வேலூர் மக்களுக்கு ஹாப்பி நியூஸ்.. அடுத்த 3 மணி நேரம் முக்கியம்.. 'ஜில்' அறிவிப்பு சொன்ன வானிலை மையம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் ஏப்ரல் 1 முதல் 4 நாட்களுக்கு லேசான மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த ஆண்டு கோடை காலத்தில் இயல்பை விட வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. அதாவது பீகார், ஜார்க்கண்ட், உத்திர பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்காளம், சத்தீஷ்கர், மகாராஷ்டிரா, குஜராத் , பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய மாநிங்களில் வெப்பம் இயல்பைவிட அதிகமாக இருக்கும் என்றும் இந்த பகுதகளில் வெப்ப அலை வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 Chance of moderate rain in 10 districts of Tamilnadu in next 3 hours

தமிழ்நாட்டை பொறுத்த அளவில் பிப்ரவரி முடிவின் போதே ஏப்ரல், மே போல வெளியில் கொளுத்தியது. இருப்பினும் இடையில் லேசான மழை தென் மாவட்டங்களில் குளிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனாலும், வேலூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை அசாலட்டாக கடந்தது. தற்போது வெயிலுடன் சேர்த்து அனல் காற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கி போட்டியிருக்கிறது. இப்படி இருக்கையில்தான் தென் மாவட்ட மக்களுக்கு ஓர் நற்செய்தி கிடைத்தது.

அதாவது ஏப்ரல் 1ம் தேதி முதல் 4ம் தேதி முதல் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும் என்பதுதான் இந்த அறிவிப்பு. தென் இந்தியப் பகுதிகளில் மேல் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு-மேற்கு திசைக் காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக ஏப்ரல் 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. முன்னதாக மார்ச் 31ம் தேதி கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்தது.

இந்நிலையில் காலை 7 மணி நிலவரப்படி அடுத்த 3 மணி நேரத்தில் வேலூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+