எல்லா ஆவணமும் இருக்கு.. எதுக்கு பைன்? சென்னையில் வாக்குவாதம் செய்த டிரைவர் மீது போலீஸ் வழக்கு பதிவு
சென்னை: அனைத்து ஆவணங்களும் தன்னிடம் இருந்த போதிலும் ஏன் 500 ரூபாய் அபராதம் விதிக்கிறீர்கள் என்று போக்குவரத்து போலீசாரிடம் வாக்குவாதம் செய்த வாகன ஓட்டுனர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை கொளத்தூர் செந்தில் நகர் சிக்னல் அருகே கடந்த 6 ஆம் தேதி போக்குவரத்து தலைமைக் காவலர் ராமச்சந்திரன் மற்றும் காவலர் வாசுதேவன் ஆகியோர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சிறிய சரக்கு வாகனம் ஒன்று பள்ளி பாடப்புத்தகங்களை ஏற்றிக்கொண்டு வந்தது. அந்த சரக்கு வாகனத்தை மறித்த டிராபிக் போலீசார் விதிமீறலில் ஈடுபட்டதாக கூறி 500 ரூபாய் அபராதம் விதிக்க முயன்றனர்.

ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சரக்கு வாகனத்தின் டிரைவர் எந்த காரணத்திற்காக 500 ரூபாய் அபராதம் விதிக்கிறீர்கள் என்று கேட்டு போலீசிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். மேலும் டிராபிக் போலீஸ் அணிந்த சீருடையில் அவருடைய பெயர் பேட்ஜ் இல்லை. இதனால், நீங்கள் போலீஸ்தானா.. உங்களின் ஆவணத்தை காட்டுங்கள் என்று ஓட்டுநர் போக்குவரத்து போலீசிடம் கேட்டார்.
தன்னிடம் அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கிறது பிறகு எதற்கு அபராதம் விதிக்கிறீர்கள். வேலிட் லைசன்ஸ் இருக்கு. வேலிட் புக் இன்சுரன்ஸ் இருக்கு.. எல்லா ஆவணங்களும் சரியாக இருக்கு.. அப்புறமும் அப்ஸ்ட்ரகஷன் என்று அபராதம் போடுகிறீர்கள். உங்களுக்கு எதிராக ஐஜி அலுவலகத்தில் புகாரளிப்பேன் என வாக்கு வாதம் செய்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது.
இந்த நிலையில், போலீசாரிடம் வாக்கு வாதம் செய்த டிரைவர் செந்தமிழன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆவணங்களை காட்டாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போலீசாரை பணி செய்ய விடாமல் இடையூறு செய்ததாக ராஜமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் டிரைவர் செந்தமிழன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிறப்பு கவல் உதவி ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில் ஓட்டுநர் செந்தமிழன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவலரை பணி செய்ய விடாமல் தடுத்தல், மிரட்டல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், டிரைவர் செந்தமிழனை நேரில் அழைத்து விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications