சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அப்பாவும் மகனும் ஊரில் இல்லை! பக்காவாக ஸ்கெட்ச் போட்ட சிபிஐ அதிகாரிகள்! பின்னணி என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவருக்கு தொடர்புடைய
7 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்துவது தேசியளவில் கவனம் ஈர்த்துள்ளது.

Recommended Video

    ப. சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிரடி ரெய்டு

    சென்னை, சிவகங்கை, டெல்லி, மும்பை என பல இடங்களில் சோதனை நடைபெற்று வரும்
    நிலையில் ப.சிதம்பரம் ராஜஸ்தானிலும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் லண்டனிலும் இருக்கிறார்கள்.

    அதிர்ச்சி! வானிலிருந்து பறந்து வந்து.. குஜராத்தில் 3 இடத்தில் விழுந்த இரும்பு பந்துகள்! நடந்தது என்ன அதிர்ச்சி! வானிலிருந்து பறந்து வந்து.. குஜராத்தில் 3 இடத்தில் விழுந்த இரும்பு பந்துகள்! நடந்தது என்ன

    அப்பாவும் மகனும் ஊரில் இல்லாத நேரமாக பார்த்து பக்காவாக ஸ்கெட்ச் போட்டு
    சோதனையை நடத்தி வருகிறது சிபிஐ.

    சிபிஐ சோதனை

    சிபிஐ சோதனை

    முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி
    சிதம்பரத்துக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் மீண்டும் சோதனை
    நடத்தி வருகின்றனர். இந்த நிகழ்வு தேசியளவில் அனைத்து ஊடகங்களிலும்
    தலைப்புச் செய்தியாக இடம்பிடித்துள்ளது. ஆங்கில செய்தி நிறுவனங்கள் ப.சி.
    வீட்டில் நடத்தப்படும் சோதனையை பெரும் விவாதப்பொருளாக மாற்றி சுடச்சுட
    சோதனை குறித்த தகவல்களை வெளியிட்டு வருகின்றன.

    தந்தை மகன்

    தந்தை மகன்


    சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில் ப.சிதம்பரமும், கார்த்தி
    சிதம்பரமும் ஊரில் இல்லை என்பது தான் கவனிக்க வேண்டிய விவகாரமாகும். கட்சி
    நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ப.சிதம்பரம் ராஜஸ்தானிலும், மகளை
    பார்ப்பதற்காக கார்த்தி சிதம்பரம் லண்டனிலும் இருக்கிறார்கள். கார்த்தி
    சிதம்பரத்தின் மகள் லண்டனில் படித்துக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
    இந்த சோதனை குறித்த தகவல் அறிந்தவுடன் எத்தனைமுறை தான் சோதனை நடத்துவார்கள்
    என தனக்கே உரிய பாணியில் சிபிஐ யை கிண்டல் செய்திருந்தார்.

    கட்சியினர் இல்லை

    கட்சியினர் இல்லை

    சென்னையில் உள்ள ப.சிதம்பரம் வீட்டில் சோதனை நடத்தப்படும் நிலையில் அங்கு
    பெருமளவில் அவரது ஆதரவாளர்களோ, கட்சியினரோ குவியவில்லை என்பது இங்கு
    கவனிக்கத்தக்கது. இதேபோல் தான் சிவகங்கை மற்றும் டெல்லியிலும் நிலைமை.
    பொதுவாக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் இது போன்ற சோதனைகள் நடத்தப்பட்டால்
    உடனே அவர்களது ஆதரவாளர்கள் அங்கு குவிவது அரசியலில் வழக்கமாக இருந்து வருகிறது.

    மாலை பிரஸ்மீட்

    மாலை பிரஸ்மீட்

    இதனிடையே ப.சிதம்பரம் தொடர்புடைய இடங்களில் நடத்தப்படும் சோதனையை கண்டித்து
    வழக்கம் போல் மாலை 6 மணிக்கு காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர்
    சுர்ஜேவாலா கண்டனம் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக
    காங்கிரஸ் கமிட்டியில் ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்களாக அறியப்பட்ட பலர்
    இப்போது அணி மாறியிருப்பது கவனிக்கத்தக்கது.

    English summary
    CBI Raid in P.Chidambaram house:முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X