Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை.. தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு எதிரான வழக்குகள் ஹைகோர்ட்டில் வாபஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாபஸ் பெறப்பட்டுள்ளன.

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்து தமிழக அரசு கடந்த அக்டோபர் மாதம் அவசரச் சட்டம் பிறப்பித்தது. இந்த சட்டத்துக்கு தடை விதிக்க கோரியும், ரத்து செய்யக் கோரியும், மும்பையைச் சேர்ந்த அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு உள்ளிட்ட நிறுவனங்களின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்ட போதும் அது அமலுக்கு வரும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பதால் இந்த வழக்கை தொடர எந்த காரணமும் இல்லை என தெரிவித்தார்.

சட்டமன்றம்

சட்டமன்றம்

மேலும், அவசர சட்டத்துக்கு பதிலாக சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் ஆரியமா சுந்தரம், முகுல் ரோத்தகி, சதீஷ் பராசரன் ஆகியோர், அவசர சட்டம் அமலுக்கு வரும் தேதி இன்னும் அறிவிக்கப்படாவிட்டாலும் கூட அது அமலில் உள்ள சட்டமாகத்தான் கருத வேண்டும் என்றும் அவசர சட்டத்திற்கு மாற்றாக நிறைவேற்றப்பட்டுள்ள சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த பிறகு தான் அவசர சட்டம் காலாவதி ஆகும் என குறிப்பிட்டனர்.

அதிகாரிகள்

அதிகாரிகள்

அவசர சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முனைப்பு காட்டுவதால் அது அமலுக்கு வரும் தேதி அறிவித்த சில நாட்கள் வரை நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நீதிபதிகள், அவசர சட்டம் அமலுக்கு வரும் தேதி இன்னும் அறிவிக்காத நிலையில் இந்த வழக்கு தொடர்வதற்கு எந்த காரணமும் இல்லை என குறிப்பிட்டனர்.

அவசர சட்டம்

அவசர சட்டம்

மனுதாரர்கள் தரப்பில் அவசர சட்டம் அமலுக்கு வரும் தேதி அறிவித்த பிறகு புதிதாக வழக்கு தொடர்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்றுக் கொண்டு வழக்கை வாபஸ் பெற அனுமதித்து தள்ளுபடி செய்த நீதிபதிகள் அவசர சட்டம் அமலுக்கு வரும் தேதி அறிவித்த பிறகு வழக்கு தொடர்வதற்கு ஆன்லைன் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்தும் உத்தரவிட்டனர்.

ஆன்லைன் விளையாட்டுகள் தடை சட்டம்

ஆன்லைன் விளையாட்டுகள் தடை சட்டம்

ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் தங்கள் பணத்தை இழந்து பின்னர் கடனாளியாகி இன்னுயிரையே இழக்கிறார்கள். ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளால் எத்தனையோ குடும்பங்கள் நடுத்தெருவில் நின்றுள்ளன. அது போல் பப்ஜி, ப்ளூவேல், ப்ரீபயர் ஆகிய விளையாட்டுகளால் மாணவர்களும் இளைஞர்களும் அடிமையாகி வாழ்க்கையை இழக்கிறார்கள். இதனால் இந்த விளையாட்டை தடை செய்ய கோரிக்கைகள் எழுந்தன. அதன்படி கடந்த ஜூன் மாதம் தமிழக அரசு ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய அவசர சட்டம் கொண்டு வந்தது. அதை அமல்படுத்துவதற்கு முன்னர் மும்பையை சேர்ந்த அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் எதிர் மனு தாக்கல் செய்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+