“ரோட்ல பிச்சைதானே எடுக்குற”.. போக்குவரத்து காவலரை தாக்கிய சம்பவம்.. காங்கிரஸ் MLA மீது வழக்குப்பதிவு
சென்னை: சென்னையில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த காரை எடுக்குமாறு கூறிய போக்குவரத்து காவலரை, காங்கிரஸ் எம்.எல்.ஏ தாக்கிய சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு நகரங்களில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது. பலரும் தீபாவளி இறுதிக்கட்ட ஷாப்பிங்கில் உள்ளதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இந்நிலையில், சென்னை அண்ணா சாலையில் ஸ்பென்சர் பிளாசா அருகே போக்குவரத்து இடையூறாக கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

அந்த கார் மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர் ராஜ்குமாருக்கு சொந்தமானது. போக்குவரத்துக்கு இடையூறாக நின்றிருந்த காரை போக்குவரத்து காவலர் பிரபாகரன் அங்கிருந்து எடுக்குமாறு கூறியும், காரை எடுக்க எம்எல்ஏ மறுத்துள்ளார்.
போக்குவரத்து காவலருடன் எம்எல்ஏ ராஜ்குமாா், அவரது ஆதரவாளா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் எம்எல்ஏ ராஜகுமார் போக்குவரத்து காவலரை கன்னத்தில் அடித்ததாகவும் கூறப்படுகிறது.
போக்குவரத்து காவலர் பிரபாகரனை அடித்த எம்எல்ஏ ராஜகுமார், "என் காரை எடுக்க முடியாது, இங்கு தான் நிற்கும்.. ரோட்டுல பிச்சை தானே எடுக்குறீங்க" எனக் கூறிவிட்டு சாலையிலேயே விட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து காரின் சக்கரங்களை பூட்டி போக்குவரத்து காவலர் பிரபாகரன் அபராத ரசீது வழங்கி உள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்துவந்த அண்ணா சாலை போலீசார், காவல் உயர் அதிகாாிகளுக்கு தகவல் தொிவித்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில், போக்குவரத்து காவலரை தாக்கிய சம்பவத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜ்குமார் மீது 3 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எம்எல்ஏ ராஜ்குமார் மீது ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், காயம் ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications