ரூ.1.37கோடி மோசடி! சிக்கிய எடப்பாடியார் பிஏ..!நெருக்கும் மத்திய குற்றப்பிரிவு போலீஸ்! அடுத்து என்ன?
சென்னை: அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தனி உதவியாளர் சேலம் நடுப்பட்டியைச் சேர்ந்த மணி மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மணியிடம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில் அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் நடுப்பட்டியை சேர்ந்தவர் மணி. இவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தனிப்பட்ட உதவியாளராக இருந்தவர் ஆவார்.
எடப்பாடி முதல்வராக இருந்த போது அரசு வேலை வாங்கித் தருகிறேன் என்று கூறி மேச்சேரி பள்ளிப்பட்டியை சேர்ந்த சிவகுமார் மற்றும் ஒருவர் புகார் அளித்தனர்.

25 பேரிடம் மோசடி
இருவரும் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை 25 பேரிடம் பணம் வாங்கி வனத்துறை, மின்சாரத்துறை, பள்ளியில் உள்ள ஆய்வகம், ரேஷன் கடை, கால்நடைத்துறை மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி வேலை என மொத்தம் 25 பேரிடம் ஒரு கோடியே 37 லட்சத்தி 50 ஆயிரம் ரூபாயை மணியிடம் கொடுத்ததாக கூறியுள்ளனர்.

நெருக்கடி
பணத்தை வாங்கிய மணி, அவர் சொன்னபடி அரசு வேலை வாங்கித் தரவில்லை. இதனால் பணம் கொடுத்தவர்கள் பணத்தை திரும்பக் கொடுங்கள் என கேட்டு நெருக்கடி கொடுத்தனர்.

மிரட்டுகிறார்
இதனால் கொடுத்த பணத்தை திரும்பத் தருமாறு மணியிடம் கேட்டோம். அவரும் கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்தார். இதுவரை ரூபாய் 60 லட்சம் கொடுத்தால், மீதமுள்ள 77 லட்சத்து 50 ஆயிரத்தை கொடுக்கவில்லை. மணியிடம் பணம் கேட்டும் பல்வேறு காரணங்களைச் சொல்லி ஏமாற்றி வந்த நிலையில், தற்போது பணம் கொடுக்க மறுத்ததுடன் தரக்குறைவாக பேசி மிரட்டுகிறார்.

நெருங்கும் போலீஸ்
எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை மீட்டுத்தர வேண்டும் எனவும், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இருவரும் கடந்த ஆகஸ்டு மாதம் 22 ஆம் தேதி சேலம் எஸ்.பியிடம் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் மணியிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் அவர்மீது பணமோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மணியிடம் போலீசார் விசாரணையை தீவிரமாக நடத்தி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் அடுத்த என்ன நடக்கும் என்ற பரபரப்பு அதிமுகவில் எழுந்துள்ளது.

வேலை மோசடி
முன்னதாக அமைச்சராக இருந்தபோது, பலருக்கு வேலைக்கு வாங்கித் தருவதாக கிட்டத்தட்ட 6 கோடி ரூபாயை தனது அரசியல் உதவியாளரான பிரகாசம் என்பவர் மூலம் மோசடி செய்ததாக நிலோபர் கபில் மீது குற்றச்சாட்டுகள் கடந்த மே மாதம் எழுந்தன. கிட்டத்தட்ட 6 கோடி ரூபாயை மோசடி செய்த புகாரில் நிலோபர் கபில் மீது புகார்கள் எழுந்தன. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பதவியில் இருந்த சமயத்தில், தனது துறையிலும், தமிழ்நாடு வக்பு வாரியத்திலும் பலருக்கு வேலைக்கு வாங்கித் தருவதாக உதவியாளரான பிரகாசம் என்பவர் மூலம் நிலோபர் வாங்கியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.












Click it and Unblock the Notifications