தலைமை நீதிபதி இடமாற்றம்.. பின்னணியில் யார்? மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் புகாரால் பரபரப்பு
சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜியை இடமாற்றம் செய்ததில் மத்திய அரசினுடைய தலையீடு உள்ளதாக மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் தெரிவித்தார்.
Recommended Video
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்துள்ளார் இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்.
தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜியை இடமாற்றம் செய்து உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய நீதிபதிகள் தேர்வுக்குழு (கொலேஜ்ஜியம்) பரிந்துரை செய்த நடவடிக்கைக்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

வழக்கறிஞர்கள்
இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் உள்பட பல்வேறு வழக்கறிஞர்களின் சங்கங்கள் சஞ்சீப் பானர்ஜியின் இடமாற்ற நடவடிக்கை குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளன.

கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜியை இடமாற்றம் செய்யும் முடிவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்ற ஆவின் வளாகம் முன்பு அனைத்து ஜனநாயக ஒருங்கிணைப்பு குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 50ற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

அடிக்கடி இடமாற்றம் ஏன்
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத், அரசியலமைப்பின் சேவகர்களை இவ்வாறாக பணியிட மாற்றம் செய்து கொண்டே இருந்தால் நீதிபதிகள் இருப்பார்கள் ஆனால் நீதிமன்றம் இருக்காது. கொலிஜியம் முதல்முறையாக அரசியல் சாசனத்தில் இல்லாத அதிகாரத்தை செயல்படுத்தி வருவதாகவும், அடிக்கடி இட மாற்றம் என்பது நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

பலி ஆடு
நேர்மையான தீர்ப்பு வழங்கியதன் காரணமாக பலி ஆடு விட்டதாகவும், முக்கிய தீர்ப்பு வழங்கியவர்கள் அனைவருமே பலியாகியுள்ளனர்.
தலைமை நீதிபதியை எதற்காக பணியிட மாற்றம் செய்தார்கள் என்பதை விளக்க வேண்டும். மேலும், எந்தவொரு காரணமும் கூறாமல் மேகாலயா நீதிமன்றத்திற்கு மாற்றியது பயங்கரமான ஒன்று. எந்த ஒரு காரணமும் இல்லாமல் பணியிட மாற்றம் செய்தது சர்வாதிகாரம் போன்றது.

விளக்கம் இல்லை
இதற்கு முன் நீதிபதி தஹில் ரமாணியை மேகாலயா நீதிமன்றத்திற்கு நீதிபதியாக பணி மாற்றம் செய்தார்கள் ஆனால் அதை அவர், எதிர்த்தன் காரணமாக சிபிஐ விசாரணை நடைபெற்றது. அவரையும் எதற்காக இடமாற்றம் செய்தார்கள் என்பதை விளக்கவில்லை. இது அரசியல் சாசனத்திற்கு முரணாக உள்ளது. தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜியை இடமாற்றம் செய்ததில் மத்திய அரசினுடைய தலையீடு உள்ளதாகவும் என்.ஜி.ஆர்.பிரசாத். தெரிவித்தார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications