ஆட்சிக்கு வந்து 2 வாரம் ஆச்சு.. மோடியால் இந்த முடிவை கூட எடுக்க முடியலையே.. நாயுடு நெருக்கடி! போச்சு
சென்னை: பிரதமர் மோடி 3ம் முறை ஆட்சி அமைத்து 2 வாரம் ஆகியும் கூட இன்னமும் அவரால் மிக முக்கியமான ஒரு முடிவை எடுக்க முடியாத சூழல் உள்ளது.
ஜூன் 26ம் தேதி நாடாளுமன்ற சபாநாயகர் தேர்தல் நடக்க உள்ளது. அதற்கு முன்னதாக ஜூன் 24-ம் தேதி தொடங்கும் 18வது மக்களவையின் முதல் அமர்வின் போது, சபாநாயகர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவதை உறுதி செய்ய பாஜக என்டிஏ கூட்டணி கட்சிகளை அணுகும். பாஜகவின் முன்மொழிவுக்கு என்டிஏ கூட்டணி கட்சிகள் சம்மதித்தால், தேர்தல் நடத்த வேண்டிய அவசியமில்லை. இல்லையென்றால் தேர்தல் நடத்த வேண்டி இருக்கும்.

விட்டுக்கொடுக்க மனமில்லை; இந்த ஒரு விவகாரத்தில் மட்டும் பாஜகவிற்கு விட்டுக்கொடுக்க நாயுடு விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் இருவரும் பாஜக கூட்டணியில் நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் பதவியை பெறுவதற்கு தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். பாஜகவிற்கு தனிப்பட்ட மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் ஏற்கனவே கூட்டணி கட்சிகளுக்கு 18 அமைச்சரவை பதவிகள் வழங்கப்பட்டு உள்ளன
ஸ்பீக்கர் யார்?: இந்த நிலையில் லோக்சபா ஸ்பீக்கர் யார் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. லோக்சபா சபாநாயகர் பதவியை தேர்வு செய்வது கடினமானது. சபாநாயகர் பதவி கட்சி சார்பற்றதாக இருக்க வேண்டும். அதே சமயம் மைனாரிட்டி அரசு அமையும் போது, கூட்டணி ஆட்சியின் போது ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழும் அபாயம் உள்ளது.
முக்கியமாக நம்பிக்கையில்லா தீர்மானம், குதிரை பேரம், எம்பிக்கள் தகுதி நீக்கம் போன்ற சம்பவங்கள் நடக்கும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் சபாநாயகர் பதவி முக்கியமானதாக மாறும்.
நாயுடு திட்டம்: இப்படிப்பட்ட நிலையில்தான் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் இருவரும் ஸ்பீக்கர் போஸ்டை பாஜக கூட்டணியில் பெறுவதற்கு தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். இரண்டு பேருமே "சபாநாயகர்" பதவியை தங்களுக்கான "இன்சூரன்ஸ்" ஆக பார்க்கின்றனர்.
கடந்த 10 வருடங்களில் பாஜக பல அரசுகளை கவிழ்த்து இருக்கிறது. பல மாநில அரசுகளை கவிழ்த்து உள்ளது. பல மாநில கட்சிகளின் லோக்சபா எம்பிக்கள் அணி மாறுவதற்கு பாஜக உதவியாக இருந்துள்ளது. பல கட்சிகளை உடைத்தும் உள்ளது.
இந்த நிலையில் எம்பிக்கள் கொறடா உத்தரவை மீறி மாற்று கட்சிக்கு வாக்களிக்கும் போது அவர்களை தகுதி நீக்கும் செய்யும் அதிகாரம் சபாநாயகருக்கே இருக்கும். இதில் கோர்ட் கூட தலையிட முடியாது. உதாரணமாக எதிர்காலத்தில் பாஜக ஆட்சிக்கான ஆதரவை தெலுங்கு தேசம் வாபஸ் வாங்குகிறது என்று வைத்துக்கொள்வோம்.
அப்போது தெலுங்கு தேசம் எம்பிக்களை பாஜக பிரித்து தங்கள் பக்கம் இழுக்கலாம் . இதனால் தெலுங்கு தேசம் எம்பிக்கள் கொறடா உத்தரவை மீறி பாஜகவிற்கு வாக்களிக்கும் வாய்ப்புகள் உள்ளன. அப்படிப்பட்ட நேரத்தில் தெலுங்கு தேசத்து எம்பி சபாநாயகராக இருந்தால்.. அவர் அணி மாறி வாக்களிக்கும் எம்பிக்களை தகுதி நீக்கம் செய்ய முடியும். அதுவே பாஜக எம்பியாக இருந்தால்.. தெலுங்கு தேசம் எம்பிகளை தகுதி நீக்கம் செய்து அணி மாறும் எம்பிக்களுக்கு ஆதரவாக கூட செயல்படுவார்.
இதேதான் நிதிஷ் குமார் கட்சியிலும். இதன் காரணமாகவே சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் இருவரும் ஸ்பீக்கர் போஸ்டை பாஜக கூட்டணியில் பெறுவதற்கு தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.
இதனால் இரண்டு பேருமே சபாநாயகர் பதவி வேண்டும் என்று உறுதியாக கேட்டுள்ளனர். என்ன நடந்தாலும் எங்களுக்கு சபாநாயகர் பதவி வேண்டும் என்று உறுதியாக கேட்டு இருக்கின்றனர்.
பெரிய அமைச்சரவை எல்லாம் நாங்கள் கேட்கவில்லை.. அதனால் எங்களுக்கு சபாநாயகர் பதவி வேண்டும் என முக்கியமாக சந்திரபாபு நாயுடு உறுதியாக இருக்கிறாராம்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications