருக்கும் போது, அந்த விதியை அமல்படுத்துவதற்கான நடுவரின் செய்கைகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இம்பாக்ட் பிளேயர் விதிமுறை போட்டியில் கொண்டு வரப்பட்டால், இனி நடுவர் தனது இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி கிராஸாக சிக்னல் கொடுப்பார். இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால் பிகில் படத்தில் தலை விஜய் செய்வது போன்ற சிக்னலாகும்.

16 வீரர்கள்
அதேபோல் இன்னும் சில புதிய விதிமுறை என்பது, இனி ஒவ்வொரு போட்டியின் போது டாஸ் போடுவதற்கு முன் கேப்டன்கள் தங்களது பிளேயிங் 11ஐ எதிரணி கேப்டனிடம் கொடுக்க தேவையில்லை. இனி டாஸ் போட வரும் போது கேப்டன்கள் இரு அணிகளுடன் வர வேண்டும். அதாவது டாஸ் வென்று பேட்டிங் செய்தால் ஒரு அணி, டாஸ் வென்று பவுலிங் செய்தால் ஒரு அணி என்று கொடுக்க வேண்டும். தங்களது எந்த அணி தேவையோ, அதனை டாஸ் போட்ட பின் டிக் செய்து கொடுக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் இனி ஒவ்வொரு கேப்டனும் 11 வீரர்கள் மற்றும் 5 சப்ஸ்டிடியூட் வீரர்களையும் முன்னதாக தெரிவிக்க வேண்டும். இதனால் 16 வீரர்கள் கொண்ட அணியை கேப்டன்கள் இனி தேர்வு செய்ய வேண்டும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

எதிரணிகளுடனான சீண்டல்
அதுமட்டுமல்லாமல் நடப்பு ஐபிஎல் தொடரில் விக்கெட் மட்டுமின்றி இனி வொய்ட் மற்றும் நோ-பால் ஆகிய தீர்ப்புகளை கூட கேப்டன்களால் ரிவ்யூ செய்ய முடியும் வகையில் விதிகள் கொண்டு வரப்பட உள்ளது. இந்த விதி ஏற்கனவே மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனை வீராங்கனைகளும் பல்வேறு தருணங்களில் பயன்படுத்தினர்.

டி20 உலகக்கோப்பை விதிமுறையும் அமல்
அதேபோல் எதிரணி வீரர்கள் இனி பேட்ஸ்மேன்களை வம்புக்கு இழுக்கும் வகையில் ஏதேனும் செய்கைகள் செய்தாலோ, நடந்துகொண்டாலோ, 5 ரன்கள் பேட்டிங் செய்யும் அணிக்கு வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல் டி20 உலகக்கோப்பையில் பின்பற்றப்பட்ட குறிப்பிட்ட நேரத்திற்குள் கடைசி ஓவரை வீசி முடிக்கவில்லை என்றால், வட்டத்திற்கு வெளியே 4 ஃபீல்டர்கள் மட்டுமே நிற்க அனுமதிக்கப்படுவார்கள். அதுவே சரியான நேரத்தில் ஓவர்களை வீசி முடித்தால், 5 ஃபீல்டர்களை நிறுத்தி வைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவையனைத்தும் தென்னாப்பிரிக்கா டி20 லீக் தொடரில் ஏற்கனவே பரிசோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications