படாரென்று மோதிய ரயில்! அலறியடித்து ஓடிய மக்கள்! சற்று முன் வெளியான பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்.!
சென்னை : சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் புறநகர் ரயில் பிளாட்பாரத்தில் புகுந்து விபத்துக்குள்ளான பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், மக்கள் அலறி அடித்து ஓடும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
Recommended Video
சென்னை மாநகரையும் புறநகர் பகுதிகளையும் இணைப்பதில் புறநகர் ரயில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை இல்லாமல் சென்னையின் பல மக்கள் நாட்களை கடத்துவது என்பது இயலாத காரியம் தான்.
அந்த அளவுக்கு சென்னை மக்களோடு பின்னிப் பிணைந்த புறநகர் ரயில் விபத்துக்குள்ளான சம்பவம் தமிழகம் முழுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ரயில் விபத்து
சென்னை தாம்பரம் நோக்கி செல்வதற்காக சென்னை கடற்கரை ரயில் நிலைய பணிமனையிலிருந்து புறநகர் ரயில் ஒன்று கடற்கரை ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடைக்கு வந்து கொண்டிருந்தது. ரயில் நிறுத்துமிடம் அருகே வந்த போது ரயிலில் இருந்த லோகோ பைலர் அதனை நிறுத்த முயற்சித்துள்ளார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த ரயிலின் பிரேக் பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

அசம்பாவிதம் தவிர்ப்பு
இதனால் அதிர்ச்சியடைந்த ரயிலின் ஓட்டுநர் சங்கர் என்பவர் அதிலிருந்து குதித்து உயிர்தப்பிய நிலையில், வேகமாக சென்ற ரயில், பல தடுப்புகளை இடித்து தகர்த்துக் கொண்டு நடைமேடையில் மோதி நின்றது. இந்த விபத்தில் அந்த ரயில் என்ஜினுடன் இணைந்த முதல் பெட்டி சேதமடைந்த நிலையில், ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்ததாலும், ரயிலில் பயணிகள் இல்லாததாலும் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

விபத்து குறித்து விசாரணை
இந்நிலையில் விபத்து நடந்த போது ரயிலின் ஓட்டுனர் ரயிலை இயக்கிய போது நடை மேடையில் இருந்த மக்களை எச்சரித்து விட்டு கீழே குதித்ததாகவும், இதனால் அங்கிருக்கும் மக்கள் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது விபத்து குறித்து ரயில்வே காவல்துறையினர் மற்றும் ரயில்வே நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், பிரேக் பிடிக்காததால் விபத்து ஏற்பட்டதாக ரயில் ஓட்டுனர் கூறியுள்ளார்.

சிசிடிவி காட்சிகள்
இதனிடையே புறநகர் ரயில் ரயில் நிலையத்தின் நடைமேடையில் ரயில் மோதும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. வேகமாக வந்த ரயில் நடைமேடையில் மோதி புழுதி கிளம்பிய நிலையில், அங்கிருந்த பயணிகள் பதறிச் செல்லும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரப்பப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications