Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

190 கேள்விகளால் துளைத்து.. 8 மணி நேரம்.. பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகரை திணறடித்த சிபிசிஐடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் சிபிசிஐடி போலீசார் இன்று 190 கேள்விகளால் 8 மணி நேரமாக விசாரணையால் துளைத்தெடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை நடத்தினர். தாம்பரத்தில் நடைபெற்ற இந்தச் சோதனையின்போது, ரயிலில் பயணித்த 3 பேரிடம், கணக்கில் காட்டப்படாத ரூ.4 கோடி பணம் பிடிபட்டது.

bjp sr sekar nainar nagendran cbcid

நெல்லை லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளரும், எம்.எல்.ஏவுமான நயினார் நாகேந்திரனின் தேர்தல் செலவுக்காக இந்த பணம் கொண்டு செல்லப்பட்டதாக புகார் எழுந்தது. பணத்தைக் கொண்டு சென்ற சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய மூவரையும் கைது செய்து, அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

ரயிலில் பணத்துடன் பிடிபட்ட சதீஷ், அவரது சகோதரர் நவீன், ஸ்ரீவைகுண்டம் டிரைவர் பெருமாள் மற்றும் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன், அவரிடம் பணியாற்றும் ஜெய்சங்கர், ஆசைத்தம்பி ஆகியோருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினர்.

இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. பாஜக தலைமையிடம் இருந்து தான் பணம் நயினார் நாகேந்திரனின் தேர்தல் செலவுக்காக வழங்கப்பட்டதாகவும், இதில் பாஜக நிர்வாகிகள் பலரும் சம்பண்டப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் பரபரத்தன.

பணம் கை மாறியதாக கூறப்பட்ட தமிழக பாஜக வர்த்தக பிரிவு தலைவர் கோவர்தனுக்கு சொந்தமான சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள உணவகம், நீலாங்கரை பகுதியில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்றது. கோவையில் உள்ள தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகரின் வீட்டிலும் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர்.

மேலும், நயினார் நாகேந்திரன், தமிழக பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், கோவர்தன், நயினார் நாகேந்திரனின் உதவியாளர் மணிகண்டன் ஆகிய 4 பேரும் கடந்த ஜூன் 31 ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி, சிபிசிஐடி சம்மனை ஏற்று கேசவ விநாயகம், எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

எஸ்.ஆர்.சேகர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், "தன்னிடம் இருந்து செல்போனை பறித்து தன்னை துன்புறுத்தக்கூடாது எனவும், அடிக்கடி சம்மன் அளித்து தன்னை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது" எனவும் குறிப்பிட்டிருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், எஸ்.ஆர்.சேகரிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்யக்கூடாது எனவும், ஆனால் அவர் ஜூலை 11ஆம் தேதி சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனவும் அறிவுறுத்தியது.

அதன்படி, இன்று தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார். சிபிசிஐடி அதிகாரிகள் அனுப்பிய சம்மனை ஏற்று, உயர் நீதிமன்ற உத்தரவின்படி அவர் விசாரணைக்கு ஆஜரானார்.

சிபிசிஐடி விசாரணைக்கு நேரில் ஆஜரான பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். தனி அறையில் வைத்து எஸ்.ஆர்.சேகரிடம் சிபிசிஐடி போலீசார் துருவித் துருவி விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

எஸ்.ஆர்.சேகரிடம் சிபிசிஐடி போலீசார் 190 கேள்விகளை எழுப்பி துளைத்தெடுத்ததாக கூறப்படுகிறது. 4 கோடி ரூபாய் பணம் கட்சியில் இருந்து கொடுக்கப்பட்டதாக இருந்தால் அது பொருளாளரான எஸ்.ஆர்.சேகருக்கு தெரியாமல் இருக்காது என்பதன் அடிப்படையில் தீவிர விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது.

மேலும், ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களிடமும், விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களிடமும் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையிலும் எஸ்.ஆர்.சேகரிடம் சிபிசிஐடி போலீசார் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பி அவரது பதில்களை பதிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் 8 மணி நேரம் தீவிர விசாரணை நடந்த நிலையில், இன்றைய விசாரணையின் அடிப்படையில் தான், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சிபிசிஐடி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+